Category: Events

Call for Submissions: WMC Women’s Photography Exhibition 2014 (Postponed)

எமது முந்தைய கண்காட்சிகளின் வெற்றி மற்றும் பெறப்பட்ட சாதகமான பிரதிபலிப்புகளின் காணரமாக, பெண்களின் புகைப்படக் கண்காட்சிக்கு தமது படைப்புக்களை அனுப்பி வைக்குமாறு இலங்கையில் உள்ள அனைத்து பெண் புகைப்படக் கலைஞர்களிற்கும் பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது. பிரதானமாக ஆண்களினால் ஆதிக்கம் செலுத்தப்படும் தொழில் துறையில் பெண் புகைப்படக் கலைஞர்களின் படைப்புக்களை காட்சிப்படுத்துவதற்கான தனித்துவமான சந்தர்ப்பத்தை இந்த நிகழ்வு வழங்கியது. துறைசாராத மற்றும் நிபுணத்துவ பெண் புகைப்படக் கலைஞர்கள் என இரு தரப்பினருக்கும் தமது திறன்களை … Continue reading Call for Submissions: WMC Women’s Photography Exhibition 2014 (Postponed)

Migrant SHADOW report consultation

முதலாவது புலம்பெயர்தல் நிழல் அறிக்கை கலந்தாய்வு கூட்டமானது, 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பில் நடைபெற்றது. கம்பஹா, கண்டி, றம்புக்கனை, குருநாகல் மற்றும் ஜா-எல பகுதிகளைச் சேர்ந்த பெண் புலம்பெயர் தொழிலாளர்கள் குழுவானது, வெளிநாட்டில் பணிபுரியும் அனைத்துப் பெண்களும் எதிர்கொள்ளும் நிலைமை தொடர்பில் சிறந்த புரிந்துணர்வை பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு அம்சங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.

Trade union women meet

நாட்டின் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பெண்கள் பலர் ஒன்றுகூடி, 2014ஆம் ஆண்டு ஜுலை மாதம் 31ஆம் திகதி தொழிற்சங்கப் பெண்களின் எதிர்காலத்தில் ஆதிக்கத்தைச் செலுத்தும் பிரதான வாய்ப்புக்கள் குறித்து கலந்துரையாடின. தொழிற்சங்கப் பெண்களை பிரதிநிதித்துவம் செய்யும் முப்பத்தியெட்டு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, தமது எண்ணங்களையும், சிந்தனைகளையும் பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பிடமும், அதன் வலையமைப்புடனும் பகிர்ந்து கொண்டனர். வலையமைப்பாதல் மற்றும் அணி திரளல் தொடர்பில் பெண்களுக்கு கற்பிப்பதற்கு சட்டத்தரணி ஷாமிளா தளுவத்தையும் இந்த நிகழ்வுக்கு … Continue reading Trade union women meet

Keep hands off Civil Society

ஊடகவியலாளர்களுக்கான மாநாடுகள்,செயலமர்வுகள், பயிற்சிகள் நடத்துவதில் இருந்து அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களையும் தடுக்கும், முன்னனுமதி இன்றி ஊடக அறிக்கைகள் வெளியிட முடியாது எனவும் குறிப்பிட்டு பாதுகாப்பு அமைச்சின் செயலகத்தினால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்திற்கு எதிராக கொழும்பு புகையிரத நிலையத்திற்குமுன்னால் சிவில் சமூக அமைப்புக்கள் நேற்று போராட்டம் நடத்தின. சுற்றுநிரூபமானது அவர்களின் ஒன்றுகூடல் மற்றும் சந்தித்தல் சுதந்திரத்தைப் பாதிப்பதனால் “சிவில் சமூகத்தின் மீது கை வைக்காதே” என அரசாங்கத்திடம் வலியுறுத்தல் விடுத்தன. இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கையின் பல பகுதிகளையும் சேர்ந்த … Continue reading Keep hands off Civil Society

New Media training for women in Sri Lanka – HerSpace

2014ஆம் ஆண்டு ஜுன் மாதம் 30ஆம் திகதி கொழும்பிலே, இலங்கையில் உள்ள பெண்கள் குழுக்களுக்கான நிகழ்ச்சித் திட்டமிடல் தொடர்பான தொழில்நுட்ப பயிற்சி செயலமர்வு நடைபெற்றது. நாளாந்தம் புதிய ஊடகங்கள் உருவாகி வருகின்ற நிலையில், இணையம் ஊடாக கிடைக்கப் பெறும் நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பில் இலங்கையில் உள்ள பெண்களுக்கு கற்பிக்க வேண்டியதன் அவசியத்தை பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பு உணர்ந்தது. இந்தப் பயிற்சியை உலக பத்திரிகை ஸ்தாபனத்தின் ஆசிய பணிப்பாளர், மனோரி விஜேசேகர மற்றும் விஞ்ஞான எழுத்தாளரும், சிலோன் … Continue reading New Media training for women in Sri Lanka – HerSpace