Category: Featured

University students from New York and Colombo visit WMC

இலங்கையில் பெண்கள் உரிமைகள் சார்ந்த பிரச்சினைகளை இனங்கண்டு அடையாளப்படுத்துவதில் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் வகிபாகத்தைப் பற்றியும், பால்நிலை சமத்துவத்தை அடைந்துகொள்வதில் அதன் பொருத்தப்பாடு பற்றியும் மேலதிக கற்றல்களை மேற்கொள்ளும் நோக்கில் கொழும்பு பல்கலைக்கழகத்திலும் நியுயோர்க் பல்கலைக்கழகத்தின் கல்லடின் கலாசாலையிலும் (Gallatin School) மனித உரிமைச் சட்டத்தைக் கற்கும் மாணவர் குழாம் ஒன்று பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்புக்கு விஜயம் செய்தது. அரசியலில் பெண்கள், தொழிற்சங்கங்களில் பெண்கள், புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் பெண்களும் ஊடகமும் என்பன … Continue reading University students from New York and Colombo visit WMC

WMC Women’s Photography Exhibition 2014

பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் 30 ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட “பெண்களின் போராட்டங்கள் , பெண்களின் பெருமை” எனும் மகுடத்தின் கீழான கண்காட்சியுடன் இணைந்ததாக, 2014ஆம் ஆண்டுக்கான பெண்களின் புகைப்படக் கண்காட்சியும் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பினால் நடத்தப்பட்டது. இப்புகைப்படக் கண்காட்சி 2015 பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை கொழும்பு பொது நூலகத்தில் இடம்பெற்றது. “உழைக்கும் பெண்கள்” எனும் தொனிப்பொருளின் கீழ் துறைசார்ந்த மற்றும் துறை சாராத சுமார் 30 … Continue reading WMC Women’s Photography Exhibition 2014

WMC Short Film Competition 2014

பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் குறுந்திரைப்படப் போட்டியில் வெற்றிபெற்ற குறுந்திரைப்படங்களுக்கான விருதுகள் அவ்வமைப்பின் 30ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2015 பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெற்ற கண்காட்சியின் ஆரம்ப விழாவில் வழங்கப்பட்டன. “வேகவத் கெஹனிய” (வேகமான பெண்) என்ற குறுந்திரைப்படத்தைத் தயாரித்த ஜே.பி. குசும் ஜயவீர இவ்வாண்டுக்கான முதல் பரிசைத் தட்டிச்சென்றார். இவர் அனுராதபுர போதனா வைத்தியசாலையில் ஒரு தாதியாக கடமையாற்றுகின்றார் என்பதோடு இதுவே குறுந்திரைப்படத் தயாரிப்புக்கான அவரது கன்னி முயற்சியாக அமைந்தது. கொழும்பு கட்புல ஆற்றுகைக் … Continue reading WMC Short Film Competition 2014

IWD 2015: International Women’s Day March

2015ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் பொருட்டு இலங்கையின் சகல பாகங்களில் இருந்தும் வருகைதந்த பெண்ணுரிமைக் குழுக்கள் கொழும்பு நகர வீதிகளில் ஒன்றுதிரண்டு அதனை நிறைவேற்றின. பால்நிலை சமத்துவத்தை முழுமையாக அடைந்துகொள்ளும் நோக்கில் அரசாங்கத்தின் 100 நாள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு சுயாதீன மகளிர் ஆணைக்குழு ஒன்றைத் தாபிக்குமாறும், சகல அரசியல் அங்கங்களிலும் குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறும் மேற்படி … Continue reading IWD 2015: International Women’s Day March

IWD 2015: Celebrating the life of our founder Sunila Abeysekara

சர்வதேச மகளிர் தினத்தில் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பானது தனது 30 ஆண்டுகால செயல்நிலையைக் கொண்டாடுகின்றபடியினால் அதன் நிறுவுனரான சுனிலா அபயசேகரவின் வாழ்வைக் கொண்டாடுவதற்கான ஒரு தருணத்தை நாம் எடுத்துக் கொள்கின்றோம். ஆதாரமூலம்:Isis International ஏன் சுனிலா மார்ச் 08ஆம் திகதியை நேசித்தாள்? சுனிலா புற்று நோயின் நான்காம் படிநிலைக்கு உள்ளாகியுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பிற்பாடு அவருடன் சில பொழுதுகளைக் கழிப்பதற்காக 2003 மார்ச் 08ஆம் திகதி அளவில் நான் அவரிடம் சென்றிருந்தேன். பெண்கள் இயக்கங்கள் குறித்து எழுந்த … Continue reading IWD 2015: Celebrating the life of our founder Sunila Abeysekara

IWD 2015 Short Film Festival: Equality for women is progress for all

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்புடனும் இலங்கை குடும்பத்திட்டச் சங்கத்துடனும் இணைந்து இலங்கை மருத்துவச் சங்கமானது 2015 மார்ச் 03ஆம் திகதியன்று கொழும்பு லேடி றிஜ்வே மருத்துவமனையில் குறுந்திரைப்படம் திரையிடலும் கலந்துரையாடலும் எனும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. பால்நிலை மற்றும் பாலியல் சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகள் குறித்த சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல குறுந்திரைப்படங்கள் திரையிடப்பட்ட இந்நிகழ்வு, அரங்கில் இருந்த பார்வையாளர்கள் மத்தியில் உயிரோட்டமுள்ள கருத்தாடல் ஒன்றுக்கு வழிவகுத்தது. பல வருடங்களாக … Continue reading IWD 2015 Short Film Festival: Equality for women is progress for all

A New Sri Lanka for Women: establishing an Independent Women’s Commission

< p style=”text-align: left;”> < p style=”text-align: left;”> கோhpக்கை பெண்களுக்கு ஒரு புதிய இலங்கை: சுதந்திரமான பெண்கள் ஆணைக்குழுவை நிறுவூதல் பெண் செயல்வாதிகளாலும் பெண்கள் உரிமைக்காக வாதிடுவோராலும் 1991ஆம் ஆணடில் சுதந்திரமான பெண்கள் ஆணைக்குழு ஒன்றை நிறுவூதல் பற்றிப் பிரோpக்கப்பட்டது. அக் காலத்திலிருந்து பெண்கள் ஆணைக்குழுவை நிறுவதற்காகப் பலவாறான முன்மொழிவூகள் பின்வந்த அரசாங்கங்களினால் முன்வைக்கப்பட்டன. 2003 இல் ஐக்கிய தேசியக்கட்சி தலைமை வகித்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமானது பெண்கள் உரிமை சட்ட மூலம் … Continue reading A New Sri Lanka for Women: establishing an Independent Women’s Commission

දේශපාලනයේ ස්ත්‍රි නියෝජනය වැඩි කිරීම සඳහා ස්ත්‍රින්ගේ ඉල්ලීම

මීළඟ පළාත් පාලන ආයතන ජන්දය මිශ්ර ක්රමයකට පැවැත්වීමට නියමිත බැවින් පළාත් පාලන ආයතන ජන්ද විමසීම් (සංශෝධන) පනතට, ස්තී්රන්ට 25%ක ආසන වෙන්කිරීමක් සිදුකරන ලෙසට සංශෝධන ගෙන එන ලෙස දේශපාලන පක්ෂවලින් ඉල්ලා සිටීම. පළාත් සභා මැතිවරණවලදී නාමයෝජනා ලබාදීමේ දී හා ප්රසාද ආසන ලබාදීමේ දී ස්තී්ර පුරුෂ සමාජභාවීය සමතුලිතාවයකින් යුතුව ආසන වෙන්කරන මෙන් දේශපාලන පක්ෂවලින් ඉල්ලා සිටීම. දේශපාලනයේ … Continue reading දේශපාලනයේ ස්ත්‍රි නියෝජනය වැඩි කිරීම සඳහා ස්ත්‍රින්ගේ ඉල්ලීම

16 Days of Activism against GBV 2014 campaign

இலங்கையில் அண்மையில் நிறைவுற்ற பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாடு எனும் உலகளாவிய பிரசாரமானது, பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான மன்றத்தின் அங்கத்தவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஓர் ஒருமித்த முயற்சியாகும். 2014ஆம் ஆண்டுக்கான இந்த 16 நாட்கள் செயற்பாட்டின் போது நாட்டில் பல்வேறு நிகழ்வுகளையும் செயற்பாடுகளையும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. குறிப்பாக, அம்மன்றத்தின் அங்கத்துவ அமைப்புக்களுள் ஒன்றான பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பானது சமூக ஊடக வலையமைப்புக்கள் குறித்து மேலதிக … Continue reading 16 Days of Activism against GBV 2014 campaign

World Conference on Women’s Studies 2015

பெண்ணியல் கற்கைகள் தொடர்பான முதலாவது வருடாந்த உலக மாநாடு (WCWS) – 2015, இலங்கையின் கொழும்பு நகரில் 2015 மார்ச் மாதம் 24 முதல் 25ஆம் திகதி வரை நடைபெற உள்ளது. “பால்நிலை அடிப்படையிலான பாரபட்சத்தை இல்லாதொழித்தல்” என்பதே இம்மாநாட்டின் தொனிப்பொருளாகும். பெண்ணியல் கற்கைகள் துறையில் மேற்கொள்ளப்பட்ட கல்விசார் ஆய்வுகள் மற்றும் விடய ஆய்வுகளுடைய பெறுபேற்றின் தகவல் பரிமாற்றத்தை உத்வேகப்படுத்துவதே இம்மாநாட்டின் பிரதான நோக்கமாகும். அதிலும் குறிப்பாக, பெண்களுக்கெதிரான பாரபட்சத்தை இல்லாதொழிப்பதற்கான சாத்தியக்கூறுகளை மையப்படுத்தியதாகவே கருத்தாடல்கள் அமையவுள்ளன. … Continue reading World Conference on Women’s Studies 2015