Category: Campaigns

National Level Press Briefing

WMC ஆனது கொழும்பு சினமன் கிறான்ட் இல் 2011 பெப்ருவரி 09 ஆம் திகதி வரும் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களை அறிமுகம் செய்வதற்கான ஒரு பத்திரிகையாளர் மகாநாட்டைக் கூட்டியது. தெரிவு செய்யப்பட்ட 5 மாவட்டங்களாகிய குருணாகலை, மொனராகலை, பதுளை, காலி, மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பெண்களுக்கான நியமனங்களையும் வாக்குகளையும் அதிகரிக்கும் இலக்குடன் பெண்கள் ஊடகக் கூட்டமைப்பால் சமர்ப்பிக்கப்பட்ட பெண்களே இவர்களாவர். WMC ஆல் முன்வைக்கப்பட்ட 181 பெண்களில் 72 பேர் … Continue reading National Level Press Briefing

Media Campaign for increasing women’s representation at Local Government (2010/2011)

பத்திரிகைக் கட்டுரைகள்: உள்ளுராட்சி தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பாக பத்திரிகைக் கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. அவைகளை பின்வரும் இணைப்புக்களில் காணக்கூடியதாகவுள்ளது. http://srilankawomeninpolitics.blogspot.com/search /label/news பத்திரிகை நேர்காணல்கள்:  ராவய, லங்காதீப, திவயின, தினமின மற்றும் வீரகேசரி பத்திரிகைகள் உள்ளுராட்சி மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பான நேர்காணல்களைப் பிரசுரித்தன. தொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்கள்: 2010 செப்ரெம்பரில் ஐரிஎன், சுவர்ணவாகினி மற்றும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் என்பன உத்தேச உள்ளுராட்சி சட்ட சீர்திருத்தம் தொடர்பான  விளம்பரங்களைச் செய்தன. 2011 ஜனவரியில் பின்வரும் … Continue reading Media Campaign for increasing women’s representation at Local Government (2010/2011)

Media Campaign for increasing women’s participation at the 2010 Parliamentary Election

இலங்கை அர்சியல் களத்தில் பெண்களின் வரையறுத்த பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக விழிப்புணர்ச்சியை ஏற்படித்துவதற்கு WMC ஆனது பெருமளவிலான ஊடகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டது. அந்த வகையில் 2010 பாராளுமன்றத் தேர்தலில் பங்குபற்றுகையை அதிகரிப்பதற்காகவும்ஊடக பிரச்சாரத்தை மேற்கொண்டது. நாட்டின் சனத்தொகையில் 50% ஆக பெண்கள் இருந்தபொழுதிலும் கடந்த பாராளுமன்றத் தேர்தல் நியமனத்தில் 6.6% வழங்கப்பட்டது என்ற உண்மையை பெரிதுபடுத்தி முன்னணி சிங்கள, தமிழ், ஆங்கிலப் பத்திரிகைளில் பத்திரிகை விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டன. WMC ஆனது ஊடக பிரச்சாரத்தில் ஒரு புதுமையான தடத்தை எடுத்தது. … Continue reading Media Campaign for increasing women’s participation at the 2010 Parliamentary Election

Media Briefing on Increasing Women’s Participation at the 2010 Parliamentary Election

தேர்தலிலே பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான விடயங்கள் மீதும், குறிப்பாக  பாராளுமன்றத் தேர்தலில் பெண்களின் நியமன எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாகவும், எல்லாக் கட்சி பிரதிநிதிகளும் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் பத்திரிகையாளர் மகாநாடு ஒன்று 2010 பெப்ருவரி 17 ஆம் திகதி நடைபெற்றது. இந் நிகழ்வில் பேசிய சிலரில் மாகாணசபை உறுப்பினர் அசோக்கா லங்கதிலக்கே மற்றும் றோசி சேனநாயக்க மற்றும் மத்திய மாகாணசபை உறுப்பினர் சாந்தினி கொங்கககே என்பவர் உட்படுகின்றனர்.

Nominations and Votes for Women

இலங்கைப் பெண்கள் பாராளுமன்றத்தில் 6% க்கு குறைவாகவும், மாகாணசபைகளில் 5% க்கு குறைவாகவும் உள்ளுராட்சி சபைகளில் 2% க்கு குறைவாகவும் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிவிபரங்களானவை தென்னாசியாவில் மிகவும் குறைவாக உள்ளதுடன், இலங்கையே இப்பிராந்தியத்தில் உள்ளுராட்சிசபைகளில் பெண்களுக்கான ஒரு கோட்டா முறை அற்ற நாடாக உள்ளது. இந்தப் பிரதிநிதித்துவத்திற்கான காரணங்களில் ஒன்றாக இருப்பது என்னவெனில் பெண் வேட்பாளர்களுக்கு போதிய நியமனங்களைக் கொடுப்பதில் அரசியல் கட்சிகள் தயக்கம் காட்டுவது தான். அடுத்த உள்ளுராட்சிசபைத் தேர்தலானது விரைவில் நடைபெறவிருப்பதால் WMC ஆனது … Continue reading Nominations and Votes for Women

Bus, Sticker and White Ribbon Campaign – 16 days of Activism Against Gender-Based Violence


In commemoration of International Day for the Elimination of Violence Against Women which falls on the 25th of November, the GBV Forum has launched a 16 day campaign (25th November to 10th December) to end violence against women.   GBV Forum’s 2008 slogan “Violence Against Women Hurts Us All … ACT NOW – End Violence … Continue reading Bus, Sticker and White Ribbon Campaign – 16 days of Activism Against Gender-Based Violence


International Peace Day 2008

WMC ஆனது 2008 செப்ரெம்பர் 21ஆம் திகதி சர்வதேச சமாதான தினத்தையொட்டி பல தொலைக்காட்சி நிலையங்களும், வானொலி நிலையங்களும் ஒளி/ஒலி பரப்பிய சமாதான கீதத்தை ஒளி/ஒலிபரப்பும் இசைநிகழ்ச்சிகளுக்கு அனுசரணை வழங்கியது. பின்வரும் அலைவரிசைகள் தெரண தொலைக்காட்சி – சமாதான தின இசை நிகழ்ச்சி சுவர்ணவாஹினி – Hada Randi Paya சிங்கள வர்த்தக சேவை – FM 93.3, 106.9, 96.9 தென்றல்  FM – FM 104.8, 105.6, 107.9 ஆங்கல வர்த்தக சேவை  – … Continue reading International Peace Day 2008

Radio Spot Advertisements

WMC ஆனது அமைதி தொடர்பான ஆய்வுப்பொருட்களை ஊக்கப்படுத்தி 6 மாதக் காலப்பகுதிக்கான 30 செக்கன் குறுவிளம்பரங்களை தொடர்ச்சியாக ஒலிபரப்புச் செய்தது. இவ் விளம்பரங்களானவை நாளாந்தம் சிங்கள தேசிய சேவையில் (98.3 FM) இல் காலை 6.00 மணிச் செய்தி மற்றும் சிங்கள வர்த்தக சேவை (93.3 FM) காலை 6.30 மணிச் செய்திக்கு முன்பாக ஒலிபரப்புச் செய்யப்பட்டன.