Category: Activities Media

Vesak Banner Campaign

சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான இலங்கைப் பெண்கள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரக் கோரி 2006 மே வெசாக் மாதத்தில் ஒரு பதாதை பிரச்சாரத்தை மேற்கொண்டனர். எல்லா சுலோகங்களும் புத்தசமயம் தொடர்பானதாக இருந்ததுடன் 36 பதாதைகள் சிங்களத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தன. இவ் பதாதைகளானவை பந்தல்கள் (வெசாக்கிற்கு பயன்படுத்தப்படும் ஒளியூட்டிய கட்டமைப்புக்கள்) பிரபல்யமான கோயில்கள் மற்றும் கொழும்பு அநுராதபுரம், கட்டுநாயக்க, பொலநறுவை மற்றும் காலியிலுள்ள பெரிய சுற்றுவட்டங்கள் என்பவற்றில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

Radio Spot Advertisements to commemorate 4th Year of CFA

சிங்களம், ஆங்கிலம், தமிழிலுமான 15 நிமிட நேர குறு வானொலி விளம்பரங்கள் 12 சிரச எப்எம், Yes FM, Y-FM சக்தி எப்எம் என்பவற்றில் 2006 ஆம் ஆண்டு பெப்ருவரி 22 ஆம் திகதி ஒலிபரப்பப்பட்டது. இவ் விளம்பரங்களின் ஊடாக பின்வரும் செய்தியானது ஒலிபரப்பப்பட்டது.   “யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு வயது நான்கு. இனி யுத்தமில்லை யுத்த நிறுத்தத்தை பலப்படுத்துங்கள். சமாதானம் யுத்தமல்ல வாழ்க்கை இறப்பு அல்ல. இது பெண்கள் ஊடகக் கூட்டமைப்பினால் இலங்கைப் பெண்களின் வேண்டுகோளாகும்.”

Animated TV Advertisements

புரிந்துணர்வு ஒப்பந்தமானது பாதுகாக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து 2006 ஆம் ஆண்டு பெப்ருவரி 22, மற்றும் 23 ஆம் திகதிகளில் மூன்று மொழிகளிலும் 30 வினாடி தொலைக்காட்சி விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டன. இவ்விளம்பரங்களாவன சக்தி ரிவி, சிரச ரிவி, எம் ரிவி, சுவர்ணவாஹினி ஆகியவற்றின் மூலம் ஒளிபரப்பப்பட்டன.

“Rala Matha Andi Roo” TV Programme

சுனாமியால் பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான சிங்கள மற்றும் தமிழ் தொலைக்காட்சி நிகழச்சிகள் ஜ் அலைவரிசை மற்ரும் ரி.என்.எல் இல் 2007, 5 ஜுலையில் ஒலிபரப்பு செய்யப்பட்டன. பெண்கள் தீர்மானம் எடுப்பதில் பங்குபற்றுதல், காணியுரிமை, வீட்டு வன்முறை, பெண்களுக்கு எதிரான வன்முறை, ஜீவனோபாயம், முரண்பாடு, சமாதானம், அமைதி மற்றும் சுனாமி மீதான விடயங்கள் கலந்துரையாடலில் உட்படுத்தப்பட்டிருந்தன.

Radio Talk Shows on Tsunami Affected Women

WMC ஆனது இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன சிங்கள சேவையில் ஒரு தொடர்ச்சியான உரைக்காட்சியை 2005 ஒலிபரப்பியது. சுனாமியால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் இக்காட்சிகளில் கலந்துரையாடப்பட்டன.