Category: Documents Media

“Women say No to War”

WMC ஆனது இலங்கை ஜனாதிபதி மேன்மைதங்கிய மகிந்த ராஜபக்ஷவுக்கும், விடுதலைப்புலிகளுக்கும், பொலிஸ்மா அதிபருக்கும், மற்றும் ஆங்கில, சிங்கள மற்றும் தமிழ் செய்திப் பத்திரிகைகளுக்கும் பொறுப்பாக நடந்துகொள்ளும்படியும் இருதரப்பினரையும் கொல்லுவதை நிறுத்திக்கொள்ளும்படியும் கேட்டு இக் கூற்றை அனுப்பிவைத்திருந்தது. இக் கூற்றானது 118 பெண்களின் கையெழுத்துடன் அனுப்பட்டிருந்தது. இலங்கை செய்திப்பத்திரிகைகளான சண்டே ரைம்ஸ், லங்கா தீப, வீரகேசரியில் இக் கூற்றானது மே21 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டதுடன் 2006 ஆம் ஆண்டு 24 ஆம் திகதி டெயிலி நியூசிலும் பிரசுரிக்கப்பட்டது.

Media Release – “Defend Women’s Right to Work”

வடக்கு கிழக்கிலுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களில் பெண்கள் வேலை செய்வதில் ஏற்படுத்தப்பட்ட தடைக்கு பதிற்செயற்பாடாக 2006 ஏப்ரல் 26 ஆம் திகதி WMC ஆனது 65 பெண்களின் கைச்சாத்துடன் ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டது. இவ் கைச்சாத்துடன் கூடிய அதே அறிக்கையானது ஜனாதிபதிக்கும், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கும், வடக்கு கிழக்கு விடுதலைப்புலிகளின் தலைவர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.