Category: Publications

Forum Theatre

மேடை அரங்காற்ருவோர் குழுவானது WMC வினை அணுகி அவர்களின் அடுத்த  அரங்கத் தயாரிப்புக்காக நிதி ஆதரவு கேட்டிருந்தனர். அது 2008 மார்ச் 08 – 12 ஆம் திகதி வரை நிகழ்வதற்கு அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தது. ஆற்றுகைக்காக தெரிவு செய்யப்பட்டிருந்த தலைப்புக்களாக, குடும்ப வன்முறை மற்றும் இன முரண்பாடு என்பன அதில் உள்ளடக்கப்பட்டிருந்தன. இந்த அமைப்பின் நோக்கமானது வேறுபட்ட நோக்கங்கள் உள்ள ஆட்களை கருத்துக்களைப் பரிமாறுவதற்கு தூண்டுவதும், ஒரு பொதுவான பிரச்சினையை வேறுபட்ட கருத்துடையவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை பார்க்கத் … Continue reading Forum Theatre

YA TV – Point of View

YATV ஆனது WMC மற்றும் “சர்வதேச பெண்கள் பிரச்சாரம்” என்பவற்றின் கூட்டுழைப்புடன் புதிய தொலைக்காட்சி மற்றும் வானொலி உரைக்காட்சித் தொடரினை 2008 செப்ரெம்பரில் இருந்து அறிமுகம் செய்தது. இத் தொடரானது பெண்களின் சமூகம் மட்டிலான அனுபவங்களையும் சமூகத்திற்கான பங்களிப்புகளையும் முக்கியப்படுத்தியிருந்தது.

Radio Clips on Women’s Issues

WMC ஆனது “Kadathurawen Eha” (வெள்ளித் திரைக்கு அப்பால்) என அழைக்கப்படும் பெண்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் இரு நிமிட வானொலி ஒலிபரப்புகளை உருவாக்கியது. இவ் ஒலித்துண்டங்களானவை சிங்கள வர்த்தகசேவை வானொலி நிலையத்தில் 2007 ஆம் ஆண்டு ஒலிபரப்பப்பட்டன. இவற்றினூடக  வெளிக்கொண்டுவரப்பட்ட விடயங்கள்  பெண்களின் உரிமைகள், பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் தொந்தரவு,  சர்வதேச பெண்கள் தினம், புலம்பெயர் தொழிலாளர்கள், பெண்கள் தோட்டத்துறைப் பணியாளர்கள், அரசியலில் பெண்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் ஊடகம் போன்றன.

Billboards on the Prevention of Domestic Violence Act

ஜனவரி 2007, ஆகஸ்ட் 2007
  –  WMCஆனது இலங்கை ஒக்ஸ்பாம்  மற்றும் ‘எம்மால் முடியும்’ பிரச்சாரத்தி உதவியுடனும் நாடு பூராகவும் 8 இடங்களில் விளம்பரப்பலகைகளைக் காட்சிப்படுத்தியது. (வடக்கைத் தவிர) விளம்பரப் பலகைகளை 2007 மேயில் இருந்து மூன்று மாதங்களுக்கு காட்சிப்படுத்தியது. சிங்கள மொழி விளம்பரப் பலகைகள் கண்டி, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம், வெலிசறவிலும், தமிழ்மொழி விளம்பரப்பலகைகள் திருகோணமலை, புத்தளம், மட்டக்களப்பு, ஹட்டனிலும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. 
சிங்கள மற்றும் தமிழ் விளம்பரப் பலகைகளைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.

WMC Film Festival 2007

சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடும் முகமாக ஒரு பெண்ணிய திரைப்பட விழாவானது ரஷ்ய காலாச்சார நிலையத்தில் 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26, 27, 28 ஆம் திகதிகளில் நடைபெற்றது. அங்கே தீபா மேதாவால் நெறிப்படுத்தப்பட்ட ஏத் மற்றும் நெறிப்படுத்தப்பட்ட கலண்டர் கேள்(Calendar Girls) மற்றும் மாக்கறெதவொண்ரொற்ற (Margarethe Vontrotta) ஆல் நெறிப்படுத்தப்பட்ட ரோசன்ரா (Rosentrasse) போன்ற படங்கள் திரையிடப்பட்டன. ஒவ்வொரு படமும் திரையிடப்பட்ட பின்பு படம் குறித்த கலந்துரையாடலானது பேராசிரியர் நெலுபர் டி மெல் … Continue reading WMC Film Festival 2007

International Women’s Day 2007

மார்ச் 08, 2007 ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினமானது சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான வலைஅமைப்புக்கு சொந்தமான 40 பெண்கள் நிறுவனங்களிலிருந்தான 1,000 க்கு மேற்பட்ட இலங்கைப் பெண்களினாலே கொண்டாடப்பட்டது. மொனராகலை, பொலநறுவை, கண்டி, ஹட்டன், புத்தளம், குருணாகல, அனுராதபுரம், மகியங்கணை, வில்பத்து, ரஜங்கனி, வெலிக்கந்த, சிங்கபுர, ஹம்பாந்தோட்டை, காலி, புத்தல, பதுளை, மாத்தறை, இரத்தினபுரி, நீர்கொழும்பு, களுத்துறை, கொழும்பு, மொறட்டுவ, ஜா எல, கட்டுநாயக்க, ஏக்கல, கந்தானை, நுவரெலிய, நிட்டம்புவ, மற்றும் கந்தளாய் போன்ற இடங்களிலிருந்து வந்த … Continue reading International Women’s Day 2007

Radio Drama on the Peace Process

“வெள்ளித் திரைக்கு அப்பால்” எனும் எட்டு அங்க வானொலி நாடகமானது சிங்களத்தில் உருவாக்கி தயாரிக்கப்பட்டு சிங்கள வர்த்தக சேவையில் ஒலிபரப்பப்பட்டது.சமாதானச் செயன்முறையின் தாக்கம் தனிநபர்கள், சமூகங்கள் மீது எவ்வாறு இருந்தன என்பதைபற்ரியதாகும். குறிப்பாக எவ்வாறு சமாதானமானது மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்தது என்பதையும், யுத்தத்தின் பின்விளைவுகளையும் கலந்துரையாடியது. இதன் பிரதியானது ககத்தலின் ஜெயவர்த்தன (Kathline Jayawardena) அவர்களால் எழுதப்பட்டதுடன் மஹிந்த அல்கம (Mahinda Algama) வினால் தயாரிக்கப்பட்டது.

International Day for the Elimination of Violence Against Women 2006

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாது ஒழிப்பதற்கான சர்வதேச தினமானது 2006 நவம்பர் 28 ஆம் திகதி.இதை கொழும்பில் கொண்டாடும் முகமாக ஒரு சிறு நாடக விழாவும், இசை நிகழ்ச்சியும் நடாத்தப்பட்டது. இவ்விழாவின் கருப்பொருளாக இருந்தது ‘வன்முறைகளில்லாத நாளை’ என்பதாகும். இவ் விழாவானது பொதுமக்களுக்கு கட்டணமின்றி திறந்துவிடப்பட்டிருந்ததுடன், WMC ஆனது பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்தும் விழிப்புணர்வை பொதுமக்களிடையே எழுப்புவதற்கு இச் சந்தரப்பத்தை பயன்படுத்திக்கொண்டது.

Preparation of Migrant Rights Alternative Report

மே 2006-2008
 : 2006 மேயிலும், நவம்பரிலும் இரு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அரச அதிகாரிகளுடன் குடிபெயர்ந்தோர் உரிமை விடயங்களில் பணியாற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள்கள் இணைந்து குடிபெயர்ந்தோர் உரிமைகள் குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டிய, அத்துடன் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய, தேவையான வகைத் தரவுகளைத் தீர்மானிப்பதற்காக, இக் கூட்டம் இடம்பெற்றது. இலங்கை அரசாங்கமானது 1996 இல் ஏற்று அங்கீகரித்து, 2003 ஆம் ஆண்டில் அமுல்படுத்துவதற்கு ஏற்றுக்கொண்ட எல்லா குடிபெயர்ந்த தொழிலாளர்கள், மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களது உரிமைகளைப் … Continue reading Preparation of Migrant Rights Alternative Report