Category: Activities New Media

Increasing women’s political representation: a discussion on current reforms

அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறைமை சீர்திருத்தங்கள் குறித்துப் பேசப்படும் சமகாலப் பின்னணியில், பாராளுமன்றத்தில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் குறித்து கலந்துரையாடும் பொருட்டு தேர்தல் முறைமை சீர்திருத்தங்களில் நிபுணத்துவம் பெற்ற கார் வொல்லனுடனான (Kare Vollan) ஆலோசனை அமர்வொன்று நேற்று இடம்பெற்றது. வெறும் முன்மொழிவுகளுக்கு அப்பால் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பை உறுதிப்படுத்துகின்ற வகையிலான சீர்திருத்தங்களை முதன்முறையாக இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார். இதன் பின்னணியில், இலங்கையின் உள்ளூர், மாகான மற்றும் … Continue reading Increasing women’s political representation: a discussion on current reforms

University students from New York and Colombo visit WMC

இலங்கையில் பெண்கள் உரிமைகள் சார்ந்த பிரச்சினைகளை இனங்கண்டு அடையாளப்படுத்துவதில் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் வகிபாகத்தைப் பற்றியும், பால்நிலை சமத்துவத்தை அடைந்துகொள்வதில் அதன் பொருத்தப்பாடு பற்றியும் மேலதிக கற்றல்களை மேற்கொள்ளும் நோக்கில் கொழும்பு பல்கலைக்கழகத்திலும் நியுயோர்க் பல்கலைக்கழகத்தின் கல்லடின் கலாசாலையிலும் (Gallatin School) மனித உரிமைச் சட்டத்தைக் கற்கும் மாணவர் குழாம் ஒன்று பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்புக்கு விஜயம் செய்தது. அரசியலில் பெண்கள், தொழிற்சங்கங்களில் பெண்கள், புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் பெண்களும் ஊடகமும் என்பன … Continue reading University students from New York and Colombo visit WMC

WMC Women’s Photography Exhibition 2014

பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் 30 ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட “பெண்களின் போராட்டங்கள் , பெண்களின் பெருமை” எனும் மகுடத்தின் கீழான கண்காட்சியுடன் இணைந்ததாக, 2014ஆம் ஆண்டுக்கான பெண்களின் புகைப்படக் கண்காட்சியும் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பினால் நடத்தப்பட்டது. இப்புகைப்படக் கண்காட்சி 2015 பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை கொழும்பு பொது நூலகத்தில் இடம்பெற்றது. “உழைக்கும் பெண்கள்” எனும் தொனிப்பொருளின் கீழ் துறைசார்ந்த மற்றும் துறை சாராத சுமார் 30 … Continue reading WMC Women’s Photography Exhibition 2014

IWD 2015: International Women’s Day March

2015ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் பொருட்டு இலங்கையின் சகல பாகங்களில் இருந்தும் வருகைதந்த பெண்ணுரிமைக் குழுக்கள் கொழும்பு நகர வீதிகளில் ஒன்றுதிரண்டு அதனை நிறைவேற்றின. பால்நிலை சமத்துவத்தை முழுமையாக அடைந்துகொள்ளும் நோக்கில் அரசாங்கத்தின் 100 நாள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு சுயாதீன மகளிர் ஆணைக்குழு ஒன்றைத் தாபிக்குமாறும், சகல அரசியல் அங்கங்களிலும் குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறும் மேற்படி … Continue reading IWD 2015: International Women’s Day March

A New Sri Lanka for Women: establishing an Independent Women’s Commission

< p style=”text-align: left;”> < p style=”text-align: left;”> கோhpக்கை பெண்களுக்கு ஒரு புதிய இலங்கை: சுதந்திரமான பெண்கள் ஆணைக்குழுவை நிறுவூதல் பெண் செயல்வாதிகளாலும் பெண்கள் உரிமைக்காக வாதிடுவோராலும் 1991ஆம் ஆணடில் சுதந்திரமான பெண்கள் ஆணைக்குழு ஒன்றை நிறுவூதல் பற்றிப் பிரோpக்கப்பட்டது. அக் காலத்திலிருந்து பெண்கள் ஆணைக்குழுவை நிறுவதற்காகப் பலவாறான முன்மொழிவூகள் பின்வந்த அரசாங்கங்களினால் முன்வைக்கப்பட்டன. 2003 இல் ஐக்கிய தேசியக்கட்சி தலைமை வகித்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமானது பெண்கள் உரிமை சட்ட மூலம் … Continue reading A New Sri Lanka for Women: establishing an Independent Women’s Commission

16 Days of Activism against GBV 2014 campaign

இலங்கையில் அண்மையில் நிறைவுற்ற பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாடு எனும் உலகளாவிய பிரசாரமானது, பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான மன்றத்தின் அங்கத்தவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஓர் ஒருமித்த முயற்சியாகும். 2014ஆம் ஆண்டுக்கான இந்த 16 நாட்கள் செயற்பாட்டின் போது நாட்டில் பல்வேறு நிகழ்வுகளையும் செயற்பாடுகளையும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. குறிப்பாக, அம்மன்றத்தின் அங்கத்துவ அமைப்புக்களுள் ஒன்றான பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பானது சமூக ஊடக வலையமைப்புக்கள் குறித்து மேலதிக … Continue reading 16 Days of Activism against GBV 2014 campaign

Selected photographers: WMC Women’s photography exhibition 2014

எமது நடுவர் குழாத்துடனான பரந்துபட்டதொரு தேர்வுமுறையின் பிற்பாடு, WMC இன் 2014ஆம் ஆண்டுக்குரிய பெண்களின் புகைப்படக் கண்காட்சிக்கான புகைப்படப்பிடிப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் 30 ஆண்டுகால செயல்நிலையைக் கொண்டாடும் முகமாக நடத்தப்படவுள்ள WMC இன் 30 ஆண்டு நிறைவுக் கண்காட்சியான, இலங்கையில் பெண்களுக்கான உரிமைசார்ந்ததொரு சட்டகத்தைக் கொண்டுவரும் பொருட்டு நடைபெற்ற பெண்களின் போராட்டங்களையும் அடைவுகளையும் முக்கியத்துவப்படுத்தும் கண்காட்சியுடன் சேர்த்து, இப்புகைப்படக் கண்காட்சியும் நடைபெறவுள்ளது. பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் 30 வருடப் பூர்த்தியை முன்னிட்டு … Continue reading Selected photographers: WMC Women’s photography exhibition 2014

Call for Submissions: WMC Women’s Photography Exhibition 2014 (Postponed)

எமது முந்தைய கண்காட்சிகளின் வெற்றி மற்றும் பெறப்பட்ட சாதகமான பிரதிபலிப்புகளின் காணரமாக, பெண்களின் புகைப்படக் கண்காட்சிக்கு தமது படைப்புக்களை அனுப்பி வைக்குமாறு இலங்கையில் உள்ள அனைத்து பெண் புகைப்படக் கலைஞர்களிற்கும் பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது. பிரதானமாக ஆண்களினால் ஆதிக்கம் செலுத்தப்படும் தொழில் துறையில் பெண் புகைப்படக் கலைஞர்களின் படைப்புக்களை காட்சிப்படுத்துவதற்கான தனித்துவமான சந்தர்ப்பத்தை இந்த நிகழ்வு வழங்கியது. துறைசாராத மற்றும் நிபுணத்துவ பெண் புகைப்படக் கலைஞர்கள் என இரு தரப்பினருக்கும் தமது திறன்களை … Continue reading Call for Submissions: WMC Women’s Photography Exhibition 2014 (Postponed)

Keep hands off Civil Society

ஊடகவியலாளர்களுக்கான மாநாடுகள்,செயலமர்வுகள், பயிற்சிகள் நடத்துவதில் இருந்து அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களையும் தடுக்கும், முன்னனுமதி இன்றி ஊடக அறிக்கைகள் வெளியிட முடியாது எனவும் குறிப்பிட்டு பாதுகாப்பு அமைச்சின் செயலகத்தினால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்திற்கு எதிராக கொழும்பு புகையிரத நிலையத்திற்குமுன்னால் சிவில் சமூக அமைப்புக்கள் நேற்று போராட்டம் நடத்தின. சுற்றுநிரூபமானது அவர்களின் ஒன்றுகூடல் மற்றும் சந்தித்தல் சுதந்திரத்தைப் பாதிப்பதனால் “சிவில் சமூகத்தின் மீது கை வைக்காதே” என அரசாங்கத்திடம் வலியுறுத்தல் விடுத்தன. இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கையின் பல பகுதிகளையும் சேர்ந்த … Continue reading Keep hands off Civil Society