Category: Publications

IWD 2015: International Women’s Day March

2015ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் பொருட்டு இலங்கையின் சகல பாகங்களில் இருந்தும் வருகைதந்த பெண்ணுரிமைக் குழுக்கள் கொழும்பு நகர வீதிகளில் ஒன்றுதிரண்டு அதனை நிறைவேற்றின. பால்நிலை சமத்துவத்தை முழுமையாக அடைந்துகொள்ளும் நோக்கில் அரசாங்கத்தின் 100 நாள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு சுயாதீன மகளிர் ஆணைக்குழு ஒன்றைத் தாபிக்குமாறும், சகல அரசியல் அங்கங்களிலும் குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறும் மேற்படி … Continue reading IWD 2015: International Women’s Day March

16 Days of Activism against GBV 2014 campaign

இலங்கையில் அண்மையில் நிறைவுற்ற பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாடு எனும் உலகளாவிய பிரசாரமானது, பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான மன்றத்தின் அங்கத்தவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஓர் ஒருமித்த முயற்சியாகும். 2014ஆம் ஆண்டுக்கான இந்த 16 நாட்கள் செயற்பாட்டின் போது நாட்டில் பல்வேறு நிகழ்வுகளையும் செயற்பாடுகளையும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. குறிப்பாக, அம்மன்றத்தின் அங்கத்துவ அமைப்புக்களுள் ஒன்றான பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பானது சமூக ஊடக வலையமைப்புக்கள் குறித்து மேலதிக … Continue reading 16 Days of Activism against GBV 2014 campaign

Winners: WMC Short Film Competition 2014

பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு நடத்திய குறுந்திரைப்படப் போட்டியின் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த வருடத்திற்கான போட்டியில் மிக அதிகமான போட்டியாளர்கள் பங்குபற்றினர். இப்போட்டிக்காகத் தமது திரைக்கதைப் பிரதிகளை அனுப்பிவைத்த அனைவரையும் நாம் பாராட்டும் அதேவேளை, 2014ஆம் ஆண்டுக்கான போட்டியின் வெற்றியாளர்களை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம். வெற்றியாளர்களுக்கான பரிசில்கள் 2015 பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள ‘பெண்களின் போராட்டங்கள், பெண்களின் பெருமை’ எனும் தொனிப்பொருளின் கீழ் WMC நடத்தும் கண்காட்சியின் அங்குரார்பண நிகழ்வில் வழங்கப்படும். இக்கண்காட்சியை 2015 பெப்ரவரி 11 … Continue reading Winners: WMC Short Film Competition 2014

Selected photographers: WMC Women’s photography exhibition 2014

எமது நடுவர் குழாத்துடனான பரந்துபட்டதொரு தேர்வுமுறையின் பிற்பாடு, WMC இன் 2014ஆம் ஆண்டுக்குரிய பெண்களின் புகைப்படக் கண்காட்சிக்கான புகைப்படப்பிடிப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் 30 ஆண்டுகால செயல்நிலையைக் கொண்டாடும் முகமாக நடத்தப்படவுள்ள WMC இன் 30 ஆண்டு நிறைவுக் கண்காட்சியான, இலங்கையில் பெண்களுக்கான உரிமைசார்ந்ததொரு சட்டகத்தைக் கொண்டுவரும் பொருட்டு நடைபெற்ற பெண்களின் போராட்டங்களையும் அடைவுகளையும் முக்கியத்துவப்படுத்தும் கண்காட்சியுடன் சேர்த்து, இப்புகைப்படக் கண்காட்சியும் நடைபெறவுள்ளது. பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் 30 வருடப் பூர்த்தியை முன்னிட்டு … Continue reading Selected photographers: WMC Women’s photography exhibition 2014

Shortlisted Scripts: WMC Short Film Competition 2014

பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் (WMC) குறுந்திரைப்படப் போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்ட திரைக்கதைப் பிரதிகளில் பின்வருவன தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட சகல குறுந்திரைப்படத் தயாரிப்பாளர்களும் தமது 2 நிமிட குறுந்திரைப்படங்களை தயவுசெய்து 2015 ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு அனுப்பி வைக்கவும். தேர்ந்தெடுக்கப்பட்ட திரைக்கதைப் பிரதிகள் • தினூஷா சமன்மாலி – நெத்மானய • ஜே.பி.கே. ஜயவீர – துலனய • ஆசிரி உபேக்ஸா ஜயசிங்க – தூவிலி ஆதரின் • அருநிகா நிர்மானி பெரேரா – லக்பிம … Continue reading Shortlisted Scripts: WMC Short Film Competition 2014

Call for Submissions: WMC Women’s Photography Exhibition 2014 (Postponed)

எமது முந்தைய கண்காட்சிகளின் வெற்றி மற்றும் பெறப்பட்ட சாதகமான பிரதிபலிப்புகளின் காணரமாக, பெண்களின் புகைப்படக் கண்காட்சிக்கு தமது படைப்புக்களை அனுப்பி வைக்குமாறு இலங்கையில் உள்ள அனைத்து பெண் புகைப்படக் கலைஞர்களிற்கும் பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பு அழைப்பு விடுத்தது. பிரதானமாக ஆண்களினால் ஆதிக்கம் செலுத்தப்படும் தொழில் துறையில் பெண் புகைப்படக் கலைஞர்களின் படைப்புக்களை காட்சிப்படுத்துவதற்கான தனித்துவமான சந்தர்ப்பத்தை இந்த நிகழ்வு வழங்கியது. துறைசாராத மற்றும் நிபுணத்துவ பெண் புகைப்படக் கலைஞர்கள் என இரு தரப்பினருக்கும் தமது திறன்களை … Continue reading Call for Submissions: WMC Women’s Photography Exhibition 2014 (Postponed)