Activities SLWPD

சர்வதேச பெண்கள் தினம் 2007

மார்ச் 08, 2007 ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினமானது சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான வலைஅமைப்புக்கு சொந்தமான 40 பெண்கள் நிறுவனங்களிலிருந்தான 1,000 க்கு மேற்பட்ட இலங்கைப் பெண்களினாலே கொண்டாடப்பட்டது. மொனராகலை, பொலநறுவை, கண்டி, ஹட்டன், புத்தளம், குருணாகல, அனுராதபுரம், மகியங்கணை, வில்பத்து, ரஜங்கனி, வெலிக்கந்த, சிங்கபுர, ஹம்பாந்தோட்டை, காலி, புத்தல, பதுளை, மாத்தறை, இரத்தினபுரி, நீர்கொழும்பு, களுத்துறை, கொழும்பு, மொறட்டுவ, ஜா எல, கட்டுநாயக்க, ஏக்கல, கந்தானை, நுவரெலிய, நிட்டம்புவ, மற்றும் கந்தளாய் போன்ற இடங்களிலிருந்து வந்த...

Continue reading »

வாராந்த சமாதானப் பவனி லிப்ரன் சுற்றுவட்டத்தில்

ஆகஸ்ட் 4 – ஒக்ரோபர் 4 வரை புதன்கிழமைகளிலே WMC உட்பட்ட பெண்கள் மனிதநேய மற்றும் மனிதஉரிமை நிறுவனங்களால் ஒழுங்குசெய்யப்பட்ட சமாதானப் பவனி லிப்டன் சுற்றுவட்டத்தில் இடம்பெற்றது. உள்ளுர் மற்றும் சர்வதேச சனசமூகங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து நாட்டில் நடைபெறும் யுத்தம் மற்றும் அரசியல் கொலைகளுக்கு எதிராக ஒன்றுதிரண்டனர். 
புகைப்படங்களைப் பார்க்க இங்கே...

Continue reading »

சர்வதேச சமாதான நாளை ஒட்டிய பெண்களின் சமாதானப் பவனி

செப்ரெம்ர் 21 
சர்வதேச சமாதான தினத்தையொட்டி பெண்கள் சமாதானப் பவனியானது கொழும்பு லிப்டன் சுற்றுவட்டாரத்தில் 2006 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 21 ஆம் திகதி இடம்பெற்றது. மட்டக்களப்பு, பொலநறுவை, கண்டி, புத்தளம், குருணாகலை, பலாங்கொடை, கலேவெல, காலி, பத்தல, பதுளை, ஹற்றன், மகியங்கணை, ஜா எல, மற்றும் கொழும்பு உட்பட தீவின் பல பாகங்களில் இருந்தும் பெண்கள் ஒன்றுகூடினர். இச்சமாதானப் பவனியானது சர்வதேச சமாதான தினத்தை நினைவு கூருவதற்காகவும் அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கையில் சமாதானத்திற்கான...

Continue reading »

கெபிதிக்கொலாவையில் பொதுமக்கள் மீதான தாக்குதலைப் பெண்கள் கண்டிக்கிறார்கள்

2006 ஜுன் 15 ஆம் திகதி கெபிதிக்கொலாவையில் பயணிகள் பஸ் ஒன்றின் மீது விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கிளைமோர் தாக்குதலை WMC வை ஒரு அங்கத்தவராகக் கொண்ட சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான இலங்கைப் பெண்கள் அமைப்பானது கண்டித்தது அனைத்து ஊடக நிலையங்களுக்கும் ஊடகக் அறிக்கை அனுப்பியது. இது எல்லா ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டபோதிலும் உண்மையில் 2006 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 24 ஆம் திகதி சனிக்கிழமை டெயிலி மிரர் பிரசுரித்ததுடன், 2006 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 25...

Continue reading »

Katunayake Peace Vigil

The SLWPD held a peace vigil on 20th February 2006 at 1.30 am on the Negombo Road at the turn off to the Katunayake Airport. The demonstrators showed their strong support for peace in Sri Lanka, to the Government and LTTE delegations that were leaving to Geneva for the Peace Talks. More than 200 women...

Continue reading »

ஜனாதிபதிக்கும் எல்ரிரிஈக்குமான வேண்டுகோள்

சமானதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான இலங்கைப் பெண்கள் மேன்மை தங்கிய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும்,  விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களுக்கும் ஒரு உறுதியான யுத்த நிறுத்தத்திற்கு சமாதானப் பேச்சுக்களை மீளத்தொடங்குமாறும் ஒரு வேண்டுகோள் மனுவைச் சமர்ப்பித்தனர். இதன் ஒரு பிரதியானது ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் அரசியல் துறைத்தலைவர் S.P. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும் ஊடகநிறுவனங்களுக்கும் அனுப்பி...

Continue reading »

நோர்வே மத்தியஸ்தர் யாழ்ப்பாணம் விஜயம் செய்தபொழுது சமாதானப் பவனி

2006 ஜனவரி 23 ஆம் திகதி சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான இலங்கைப் பெண்கள் அமைப்பானது நோர்வேஜிய மத்தியஸ்தர் எரிக் சொல்ஹைம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த நேரத்தில் வவுனியாப் நகரில் தமது இரண்டாவது சமாதானப் பவனியை நடத்தினர். ஆனாலும் ஜனவரி 21 ஆம் திகதி சனிக்கிழமை அடம்பனில் நடைபெற்ற தாக்குதலின் விளைவாக ஏற்பட்ட பாதுகாப்புக்காரணங்களின் நிமித்தம் அவர்கள் தமது சமாதானப்பவனியை லிப்டன் சுற்றுவட்டாரத்தில் நடாத்த நிர்ப்பந்திக்கப்பட்டனர். 300க்கு மேற்பட்ட பெண்கள் குருநாகலை, புத்தளம், கண்டி, பொலநறுவை, அனுராதபுரம் போன்ற வேறுபட்ட...

Continue reading »

“வாழ்க்கை இறப்பு அல்ல; சமாதானம் யுத்தமல்ல” – பிரசாரம்

2005 டிசம்பரில் சமாதானத்திற்கும் ஜனநாயத்திற்குமான இலங்கைப் பெண்கள் (SLWPD), எனும் பெண்கள் அமைப்பின் குழுவொன்று WMC வின் உதவியுடன் “வாழ்க்கை இறப்பு அல்ல; சமாதானம் யுத்தமல்ல” என்ற கருப்பொருளில் ஒரு சமாதானப் பிரச்சாரத்தை இலங்கை அரசாங்கமும் எல்ரிரிஈயும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் வன்முறைகள் ஆரம்பிப்பதற்கும், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பாதிப்பும் முடிவுக்கும் கொண்டுவர வேண்டுமென பிரச்சாரத்தில் ஈடுபட்டது. ஒவ்வொரு மாதமும் இச்சமாதானப் பிரச்சாரம் தொடர்ந்ததால் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் கொழும்பு லிப்ரன் (லிப்டன்) சுற்று...

Continue reading »

Media work

You’re most welcome to work with us as a writer, blogger, radio maker or filmer. WMC works from a women’s perspective, covering women’s and gender issues. We offer support for your work and opportunities to get your work published, through weblogs, our magazines or other outlets.

Campaigns and events

We also invite you to support our campaigns and events. Do you like to organise activities? Or assist our work with women and women organisations in Sri Lanka?

Get involved now

Women and Media Collective
56/1 Sarasavi Lane
(off Castle Street)
Colombo 8
phone: + 94-11-2690201 / 5632045 / 5635900
wmcsrilanka@gmail.com