Category: Photos

WMC condemns killing of Lasantha Wickrematunge

லசந்த விக்கிரமதுங்கவின் கொலையை (08.01.2009) பெண்கள் ஊடகக் கூட்டமைப்பு கண்டிக்கிறது. சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையை கண்டித்தும், ஊடக சுதந்திரத்தின் அழுத்தத்திற்கு எதிராகவும் ஜனவரி 09 ஆம் திகதி ஒழுங்கு செய்யப்பட்ட மறியல் போராட்டத்தில் பெண்கள் ஊடகக் கூட்டமைப்பு பங்குபற்றியது. அத்துடன் கொலைசெய்யப்பட்ட ஊடவியலாளரின் மரண ஊர்வலத்தில் ஜனவரி 12 ஆம் திகதி பங்குபற்றிய பெண்கள் ஊடகக் கூட்டமைப்பு, ஊடகத்திற்கு எதிரான அண்மைய தாக்குதல்களைக் கண்டித்து ஊடக அறிக்கைச் ஒன்றையயும் வெளியிட்டது.

International Human Rights Day 2008

WMC ஆனது ஏனைய அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து மனித உரிமைகள் தினத்தின் நினைவாக 2008 இல் லிப்ரன் சுற்றுவட்டத்தில் ஒரு பேரணியில் பங்குபற்றியிருந்தது. பேரணியைத் தொடர்ந்து பொது நூலகத்திலே ஒரு கூட்டம் இடம்பெற்றது. WMC ஆனது ஏனைய பெண்கள் நிறுவனங்களுடன் இணைந்து பிரபலமானவரும் மனித உரிமைகள் ரீதியாக மதிக்கப்படும்  சட்டத்தரணியுமான திரு.  J.C வெலியமுன அவர்களின் வதிவிடத்தில் மேற்கொள்ளப்பட்ட கிரனைற் தாக்குதல் தொடர்பாக  03.10.2008 அன்று ஒரு கண்டனக் கடிதத்தை வெளியிட்டது. 
 
கடிதத்தைப் பார்க்க இங்கே … Continue reading International Human Rights Day 2008

FLICT Partner Day

WMC ஆனது ஒக்ரோபரில் பேருவளையிலும், நவம்பரில் கண்டியிலும் நடைபெற்ற FLICT பங்காளர் தினத்தில் பிரதிநிதித்துவம் செய்திருந்தது. பங்குபற்றுனர்கள் தமது அனுபவங்களை ஏனைய பங்காளர் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டதுடன், எதிர்கால செயற்திட்டங்களையும் உருவாக்கியிருந்தனர்.

Exhibition of Women’s Activism

“அப்போதிருந்து இப்போது வரைக்கும் அவளது பாதச் சுவடுகள்” இலங்கையில் பெண்கள் இயக்கத்தின் வரலாற்றின் மைல் கற்களை எடுத்துக்காட்டும் பெண்கள் நிறுவனங்களால் அவற்றின் விருத்திக்காக செய்யப்பட்டோரின் பங்களிப்புக்களை எடுத்துக்காட்டும் இக்கண்காட்சியானது WMC வினால் 2008 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 27 ஆம், 28 ஆம் திகதியில் நடத்தப்பட்டது. இக்கண் காட்சியானது பெண்களும் அரசியலும், ஊடகத்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம், சர்வதேச பெண்கள் தினக் கொண்டாட்டங்கள், சமாதானத்திற்காக பெண்களின் குரல்கள், பெண்களுக்கு எதிரான வன்முறை போன்ற விடயங்களையும் பொருள்களாக கொண்டிருந்தது.

People’s SAARC

தென்னாசிய மக்கள் ஒன்று கூடுகை  People’s Assembly (People’s SAARC 2008) ஆனது ஜுலை 18, 19, 20 ஆம் திகதிகளில் கொழும்பில் விகாரமாதேவி பூங்காவில் நடைபெற்றது. 1993 இலிருந்து பிராந்திய ஒத்துழைப்பிற்கான தென்னாசிய சங்கத்தின் அரச தலைவர்களுடைய கூட்டத்திற்கு சமாந்தரமாக, தென்னாசியா பூராகவுமான, ஒழுங்கானதும் தொடர்ந்து நடைபெறுவதுமான கூட்டுழைப்புக் கலந்துரையாடல் தந்திரோபாயப்படுத்தல், மற்றும் செயற்பாட்டுச் செயன்முறையானது 1993 இலிருந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. WMC ஆனது மக்கள் பேரணியை ஒருங்கிணைப்புச் செய்ததுடன், இக்கூட்டத்தின் இறுதி நாளிலே … Continue reading People’s SAARC