Category: Photos/Videos Politics

Consultation meeting on the CEDAW Shadow Report

WMC ஆனது CENWOR இல் 2009 ஆகஸ்ட் 03 ஆம் திகதி சீடோ அறிக்கை மீதான ஒரு கலந்துரையாடல் கூட்டத்தை வசதிப்படுத்தியது. இக் கூட்டத்திற்கு கொழும்பு மற்றும் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த WMC வலைப்பின்னல் நிறுவனங்களிலிருந்து 50க்கு மேற்பட்டவர்கள் பங்குபற்றினர். கூட்டத்திலே 2002-2009 நிழல் அறிக்கையில் தொகுக்கப்பட்ட அதிகாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது. அதிகளவான பதில்கள் பங்குபற்றுனர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டதுடன், அவர்களால் கொடுக்கப்பட்ட சிபார்சுகள் எல்லாம் இறுதி அறிக்கையில் இணைக்கப்படுவதற்காக குறிப்பெடுக்கப்பட்டன. WMC ஆனது 2002-2009 சீடோ நிழல் அறிக்கையை … Continue reading Consultation meeting on the CEDAW Shadow Report

Celebrating Women in Politics

WMC ஆனது மாகாணசபை 2008/2009 தேர்தலைத் தொடர்ந்து பொறுப்புக்குத் தெரிவு செய்யப்பட்ட பெண்களைச் சந்தித்து வாழ்த்துக் கூறியது. இது இலங்கை மன்றக் கல்லூரியில் (SLFI) 2009 ஜுன் 03 ஆம் திகதி நடைபெற்றது. மேல்மாகாண சபை, வடமேல் மாகாணசபை, சப்பிரகமுவ மற்றும் வடமத்திய மாகாணத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 11 பெண்கள் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். புகைப்படங்களைப் பார்க்க இங்கே சுடுக்குக.

Meeting with Women’s Groups

2009 ஆம் ஆண்டு ஜுன் 24 ஆம் திகதி இலங்கையின் பல பெண்கள் நிறுவனங்களிலிருந்தான பெண் செயற்பாட்டாளர்கள் WMC ஆல் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தில் பங்குபற்றியிருந்தனர். மொத்தமாக 30 பெண்கள் பல நிறுவனங்களிலிருந்து இக் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தனர். இக் கூட்டமானது ஒரு கலந்துரையாடல் வடிவத்தில் எல்லாப் பங்குபற்றுனர்களும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவைகளை எதிர்கொள்வதற்கான தந்திரோபாயங்கள் குறித்து தமது எண்ணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

DAWN – Regional Training Institute

இளம் பெண்ணிலைவாதிகளுக்கான இரண்டாவது பயிற்சி நிறுவகமானது தென் மற்றும் தென்கிழக்காசியாவுக்கான, புதிய யுகத்திற்கான  பெண்களின் மாற்று அபிவிருத்தியினால் ; (DAWN),  பிலிப்பைன்ஸ் மனிலாவில் 2009 ஏப்ரல் 16 – 22ஆம் திகதி வரை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பெண்கள் ஊடகக் கூட்டமைப்பைச் சேர்ந்த குமுதினி சாமுவேல் மற்றும் நிலுஷா ஹேமசிறி இதில் பங்குபற்றியிருந்தனர். குமுதினி சாமுவேல் (DAWN),  தென்னாசிய ஒருங்கிணைப்பாளர் பயிற்சியிலே வளவாளராகப் பங்குபற்றியிருந்தார். இப்பயிற்சியானது ஆசிய கண்டத்திலிருந்தான இளம் பெண் பங்குபற்றுனர்களுக்கு எமது உள்ளுர் மற்றும் பிராந்திய … Continue reading DAWN – Regional Training Institute

International Human Rights Day 2008

WMC ஆனது ஏனைய அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து மனித உரிமைகள் தினத்தின் நினைவாக 2008 இல் லிப்ரன் சுற்றுவட்டத்தில் ஒரு பேரணியில் பங்குபற்றியிருந்தது. பேரணியைத் தொடர்ந்து பொது நூலகத்திலே ஒரு கூட்டம் இடம்பெற்றது. WMC ஆனது ஏனைய பெண்கள் நிறுவனங்களுடன் இணைந்து பிரபலமானவரும் மனித உரிமைகள் ரீதியாக மதிக்கப்படும்  சட்டத்தரணியுமான திரு.  J.C வெலியமுன அவர்களின் வதிவிடத்தில் மேற்கொள்ளப்பட்ட கிரனைற் தாக்குதல் தொடர்பாக  03.10.2008 அன்று ஒரு கண்டனக் கடிதத்தை வெளியிட்டது. 
 
கடிதத்தைப் பார்க்க இங்கே … Continue reading International Human Rights Day 2008

FLICT Partner Day

WMC ஆனது ஒக்ரோபரில் பேருவளையிலும், நவம்பரில் கண்டியிலும் நடைபெற்ற FLICT பங்காளர் தினத்தில் பிரதிநிதித்துவம் செய்திருந்தது. பங்குபற்றுனர்கள் தமது அனுபவங்களை ஏனைய பங்காளர் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டதுடன், எதிர்கால செயற்திட்டங்களையும் உருவாக்கியிருந்தனர்.