WMC ஆனது CENWOR இல் 2009 ஆகஸ்ட் 03 ஆம் திகதி சீடோ அறிக்கை மீதான ஒரு கலந்துரையாடல் கூட்டத்தை வசதிப்படுத்தியது. இக் கூட்டத்திற்கு கொழும்பு மற்றும் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த WMC வலைப்பின்னல் நிறுவனங்களிலிருந்து 50க்கு மேற்பட்டவர்கள் பங்குபற்றினர். கூட்டத்திலே 2002-2009 நிழல் அறிக்கையில் தொகுக்கப்பட்ட அதிகாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது. அதிகளவான பதில்கள் பங்குபற்றுனர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டதுடன், அவர்களால் கொடுக்கப்பட்ட சிபார்சுகள் எல்லாம் இறுதி அறிக்கையில் இணைக்கப்படுவதற்காக குறிப்பெடுக்கப்பட்டன. WMC ஆனது 2002-2009 சீடோ நிழல் அறிக்கையை எழுதி 2009 – 2010 இல் சீடோ குழுவிடம் சமர்ப்பிப்பதற்காக அதனை எழுதுவதை வசதிப்படுத்தி வருகின்றது. இவ் அறிக்கையானது மீளாய்வு செய்யப்பட்டு அதனது இறுதி சமர்ப்பண வடிவத்திற்காக தயார்பெற்று வருகின்றது.