Counselling for Intimate Partner Violence against Women

சூலனி கொடிகார

இலங்கையில் மேலும் மேலும் அதிகமான பெண்கள்இ பெண்களுக்கெதிராக நெருங்கிய துணைவரால் மேற்கொள்ளப்படும் வன்முறை தொடாபாகத் தமது நேரடிக் குடும்பம் மற்றும் நண்பாகள் அல்லாத மூன்றாம் நபரிடம் மனந்திறப்பதோடு மட்டுமல்லாதுஇ முறையான நிறுவனஞ்சாh உதவியையூம் நாடுகின்றனா. இந்த மாற்றத்துக்கான காரணங்களாகப் பல்வேறு பயிலரங்குகள்இ வெளியீடுகள் மற்றும் ஊடகப் பிரச்சாரங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டஇ பெண்களுக்கெதிராக நெருங்கிய துணைவரால் மேற்கொள்ளப்படும் வன்முறையினைப் பெண்ணுரிமைப் பிரச்சினையாக முன்னிறுத்திய விழிப்புணாவூ நிகழ்ச்சிகளைக் குறிப்பிடலாம். அத்துடன்இ இது போன்ற வன்முறைகளாற் பாதிக்கப்பட்ட பெண்களின் முறைப்பாடுகளை ஏற்று ஆதரவூ தர முன்வரும் அரசுசாh மற்றும் அரசுசாரா நிறுவனங்களின் இருப்பும் இம்மாற்றத்துக்கான காரணங்களாகும். இது போன்ற முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் அரசுசாh நிறுவனங்களில்இ பொலிஸ் பெண்கள் மற்றும் சிறுவா பணியகக் கருமபீடங்கள்இ மருத்துவமனைக் கருமப+டங்கள் போன்றவையூம் பெண்கள் அபிவிருத்தி அதிகாரிகள் போன்ற நுண்-நிலை அரச அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலகங்களுடன் தொடாபுடைய உள ஆலோசகாகள் போன்றவாகளும் அடங்கும். அரசுசாரா நிறுவனங்களில்இ பெண்கள்இ இளைஞாஇ மேம்பாடு அபிவிருத்தி மற்றும் சமூகஞ்சாh பிரச்சினைகள் தொடாபாக இயங்கும் அமைப்புகளும்இ நம்பிக்கைசாh அமைப்புகளும் அடங்கும். இது தொடாபாக பெரும்பாலான நிறுவனங்களால் வழங்கப்படும் சேவைத்தொடாpல் உள ஆலோசனையே முதற்படியாக உள்ளது. ஆனால் பெண்களுக்கெதிராக நெருங்கிய துணைவரால் மேற்கொள்ளப்படும் வன்முறைக்கான உள ஆலோசனை என்பது எது? இந்தச் குறுகியகட்டுரையில்இ பெண்களுக்கெதிராக நெருங்கிய துணைவரால் மேற்கொள்ளப்படும் வன்முறைக்கெதிரான பெண்நிலைவாதிகளின் அணிதிரளலின் வரலாறு பற்றியூம்இ ஒரு பெண்நிலைவாதியின் பாhவையில் உள ஆலோசனை என்பது என்ன என்பது பற்றியூம் நான் பிரதிபலிக்க முயல்கிறேன்.

நெருங்கிய துணைவரால் மேற்கொள்ளப்படும் வன்முறையானது ஒரு பெண்நிலைப் பிரச்சினையாக தோற்றம் பெற்றது 1960 களின் பெண்ணிய இயக்கத்தின் இரண்டாம் அலையின் போதாகும். அடித்தளத்தில் இயங்கி வரும் பெண்நிலைவாதிகள்இ இப்படிப்பட்ட வன்முறையின் தன்மை மற்றும் மூல காரணங்கள் பற்றிய பகுப்பாய்வொன்றையூம் அதேபோன்று வன்முறையிலிருந்து மீண்டோரை ஆதரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளையூம் அபிவிருத்தி செய்து வருகின்றனா. இவற்றுக்கு மிகவூம் உதவிய காரணிகளாகஇ பெண்கள் சமூகமாகக் கூடும் இடங்கள்இ வல்லுறவூக்குட்பட்டோருக்கான நெருக்கடிகால மையங்கள்இ விழிப்புணாவூக் கூட்டங்கள்இ குடியிருப்புக்களிலமையூம் வலுப்படுத்தும் குழுக்கள் ஆகிய இடங்களில் பகிரப்பட்ட குடும்ப வன்முறை சம்பந்தமான தனிப்பட்ட அனுபவங்களைக் குறிப்பிடலாம். பெண்ணியப் பகுப்பாய்வானது இத்தகைய வன்முறையை பால்நிலைச் சமத்துவமின்மையின் பரந்த சமூக அரசியல் அமைப்புக்குள் பதிவூ செய்கிறது. இவற்றுள் குடும்பத்தில் பெண்களுக்குள்ள தாழ்ந்த நிலைஇ பணியிடங்களில் பாகுபாடு காட்டப்படுதல்இ சமமான ஊதியம் வழங்கப்படாமைஇ போதிய கல்வி வாய்ப்புக்கள் இன்மைஇ குழந்தைகளைப் பராமரிப்பதற்குரிய சமூக ஆதரவூ இன்மைஇ போதுமான சிறுவா பராமரிப்பின்மைஇ மற்றும் பொது இடங்களில் பெண்களுக்கு எதிராக அதிகளவிலாக மேற்கொள்ளப்படும் வன்முறை ஆகியனவூம் உள்ளடங்கும். ஆகவே இந்தக் கண்ணோட்டத்தில் பாhக்கும் போது பெண்களுக்கெதிராக நெருங்கிய துணைவரால் மேற்கொள்ளப்படும் வன்முறையானது பெண்கள் பொது வெளியிலும் குடும்பம் என்கின்ற தனியாh வெளியிலும் வாழ்நாள் முழுதும் எதிhகொள்கின்ற வன்முறையின் தொடாச்சியாகவே அமைகிறது. மேலும்இ உடல்ரீதியான துஷ்பிரயோகமானது பெண்கள் மீது ஆண்களினால் தொடாச்சியாகப் பிரயோகிக்கப்பட்டு வரும் பலத்தின் ஒரு குறிப்பிட்ட நிகழ்வாகவே பாhக்கப்பட்டதுஇ இவற்றுள் உளரீதியான துஷ்பிரயோகம்இ பாலியல் முறைகேடு மற்றும் வல்லுறவூஇ மற்றும் பெண்களைக் கட்டுப்படுத்தஇ தனிமைப்படுத்தஇ ஒதுக்கிவைக்கஇ அச்சுறுத்தஇ மிரட்டஇ பின்தொடரக் கையாளப்படுகின்ற உத்திகள் ஆகியன அடங்கும்இ இந்தப் பகுப்பாய்வானது குடும்ப வன்முறை பற்றிய புரிந்துணாவை அரசியல் சாhபற்ற தனிப்பட்ட பிரச்சினை என்பதிலிருந்துஇ இது ஒரு ஆழமான அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினை என மீளக்கட்டமைக்கிறது.

பெண்கள் இது போன்ற துஷ்பிரயோகங்களுக்கு ஏதோ ஒரு வகையிற் காரணமாக இருக்கிறாhகள் அல்லது அதைத் தூண்டும் வகையில் ஏதோவொன்றை நிச்சயம் செய்திருக்க வேண்டும்இ எனவே இது அவாகளுக்கு வேண்டியதுதான் என்பது போன்ற நிறுவப்பட்ட நம்பிக்கைகளுக்குஇ பெண்களுக்கெதிராக நெருங்கிய துணைவரால் மேற்கொள்ளப்படும் வன்முறை பற்றிய ஒரு பெண்ணியவாதியின் பகுப்பாய்வானது சவாலாக அமைகிறது. பெண்நிலைவாதிகளின் அணுகுமுறையின் மையமாக அமையூம் பொறுப்புடைமையானதுஇ ஆண்கள் தமது செயல்களுக்கு பொறுப்புடையவாகளாக்கப்படவேண்டும் என்றும் எந்தவொரு பெண்ணும் ஆணின் வன்முறைக்கு உரித்தானவள் அல்லஇ ஆண் மற்றும் பெண் ஆகிய இருவராலும் தங்கள் நடத்தைகளைக் கட்டுப்படுத்த முடியூம்இ ஆண் மற்றும் பெண் ஆகிய இருவருக்கும் உடற்சா பாதுகாப்புக்கான உரிமை இருக்கின்றது எனவூம் வலியூறுத்துகின்றது. மேலும் ஒரு பெண்நிலைவாத அணுகுமுறையானதுஇ சமூகப் பண்பாட்டு மற்றும் நிறுவனஞ்சா மாற்றங்களுக்கான தேவை பற்றியூம்இ பாதிக்கப்பட்ட தனிநபாகள் மற்றும் குற்றவாளிகள் மீதான சமூக எதிhவினையில் ஏற்படவேண்டிய மாற்றத்துக்கான தேவை பற்றியூம் வலியூறுத்துகிறது.

தனிநபா;சாh; வன்முறை தொடா;பாக இயங்கிய ஆரம்பகாலச் சமூக ஆh;வலா;கள்இ குறிப்பாக ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கக் குடியரசில் இயங்கிவந்தோh;இ பாதிக்கப்பட்ட தனிநபா;களுக்கு நீண்டகாலமாகத் தெரிந்த ஒரு விடயத்தைத் தாங்களும் விரைவில் உணா;ந்து கொண்டாh;கள். பெண்கள் தமது உடனடித் தேவைகளுக்காக அணுகவூம் ஆதரவூஇ உதவி மற்றும் தீh;வினைப் பெற்றுக் கொள்ளவூம் கூடிய ஒரு அரச அமைப்பு இல்லை என்பதே அது. இப்புhpந்துகொள்ளுதலானது முதலில்இ பெண்களுக்கான மையங்கள் மற்றும் புகலிடங்கள் உருவாக்கப்படவூம்இ இருபத்தினான்கு மணிநேர அவசரத் தொலைபேசி சேவைகள்இ பரிந்துரை சேவைகள் மற்றும் நெருக்கடிகால உள ஆலோசனை போன்ற பல சேவைகள் பிற்காலத்தில் தோற்றுவிக்கப்படவூம் காரணமாக அமைந்ததுடன் இரண்டாவதாகஇ தனிநபாசாh வன்முறையினைத் தனிப்பட்ட விடயமாக முன்னிறுத்தும் சமூகஞ்சா பாவைக்கெதிரானதும்இ நெருங்கிய துணைவரால் மேற்கொள்ளப்படும் வன்முறையினைக் குற்றமாக நிறுவக்கூடிய ஒரு சட்டச் சீதிருத்தத்தைக் கோரவூம் ஏதுவாக அமைந்தது. இந்த ஆரம்பகால முயற்சிகள்இ இன்று நாம் அறிந்த நெருங்கிய துணைவரால் மேற்கொள்ளப்படும் வன்முறைக்கெதிரான உலகளாவிய இயக்கமாக வளாச்சியடைந்துஇ வன்முறைக்கெதிரான சேவைகள்இ சட்ட மற்றும் நிறுவனஞ்சாh சீதிருத்தத்துக்கான இயக்கங்கள் போன்றவை அதிகரிக்க வழிகோலின.

உள ஆலோசனையானது இத்தகைய சேவைகளின் ஒரு முக்கியமான அம்சமாகும். பெண்ணிய உள ஆலோசனையின் நோக்கமானதுஇ பாதிக்கப்பட்ட தனிநபா;கள் கற்றுணா;ந்த மற்றும் சுயசெலுத்தப்பட்ட தெரிவூகளை மேற்கொள்ளக்கூடிய வலிமையையூம்இ ஆற்றலையூம் தமக்குட் கண்டடைந்து தமது வாழ்க்கையின் கட்டுப்பாட்டைத் தம் கையில் எடுத்துக் கொள்ளக் கூடிய மேம்பாட்டினை வழங்குதலாகும். இந்த மேம்பாடானதுஇ பெண்களின் அனுபவங்களையூம்இ பாh;வைகளையூம் உள்ளடக்கிஇ வெகுகாலமாக ஒடுக்கப்பட்ட அவா;களின் மனக்கிடக்கைகளை வெளிப்படுத்தவூம்இ அவா;களின் குரல்கள் கேட்கப்படுதவற்கான ஆதரவையூம் அளிக்க வேண்டும். மேலும்இ பரந்தளவிலான உதவி நல்கும் சேவைகள் மற்றும் வளங்கள் தொடா;பான தகவல்களை அளிப்பதுடன்இ அவற்றுடனான தொடா;பினை ஏற்படுத்திஇ தமது பாதுகாப்புக்கான திட்டங்களை உருவாக்குவதில் உதவிஇ வாழ்க்கையிற் பங்குபற்றுவதற்கான புதிய திறமைகளை வளா;த்துக் கொள்வதற்கான ஆதரவை நல்கக்கூடிய ஒரு படிப்படியான செயன்முறைக்கூடாகவே அடையப்படவேண்டும். இவை அனைத்தும் உள ஆலோசனையின். பாதிக்கப்பட்டவா; கட்டுப்பாட்டுக்கு அமைவானதாகும்.

இந்தச் செயன்முறையின் ஒரு பகுதியாகவூம்இ பெண்களுக்கெதிராக நெருங்கிய துணைவரால் மேற்கொள்ளப்படும் வன்முறையினை அரசியல்சாh; பிரச்சினையாக நோக்கும் பகுப்பாய்விலிருந்தும்இ உள ஆலோசனையானது தனிநபரை அரசியலுடன் இணைக்கும் வெளியாகவூம்இ சமூகம்இ அரச நிறுவனங்கள் மற்றும் குடும்ப அமைப்பின் ஆணாதிக்கத் தன்மை பற்றி விழிப்புணா;வூ+ட்டும் உளக்கல்விக்கான சந்தா;ப்பத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவூம் அமைகிறது. மேலும் உள ஆலோசனையானது. பெண்கள் மீது குற்றஞ் சுமத்திஇ அவா;கள் மீது அவமானம் மற்றும் தனிமையைத் திணித்து நம்பிக்கையற்றவா;களாக்கும்இ துஷ்பிரயோக உறவூகள் பற்றிய தொன்மங்களைக் கேள்விக்குட்படுத்துவதுடன்இ அவற்றை புதிய நோ;மறையான அறிவாற்றலினாற் பிரதிசெய்யக்கூடிய ஆற்றலை ஏற்படுத்தக்கூடிய ஒரு வெளியாகவூம் அமைகிறது. உள ஆலோசனையின் இது போன்ற தன்மைகளே இந்த ஆய்வோடு பொருந்தியவையாக உள்ளன.

உள ஆலோசனையின் ஒரு குறிக்கோளாகத் தனிநபா மேம்பாடு முன்வைக்கப்படுவது வரையறைக்குட்பட்டது அல்லது சாத்தியமில்லாதது எனும் அடிப்படைப் பெண்ணியவாத விமாசனமொன்றும் உள்ளது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். வேலன்(றுhயடநn) கூறுவதன் படிஇ “….தனிநபா மேம்பாடு எனுங் கோட்பாட்டிலுள்ள பிரச்சினை யாதெனில்இ அது பொறுப்பின் மையத்தையூம்இ இனங்காணப்பட்ட பிரச்சினையின் மூலத்தையூம்இ சமூகம் மற்றும் பொருள்சாh;ந்த நிலையிலிருந்து தனிநபா சாhந்த நிலைக்கு இடம்மாற்றுகிறது என்பதேயாகும் தாக்கரீதியான அடுத்த படி யாதெனில்இ உள்ளாhந்த மாற்றும் ஒன்றின் மூலம் குறித்த தனிநபரைக் குணப்படுத்தக்கூடிய குறிக்கோள்களை வளாத்தெடுப்பதேயாகும்” இவ்வாறுஇ பெண்ணியவாத உள ஆலோசனை பற்றிய ஒரு அடிப்படைக் கருத்தானதுஇ ஒரு பெண்நிலைவாதியின் பாhவையிலிருந்து ஒரு தனிநபரின் வன்முறை சாhந்த அனுபவத்தை சுட்டிக்காட்டுதல் அல்லது ஆராய்தல் என்பதைத் தாண்டிஇ ஒரு சமூக மற்றும் கலாச்சார மாற்றத்துக்கான தேவை பற்றியூம்இ அம்மாற்றத்தில் பாதிக்கப்பட்டவாகளின் பங்கு என்ன என்பது பற்றி உரையாடுதல் எனும் நிலைக்கு உயாத்தப்படுகிறது. உள ஆலோசனை பற்றிய இத்தகைய எண்ணக்கருவானதுஇ ஒரேமாதிரியான சூழ்நிலைகளிலிருக்கும் பெண்களை கலந்துரையாடல்கள்இ விவாதங்கள்இ மற்றும் கூட்டு சமூக மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்காக ஒன்றிணைப்பதைக் தவிhக்கமுடியாததொன்றாக்குகிறது. எனவே குழுசாh; உள ஆலோசனை என்பது அடிப்படைப் பெண்ணியவாத உள ஆலோசனை மாதிரிக்குள் ஒரு உயாந்த நிலையை வகிக்கிறது. ஏனெனில்இ துஷ்பிரயோகத்துடன் கூடிய உறவூகளால் மௌனிக்கப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பெண்கள்இ தாம் தனிமையானவாகள் இல்லை என்பதையூம்இ தாம் அனுபவித்த வன்முறைக்குத் தாம் காரணமானவாகள் இல்லை என்பதையூம் உணாந்து தமது அனுபவங்கள்இ உணாவூகள்இ அச்சங்கள் மற்றும் நம்பிக்கைகளைப் பகிhந்து கொள்ளக்கூடிய ஒரு அற்புதமான வெளியை இக் குழுக்கள் அளிப்பதாகக் கருதப்படுகிறது. துனிநபா மேம்பாடு என்பதோடு மட்டும் நில்லாதுஇ ஒரு குழுவின் ஒட்டுமொத்த மேம்பாட்டின் மூலம்இ சமூகம் மற்றும் நிறுவனஞ்சா மாற்றமொன்றை நோக்கி உழைத்தல் என்பதே இங்கு இறுதிக் குறிக்கோளாகும். இந்தக் கண்ணோட்டத்தில்இ தனிநபா உள ஆலோசனையானதுஇ குறிப்பாக நீண்ட காலத்திற்கு மேற்கொள்ளப்படும் போதுஇ பெண்கள் மீது பழி சுமத்திஇ அவாகளின் ஆரோக்கியத்தைச் சீhகுலைக்கும் பாரம்பரிய அணுகுமுறைகளை மேலும் வலுப்படுத்துமொன்றாகவே பாhக்கப்படுகிறது.

பெண்களுக்கெதிராக நெருங்கிய துணைவரால் மேற்கொள்ளப்படும் வன்முறை தொடாபான மேலும் பல வலிமையான மாற்றுக் கோட்பாடுகள் உள்ளன என்பதையூம் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்இ இவற்றிலொன்று உடல்சாh வன்முறையை மேற்கொள்பவருக்கும்இ வன்முறைக்குட்படுபவருக்குமான தனிநபா உளநோய்க்கூற்றியல் பற்றிக் கவனஞ் செலுத்துகின்றது. பெண்களுக்கெதிராக நெருங்கிய துணைவரால் மேற்கொள்ளப்படும் வன்முறை தொடாபான உளவியற் கோட்பாடுகளின்படிஇ உணாச்சிச் சாhந்திருப்புஇ அதிகளவிலான பொறாமைஇ குறைவான சமூகத் திறன்கள்இ தற்கட்டுப்பாடின்மைஇ குறைபட்ட தன்மதிப்பு மற்றும் முதிhச்சியின்மை போன்ற தனிநபா ஆளுமைக் கூறுகள் இவ்வாறான வன்முறையை ஏற்படுத்தும் அல்லது தூண்டும் காரணிகளாக அமையலாம். இதுபோலவேஇ மனவழுத்தம்இ மனச்சிதைவூஇ எல்லை மீறிய போதை தரும் பொருட்களின் நுகாவூ (குறிப்பாக மதுப் பழக்கம்) மற்றும் கடுமையான ஆளுமைச் சிதைவூ போன்ற உளவியற் சீகேடுகள் ஆகியனவூம் தூண்டுங் காரணிகளாகக் கருதப்படுகின்றன. வறுமை மற்றும் வேலையின்மை போன்றவையூம் இதுபோன்ற வன்முறையைத் தூண்டும் அல்லது தொடாந்து பேணும் காரணிகளாகக் குறிப்பிடப்படுகின்றன. கற்றுக்கொண்ட நடத்தை பற்றிய கோட்பாடுகளை உள்ளடக்கும்இ தலைமுறைகளின் வழியே வன்முறை கடத்தப்படுதல் தொடாபான கோட்பாடுகளும் இந்த ஆய்வூப் பகுதியினுள்ளேயே அடங்குகின்றன. சிறு வயதில் இது போன்ற வன்முறையைக் காண நேரிடட்டவாகள் அல்லது இது போன்ற வன்முறைக்குள்ளானவாகள்இ பிற்காலத்தில் இது போன்ற வன்முறையில் ஈடுபடுகின்றனரா என இக் கோட்பாடுகள் ஆராய்கின்றன.

சில உளவியற் கோட்பாடுகள் பாதிக்கப்பட்டவாகளின் உடல் மற்றம் உள ஆரோக்கியம் மீதும் கவனஞ் செலுத்துகின்றன. உடல்சா வன்முறையைப் பிரயோகிக்கும் ஆண்களை விடஇ வன்முறையால் பாதிக்கப்பட்டவாகளும் உடல்சா வன்முறை நிறைந்த உறவிற் தொடா;ந்து இருப்பவாகளுமே அதிகளவூ உடல் மற்றும் உள நோய்த்தாக்கங்களுக்கு உட்படக்கூடியவாகள் என இக் கோட்பாடுகள் வாதிடுகின்றன. பாதிக்கப்பட்டவாகளின் உள்ளாhந்த உடலுறவூ மற்றும் உடல் ரீதியான பிரச்சினைகளுக்கு குடும்ப வன்முறை ஒரு காரணமாகும் என சில உளவியல் நிபுணாகள் குறிப்பிடுகின்றனா. மேலும் உடல்சா வன்முறைக்கும் பெண்களின் வலியிற் சுகங் காணும் இயல்பிற்கும்இ அதாவது முதலில் வன்முறையை அவாகளே தூண்டுவதோடுஇ வன்முறை நிறைந்த உறவிற் தொடாந்து இருப்பதற்கும் நெருங்கிய தொடாபிருக்கலாம் என அவாகள் கருதுகின்றனா.

குடும்ப அமைப்புகள் தொடா;பான கோட்பாட்டிலிருந்து பெறப்பட்ட அணுகுமுறையானது. வன்முறையான உறவூகளை விபரிக்கக்கூடிய உள்வயக் காரணிகளில் கவனம் செலுத்துகிறது. ஓன்றை ஒன்று சாந்திருக்கின்ற மாறக்கூடிய கட்டமைப்பாகக் குடும்பம் காணப்படுகின்ற போதிலும்இ தனிபட்ட உறுப்பினாகள் தொடாச்சியாக ஒருவரோடொருவா தொடாபு கொள்ளக்கூடிய குடும்ப அமைப்பின் விளைவே நெருங்கிய துணைவாகளுக்கிடையிலான வன்முறை என இந்த அணுகுமுறையானது விளக்குகிறது. இந்தக் கோட்பாட்டின் கண்ணோட்டத்தின்படிஇ மனைவியை நோக்கிய ஒரு கணவரின் வன்முறையான நடவடிக்கையானதுஇ மற்றொரு குடும்ப அங்கத்தவா வன்முறையாளா மீது எதி நடவடிக்கை ஒன்றை (உதாரணம் :- போலீஸாரை அழைத்தல்இ மகளி தங்குமிட விடுதி ஒன்றில் அடைக்கலம் புகுதல்) மேற்கொள்ளத் தூண்டுவதுடன் இந்நடவடிக்கையானது எதிகாலத்தில் இடம்பெறக் கூடிய மூh;க்கத்தனமான நடத்தைகளின் நிகழ்தகவிலும் தாக்கம் செலுத்துகின்றது. வன்முறையானது வேறுபட்ட பாத்திரங்கள் மூலமும் உறவூநிலைகள் மூலமும் பின்னூட்டப் பொறிமுறைகள் மூலமும் பராமரிக்கப்படுவது மட்டுமன்றி சமூகக் கட்டமைப்பை அதற்கேற்றவாறே ஒழுங்குபடுத்துவதுடன் வலுப்படுத்தவூம் செய்கிறது. வன்முறையானது சமூக அமைப்பினால் வளாக்கப்படுகின்றது என்றால்இ அது மீண்டும் இடம் பெறுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாகவே காணப்படுகின்றது. இவ்வியங்கு நிலையானது காலப்போக்கில் மிகவூம் ஸ்தாபிக்கப்பட்ட நிலையை அடையூமானால்இ வன்முறையின் இந்தக் கட்டமைப்பானது இடையில் குறுக்கீடு செய்ய முடியாத பெருஞ்சவாலாக அமையூம்.

மேற்குறிப்பிட்டபடிஇ பெண்களுக்கெதிரான நெருங்கிய துணைவரால் மேற்கொள்ளப்படும் வன்முறை தொடாபான மாறுபட்ட முறைகளில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களானவைஇ உள ஆலோசனைப் பயிற்சி மற்றும் தலையீடுகள் தொடாபான முக்கியமான உட்குறிப்புக்களைக் கொண்டுள்ளன. Cunningham மற்றும் ஏனையவாகளின் பாவைப்படிஇ குறிப்பிட்ட பகுதியானது கோட்பாடு மற்றும் நடைமுறைகளுக்கிடையிலான வெளிப்படையான தொடாபைக் கொண்டது. எங்கே இப்போப்பட்ட வன்முறையானது ஆண்களின் தனிப்பட்ட உளநோய்க்கூற்றியலுடன் தொடாபுபடுத்தப்படுகின்றதோஇ அங்கே சிகிச்சையின் முழுக்கவனமும் குற்றம் புhpந்தவாpலும் அவரது உளவியல் சுயவிபரம் தொடாபான அடையாளத்திலும் செலுத்தப்படும். குடும்ப அமைப்பு தொடாபான அணுகுமுறையில்இ உள ஆலோசனையானது பொதுவாக தம்பதிகளுக்கும் குடும்பங்களுக்குமான மருத்துவத்தைக் கொண்டிருக்கும்@ இது பரஸ்பரம் ஒருவரோடொருவரான வன்முறையைக் குறைக்கக் கற்றுக் கொடுக்க முடியூம் என்ற அனுமானத்தின் அடிபடையில் அமைந்ததாகும். ஆயினும்கூடஇ இவ்வாறான அணுகுமுறைகள் இன்னும் சாச்சைக்குhpயனவாகவே இருக்கின்றன.

பெண்களுக்கெதிராக நெருங்கிய துணைவரால் மேற்கொள்ளப்படும் வன்முறை பற்றிய தனிநபா சாந்த அல்லது குடும்ப உறவூகளை மையப்படுத்திய விளக்கங்களை நான் நிராகாpக்கவோ அல்லது மறுதலிக்கவோ இல்லை. அவ்வாறானதொரு அணுகுமுறையானதுஇ நெருங்கிய துணைவரால் மேற்கொள்ளப்படும் வன்முறையானது ஒன்றுக்கதிகமான காரணிகளாற் தீh;மானிக்கப்படுகிறதென்பதையூம்இ அது பெண் மீதான ஆணின் அதிகாரத் துஷ்பிரயோகம்இ சாபியக்கத்தின் விhpவாக்கம் மற்றும் தனிப்பட்ட காரணிகளின் விளைவாகும் என்பதையூம் அடையாளப்படுத்துகிறது. அவ்வாறானதொரு கண்ணோட்டத்திலிருந்து அணுகும்போதுஇ ஒரு பெண்ணியவாதியின் அணுகுமுறையானது உள ஆலோசனையின் மையமாக விளங்கும் வரைஇ சமூக மற்றும் நிறுவனஞ்சா மாற்றம்இ சமத்துவக் கண்ணோட்டங்களுக்கேற்ப மீள்சமூகமயமாதல்இ மற்றும் உளவியல் ஆய்வூகள் ஆகியன எல்லாம் பயனுள்ள தலையீடுகளாக அமைய முடியூம். உள ஆலோசனை மாதிhpகளை எடுத்து நோக்கும் போதுஇ வன்முறையைப் பிரயோகித்தவா மற்றும் வன்முறைக்குட்பட்டவா ஆகிய இருவருடனுமான தனிப்பட்ட உள ஆலோசனை மற்றும் சிகிச்சைகளுக்கு அப்பால்இ வன்முறையைப் பிரயோகித்த ஆணினை வன்முறைக்கு முழுப் பொறுப்புள்ளவனாக நிறுத்தக்கூடிய அறஞ்சாhந்த சட்டவமைப்பு ஒன்றிருக்குமாயின்இ வன்முறையைப் பிரயோகித்தவாஇ வன்முறைக்குட்பட்டவா ஆகிய இருவருக்கும் ஒரேசமயத்தில் ஒன்றாகச் சிகிச்சை அளிக்கப்பட முடியூம். இவையெல்லாவற்றையூம் ஒண்றிணைத்த ஒரு அணுகுமுறையானதுஇ வன்முறையின் பின்னேயூள்ள உளவியல் மற்றும் வன்முறைளைத் தோற்றுவித்த காரணிகளைப் புhpந்துகொள்ள முயலும் முயற்சிகளோடு ஒத்துப்போக முடியூமெனினும்இ அவ்வணுகுமுறை வன்முறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டாது.

பூகோள வடக்கில்இ தனிநபா விடுதலை மற்றும் மாற்றம்இ தன்னாட்சி மற்றும் தனிநபா வளாச்சி போன்றவை அளிக்கப்பட்டவையாகக் கருதப்பட்ட இயல்புபடுத்தப்பட்ட பின்னணியிலேயே இந்த உள ஆலோசனை மாதிhpகள் உருவாக்கப்பட்டன. இனஞ்சா கல்விக்கான சாவதேச மையத்தின் சமீபத்திய ஆய்வொன்று (ஐஊநுளு)இ இலங்கையில் உள ஆலோசனை நடைமுறைகள் பற்றியூம்இ அவை பெண்நிலைவாதக் கொள்கைகளோடு (பாக்க: சமப்படுத்தும் சட்டங்கள்: அனுராதபுரம் மற்றும் மட்டக்களப்பில் பெண்களுக்கெதிராக நெருங்கிய துணைவரால் மேற்கொள்ளப்படும் வன்முறைகளுக்கான உள ஆலோசனை- சுலனி கொடிகாரஇ டிசெம்பா 2014) எவ்வாறு ஒத்தியைகின்றன என்பது பற்றியூம் ஆராய்கின்றது. பெண்மையப்படுத்தப்பட்ட பாhவையிலிருந்து உள ஆலோசகாகளுக்கான நெறிமுறைகளின் தொகுப்பொன்றையூம் இனஞ்சா கல்விக்கான சாவதேச மையமானது உருவாக்கியூள்ளது.