DAWN – Regional Training Institute

இளம் பெண்ணிலைவாதிகளுக்கான இரண்டாவது பயிற்சி நிறுவகமானது தென் மற்றும் தென்கிழக்காசியாவுக்கான, புதிய யுகத்திற்கான  பெண்களின் மாற்று அபிவிருத்தியினால் ; (DAWN),  பிலிப்பைன்ஸ் மனிலாவில் 2009 ஏப்ரல் 16 – 22ஆம் திகதி வரை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பெண்கள் ஊடகக் கூட்டமைப்பைச் சேர்ந்த குமுதினி சாமுவேல் மற்றும் நிலுஷா ஹேமசிறி இதில் பங்குபற்றியிருந்தனர். குமுதினி சாமுவேல் (DAWN),  தென்னாசிய ஒருங்கிணைப்பாளர் பயிற்சியிலே வளவாளராகப் பங்குபற்றியிருந்தார். இப்பயிற்சியானது ஆசிய கண்டத்திலிருந்தான இளம் பெண் பங்குபற்றுனர்களுக்கு எமது உள்ளுர் மற்றும் பிராந்திய அனுபவங்களையும் எண்ணங்களையும் பகிர்ந்துகொள்வதற்கும் உலகளாவிய பகிர்ந்தளிப்புக்கும் சந்தர்ப்பம் அளித்தது. இந் நிகழ்ச்சித்திட்டமானது நிகழ்வுகள் நிறைந்ததாக இருந்ததுடன், பல பங்குபற்றுனர்கள் பல செயற்பாட்டு முறைகளையும் பல வகையான நிகழ்ச்சித்திட்டங்களையும் பிரச்சார முறைகளையும் தமது நாடுகளிலும், தமது பிரதேசங்களிலும் தமது வேலையில் பயன்படுத்த எடுத்துச் செல்ல உதவியளித்தது.