Encounter group-project

பெப்ருவரி, மார்ச்
 – 
WMC ஆல் முன்னெடுத்துச் செல்லப்பட்டு ஒருங்கிணைக்கப்படும் இவ் உத்தேச எதிர்கொள்ளல் குழுவானது அம்மக்கள் தமது எண்ணங்களை முன்வைக்கவும், கலந்துரையாடவும், முரண்படவும் இணக்கங்காணவும் ஒரு வழியை உருவாக்குவதுடன் (முரண்பாட்டின் உண்மையான அசலான மரியாதைமுறையிலான, தன்னிலை ரீதியிலான  யதார்தங்களின் அனுபவங்களையும், எண்ணங்களையும்) நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்காக ஒக்ரோபர் மாதத்திலிருந்தே ஆரம்பக் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. எதிர்கொள்ளும் குழுவானது மக்களுக்கு, எந்த இடத்திலும் வரவேற்கப்படாத அவர்களது அமுக்கப்பட்ட யதார்த்தங்களை, அவர்கள் குரல் எழுப்பக்கூடிய பாதுகாப்பான சூழலை, இந்த எதிர்கொள்ளல் குழு மக்களுக்கு பெற்றுக்கொடுத்ததுடன்  அவைகளைத் தீர்ப்பதற்கும், அவைகளை வேறு ஒரு யதார்த்தத்திற்கு நகர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டு பெற்றுக்கொடுத்தது. எதிர்கொள்ளல் குழுக்களானவை தசாப்தகாலமாக இன மற்றும் சிவில் யுத்தங்களோடு சம்பந்தமட்ட நாடுகளில் உலகம் பூராகவும் நடத்தப்பட்டிருந்தது. இது மிகவும் தாக்கவிளைவுள்ள முரண்பாட்டு இணக்கத்திற்கான அகிம்சை அணுகுமுறை என நிரூபிக்கப்பட்டுள்ளது. நேர்காணல்கள் ஊடாக 12 பெண்கள் தெரிவு செய்யப்பட்டனர். இக் குழுவானது எதிர்கொள்ளல் குழுக்களின் கருத்துநிலையை அறிமுகப்படுத்தும் ஒரு பயிற்சிப்பட்டறையில் பங்குபற்றியதுடன், 2008 பெப்ருவரி மற்றும் மார்ச் மாதங்களில் 6 1.5 மணிநேர எதிர்கொள்ளல் குழுக்கள் இடம்பெற்றன. இவ் குழுவானது வாரத்திற்கு ஒரு தடவையாக 6 வாரங்கள் கூடியது. பங்குபற்றுனர்கள் ஏனைய கூட்டங்களைப் போல் தாம் மிகவும் சௌகரியத்தை உணர்ந்துகொண்டதாகவும்,  தமது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்கக்கூடியதாக இருந்தது எனவும் தெரிவித்தனர்.