Fairness prevails for the murder and rape of FTZ woman worker says women’s groups

2007ஆம் ஆண்டு இளம் பெண் ஒருவரை கொலை செய்தமை தொடர்பில் 2014ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 3ஆம் திகதி நீர்கொழும்பு வைத்தியசாலையைச் சேர்ந்த மருத்துவருக்கு உயர் நீதிமன்றம் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

மருத்துவ அறிக்கைகளுக்கு அமைய கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தை பணிபுரிந்து வந்த சாமிளா திசாநாயக்க (23) பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, மாடியில் இருந்து தள்ளப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். நீர்கொழும்பு வைத்தியசாலையின் வைத்தியர் இந்திக்க சுதர்சன பலகே என்பவர் வைத்தியசாலையின் மேல் மாடியில் இருந்து இவரை தள்ளிவிட்டுள்ளார்.மொனராகலையின் மிகவும் பின்தங்கிய கிராமத்தில் இருந்து வரும் சாமிளா கட்டுநாயக்கவில் புடவைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

கொலைக் குற்றத்திற்காக குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்த மேல்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ. கபூர் அவர்கள், இரண்டாவது குற்றச்சாட்டான பாலியல் பலாத்காரத்திற்காக 15 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனையும், 10,000 ரூபாயும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் செலுத்தப்படாதவிடத்து மேலதிகமாக ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

பிராந்தியத்தைச் சேர்ந்த பெண்கள் குழுக்களும், பெண்கள் நிலையம் மற்றும் சுதந்திர வர்த்தக வலய பொது பணியாளர்கள் சேவை ஒன்றியமும் (FTZGSWU) இணைந்து இந்த வழக்கு தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தி வந்தன.

This slideshow requires JavaScript.

Related articles