Film: Don’t think of me as a woman, an election story from the margins

2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய முஸ்லிம் பெண்ணான ஐனூன் பீபி என்பவர் தேர்தலில் எதிர்கொண்ட போராட்டங்களை இது ஆவணப்படுத்துகின்றது. இத்திரைப்படம் ஐனூனின் அரசியல் அபிலாஷைகளை வெகுவாகப் பாராட்டும் அதேவேளை, அவரது சமூகம் மற்றும் அரசியல் கட்சி கட்டமைப்பு என்பவற்றுக்குள் இயல்பிலேயே வேரூன்றியுள்ள அதிகார மற்றும் ஆதிக்கப் பொறிமுறைகளை அவர் சவாலுக்கு உட்படுத்தும் வழிமுறைகளையும் வெளிப்படுத்துகின்றது. இன்று இலங்கையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 4,400இற்கு மேற்பட்ட உள்ளூராட்சிமன்றப் பிரதிநிதிகளிடையே பெண்கள் வெறுமனே 2 சதவீதத்தினராகவே உள்ளதோடு, அவற்றுள் முஸ்லிம் பெண்கள் 3 பேர்கள் மாத்திரமே அடங்குகின்றனர்.

இத்திரைப்படம் சூழனி கொடிகார (ICES) மற்றும் வேலாயுதன் ஜெயசித்ரா (WMC) ஆகியோரால் இயக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தை பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்புடனும் காட்சிக்கலை முன்னேற்றத்துக்கான அமைப்புடனும் (Organization for Visual Progression) இணைந்து இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச மத்திய நிலையம் (ICES) தயாரித்துள்ளது.

English

Sinhala

Tamil