International Women’s Day 2008

2008 மார்ச் 8 ஆம் திகதி கொழும்பு பெண்கள் நிறுவனங்கள் சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடுமிடத்து ஒன்றிணைந்த 25 க்கும் மேற்பட்ட பெண்கள் நிறுவனங்களை உள்ளடக்கிய வலைப்பின்னலாகிய பெண்கள் நிறுவனங்கள் சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடுவதற்கு ஒன்றாக இணைந்து ஒரு மகாநாட்டையும் எதிர்ப்பு பேரணியையும் 2008 மார்ச் 08 ஆம் திகதி நடாத்தியது. இம் மகாநாடானது கொழும்பு மகாவலி நிலையத்தில் நடந்ததுடன் தற்போதைய அரசியல் நிலை, யுத்தமும் பெண்கள் மீதான அதனது தாக்கமும், பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச் செலவு அதிகரித்தல், பெண்களுக்கெதிரான வன்முறையின் அதிகரிப்பு, ஊடக அடக்குமுறை என்பது தொடர்பான பாரதூரமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. ஒரு பெண்கள் தின அறிக்கையும் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் தமிழிலிலும் வெளியிடப்பட்டது. இவ் அறிக்கையைப் பார்க்க இங்கே சொடுக்கவும். ஆங்கிலம்/சிங்களம்/தமிழ். மகாநாட்டின் பிற்பாடு  2000 பெண் செயற்பாட்டாளர்களுக்கு மேலாக பங்குபற்றிய எதிர்ப்பு பேரணியானது விக்ரோறியா பூங்காவிலிருந்து ஆரம்பமாகி அலெக்சாந்திரா வீதியால் சென்று லிப்ரன் சுற்றுவட்டத்தை சென்றடைந்து அங்கே ஒரு எதிர்ப்பு பேரணியும், மறியல் போராட்டமும் நடைபெற்றது. நாட்டின் எல்லாப் பகுதிகளையும் சேர்ந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பெண்கள் இப் பேரணியில் பங்குபற்றியிருந்தனர். புகைப்படங்களைப் பார்ப்பதற்கு இங்கே சுடுக்குக.