IWD 2015: International Women’s Day March

2015ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் பொருட்டு இலங்கையின் சகல பாகங்களில் இருந்தும் வருகைதந்த பெண்ணுரிமைக் குழுக்கள் கொழும்பு நகர வீதிகளில் ஒன்றுதிரண்டு அதனை நிறைவேற்றின. பால்நிலை சமத்துவத்தை முழுமையாக அடைந்துகொள்ளும் நோக்கில் அரசாங்கத்தின் 100 நாள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு சுயாதீன மகளிர் ஆணைக்குழு ஒன்றைத் தாபிக்குமாறும், சகல அரசியல் அங்கங்களிலும் குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறும் மேற்படி பெண்ணுரிமைக் குழுக்கள் மார்ச் மாதம் 09ஆம் திகதி கோரிக்கை விடுத்தன. இலங்கையின் அன்னையரும் புதல்வியரும் (Mothers and Daughters of Lanka) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின பேரணியானது தியவன்னஓயாவின் அருகில் ஆரம்பமாகி பாராளுமன்ற மைதானத்தைச் சென்றடைந்தது. பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு கூட்டாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமான கூட்டம் ஒன்றும் அது தொடர்பிலான கலந்துரையாடலும் அங்கு இடம்பெற்றன.

புகைப்படங்களின் தொகுப்பை முகநூல் பக்கத்தில் பார்வையிடலாம்.

View album on Facebook