Judge advised police on Wariyapola incident

குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம், திலினி அமல்கா தன்னிச்சையாக தாக்கியமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வாரியபொல வீதியில் திலினியை தொந்தரவு செய்து, அடிவாங்கிய செல்வா என அழைக்கப்படும் சந்திர குமாரவின் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

தாக்குதலுக்கு இலக்காகியமையால் கேட்கும் திறன் இழந்துவிட்டதாக கூறி செல்வாவினால், திலினி மீது குற்றவியல் கோவையின் பிரிவு 314இன் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டது.

செப்ரம்பர் 2ஆம் திகதி, இன்றைய விசாரணையின் போது, ஆரம்ப உத்தரவுகளை பின்பற்றாமை தொடர்பிலும், மத்தியஸ்த சபைக்கு சம்பவத்தை கொண்டு செல்லப்பட்டமை தொடர்பிலும் பொலிஸாரிடம் நீதி விடயங்களை கேட்டறிந்தார்.ஊடக அறிக்கைகளையும், இணையத்தில் வௌியிடப்பட்ட காணொளியில் கூறப்பட்ட கருத்துக்களையும் கவனத்தில் கொள்வதிலும் பார்க்க, பொலிஸார் நாட்டின் சட்டங்களை பின்பற்ற வேண்டும் என நீதிபதி வலியுறுத்தினார்.

2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி திலினி மீதான செல்வாவின் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகின்றது.

சம்பந்தபட்ட ஆக்கங்கள்: