Media Campaign for increasing women’s participation at the 2010 Parliamentary Election

இலங்கை அர்சியல் களத்தில் பெண்களின் வரையறுத்த பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக விழிப்புணர்ச்சியை ஏற்படித்துவதற்கு WMC ஆனது பெருமளவிலான ஊடகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டது. அந்த வகையில் 2010 பாராளுமன்றத் தேர்தலில் பங்குபற்றுகையை அதிகரிப்பதற்காகவும்ஊடக பிரச்சாரத்தை மேற்கொண்டது. நாட்டின் சனத்தொகையில் 50% ஆக பெண்கள் இருந்தபொழுதிலும் கடந்த பாராளுமன்றத் தேர்தல் நியமனத்தில் 6.6% வழங்கப்பட்டது என்ற உண்மையை பெரிதுபடுத்தி முன்னணி சிங்கள, தமிழ், ஆங்கிலப் பத்திரிகைளில் பத்திரிகை விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டன. WMC ஆனது ஊடக பிரச்சாரத்தில் ஒரு புதுமையான தடத்தை எடுத்தது. நாடு பூராகவுமுள்ள 25 சினிமாத் திரையரங்குகளிலும் ஒவ்வொரு காட்சிக்கும் முன்பாக மேற்சொன்ன உண்மையை மீள உரைக்கும் படத்துண்டங்கள் ஊடாக ஒரு சினிமா திரையரங்கு விளம்பர பிரச்சாரத்தையும் மேற்கொண்டது. தேர்தலுக்கு முந்திய கடைசி மாதத்திலேயே இப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தேர்தலுக்கு முந்திய வாரத்திலே WMC ஆனது ஒரு ஊடக விளம்பரத்தினை முன்வைத்தது. அதன் பிரசாரம் உங்களது விருப்பு வாக்குகளை பெண் வாக்காளருக்கு அளியுங்கள் என்ற தலைப்பிடப்பட்ட விளம்பரங்கள் முன்னணி சிங்கள, தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டன. அவ்விளம்பரத்திலேயே மூன்று முன்னணி அரசியல் கட்சிகளிலிருந்தான (UPFA, UNP, DNA) பெண் வேட்பாளர்களின் பெயரும் அவர்களுக்குரிய வேட்பாளர் இலக்கமும் வெளியிடப்பட்டிருந்தது.