Media Campaign for increasing women’s representation at Local Government (2010/2011)

பத்திரிகைக் கட்டுரைகள்: உள்ளுராட்சி தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பாக பத்திரிகைக் கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. அவைகளை பின்வரும் இணைப்புக்களில் காணக்கூடியதாகவுள்ளது. http://srilankawomeninpolitics.blogspot.com/search /label/news

பத்திரிகை நேர்காணல்கள்:  ராவய, லங்காதீப, திவயின, தினமின மற்றும் வீரகேசரி பத்திரிகைகள் உள்ளுராட்சி மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பான நேர்காணல்களைப் பிரசுரித்தன.

தொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்கள்: 2010 செப்ரெம்பரில் ஐரிஎன், சுவர்ணவாகினி மற்றும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் என்பன உத்தேச உள்ளுராட்சி சட்ட சீர்திருத்தம் தொடர்பான  விளம்பரங்களைச் செய்தன. 2011 ஜனவரியில் பின்வரும் நிகழ்ச்சிகளின்பொழுது ஐரிஎன் இல் விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டன. சிங்களச் செய்தி ஒளிபரப்பப்படும்பொழுது (பி.ப.7.00 மற்றும் பி.ப.9.30) தொரமடலவ (திங்கட்கிழமைகளில் பி.ப.10.00 மணிக்கு) தவாச பத்தர (மு.ப. 6.15) மற்றும் விவரணப்படங்களில் (வியாழக்கிழமைகளில் பி.ப. 10.00)

தொலைக்காட்சி மற்றும் வானொலி நேர்காணல்கள்:
இனத்துவ கற்கைக்கான சர்வதேச நிலையத்தைச் சேர்ந்த சுலானி கொடிக்கார 2010.09.29 அன்று இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபன ஆங்கில சேவையில் மனையியல் விஞ்ஞான நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றி உள்ளுராட்சியில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்து கலந்துரையாடினார். 2010.10.04 ஆம் திகதி கலாநிதி தர்ம திசநாயக்க மற்றும் பேராசிரியர் கமலா லியனகே என்போர் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் சுபராத்திரி நிகழ்ச்சியில் நேர்காணல் செய்யப்பட்டனர். 2010.01.06 ஆம் திகதி குருணாகல் பெண்கள் வள நிலையத்தைச் சேர்ந்த சுமிக்கா பெரேரா அவர்கள் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் சாரா சன்வடா வில் பங்குபற்றினார். 2010 ஒக்ரோபரில் குமுதினி சாமுவேல் அவர்கள் பிறைம் ரிவியின் வட்டமேசையில் தோன்றியதுடன் அதேவேளையில் சுலானி கொடிக்கார அவர்கள் யா ரிவியில் தோன்றினார். 2010 ஒக்ரோபரில் உத்தேச உள்ளுராட்சி சட்ட திருத்தம் குறித்தான spot விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டன. 2011 ஜனவரியில் வரும் உள்ளுராட்சி தேர்தல்களில் பெண்களின் நியமனங்களை அதிகரிப்பது மீதான வானொலி  விளம்பரங்கள் காலை 6.00, பி.ப.9.00 மணிச் செய்திகளுக்கு முன்பாகவும், பின்பாகவும் பின்வரும் வானொலி அலைவரிசைகளில் ஒலிபரப்புச் செய்யப்பட்டது. சிங்கள தேசிய சேவை,(98.3, 99.6, 102 FM) சிங்கள வர்த்தக சேவை (93.3, 106.9 FM), தமிழ் தேசிய சேவை (98.8, 101.3, 104.8, 94.2 FM), தென்றல் FM (105.6, 107.9, 98.5 FM)

விளம்பரப்பலகை: பெண்கள் ஊடகக் கூட்டமைப்பானது கொழும்பு 07 ரொறிங்டன் அவனியூவில்,  உள்ளுராட்சித் தேர்தலில் 30% மான நியமனங்களை பெற்றுக்கொள்வதற்கான பிரச்சாரத்தை மேற்கொள்ளும் முகமாக   விளம்பரப்பலகையை நிறுவியது.

சுலோகப் பிரச்சாரம்:  பொதுத்தேர்தலிலே பெண்களைப் போட்டியிடுமாறு தூண்டி கொழும்பு, பதுளை, மொனராகலை, காலி, குருணாகல், மற்றும் திருகோணமலை போன்ற இடங்களில் ஒரு சுலோகப் பிரச்சாரமானது நடத்தப்பட்டது. இது சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நடாத்தப்பட்டது.

சுவரொட்டிப் பிரச்சாரம்:  பொதுத்தேர்தலிலே பெண்களைப் போட்டியிடுமாறு தூண்டி கொழும்பு, பதுளை, மொனராகலை, காலி, குருணாகலை, மற்றும் திருகோணமலை போன்ற இடங்களில் ஒரு உள்ளக சுவரொட்டிப் பிரசாரம் நடத்தப்பட்டது. சுவரொட்டிப் பிரசாரங்கள் அரசாங்க அலுவலகங்கள், கிராமசேவகர் அலுவலகங்கள், பெண்கள் அமைச்சு போன்ற இடங்களில் போடப்பட்டன.

தபால் அட்டைப் பிரச்சாரங்கள்: உத்தேச உள்ளுராட்சி சட்ட திருத்தம் மற்றும் உள்ளுராட்சி தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் மீதான தபால் அட்டைகள் அமைச்சர்களுக்கும் பராளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் அனுப்பப்பட்டன.