Meetings with members of political parties

வரும் உள்ளுராட்சி தேர்தலில் நியமனங்களின் வீதத்தை அதிகரித்தல், மற்றும் பெண்களின் வாக்குகளை அதிகரித்தல் மீதான கருத்திட்டத்தின் ஒரு பகுதியாக WMC ஆனது வரும் உள்ளுராட்சிசபைத்தேர்தலில் அரசியல் கட்சிகள் அதிக எண்ணிக்கையிலான பெண்களை நியமனம் செய்வதை பரிந்துரைப்பதற்காக அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுடன் பல்வேறுபட்ட கூட்டங்களை WMC ஆனது நடத்தியது. இக்கலந்துரையாடல்களின் இன்னொரு நோக்கம் என்னவெனில் உள்ளுராட்சித் தேர்தல் சட்டத்திற்கான திருத்தங்கள் குறித்து கலந்துரையாடுவதுமாகும். பெற்றோலியக் கைத்தொழில் அமைச்சரும் UPFA யின் பொதுச் செயலாளருமான சுசில் பிரேமஜயந்த சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் D.U. குணசேகர, பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க,  UNP பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பாராளுமன்ற உறுப்பினரும் ஐதேக வின் பெண்கள் பிரிவுத் தலைவருமான தலத்த அத்துக்கோரள, UPFA வின் பெண்கள் பிரிவுத் தவிசாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான அசோக்க லங்காதிலக, டாக்டர். தம்ம திஸ்ஸநாயக்க, (Janasabha) கிராமிய அபிவிருத்தி பொருளாதார அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகமும் கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளருமான  தகம்ம திசநாயக்க, பாராளுமன்றமன்ற உறுப்பினர்களான விஜித்த ஹேரத், மற்றும் கரு ஜயசூரிய என்போரோடு சந்திப்புக்கள் நடாத்தப்பட்டன.