New Media training for women in Sri Lanka – HerSpace

2014ஆம் ஆண்டு ஜுன் மாதம் 30ஆம் திகதி கொழும்பிலே, இலங்கையில் உள்ள பெண்கள் குழுக்களுக்கான நிகழ்ச்சித் திட்டமிடல் தொடர்பான தொழில்நுட்ப பயிற்சி செயலமர்வு நடைபெற்றது. நாளாந்தம் புதிய ஊடகங்கள் உருவாகி வருகின்ற நிலையில், இணையம் ஊடாக கிடைக்கப் பெறும் நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பில் இலங்கையில் உள்ள பெண்களுக்கு கற்பிக்க வேண்டியதன் அவசியத்தை பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பு உணர்ந்தது. இந்தப் பயிற்சியை உலக பத்திரிகை ஸ்தாபனத்தின் ஆசிய பணிப்பாளர், மனோரி விஜேசேகர மற்றும் விஞ்ஞான எழுத்தாளரும், சிலோன் டுடே, ராவய பத்திரிகைகளின் வாராந்த பத்தி எழுத்தாளருமான நாளக்க குணவர்தன ஆகியோர் வழங்கினர்.

பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பினால் அமைக்கப்பட்ட, Herspace Sri Lankaஇனை இங்கு காணலாம்: herspacesrilanka.wordpress.com

This slideshow requires JavaScript.