Nominations and Votes for Women

இலங்கைப் பெண்கள் பாராளுமன்றத்தில் 6% க்கு குறைவாகவும், மாகாணசபைகளில் 5% க்கு குறைவாகவும் உள்ளுராட்சி சபைகளில் 2% க்கு குறைவாகவும் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிவிபரங்களானவை தென்னாசியாவில் மிகவும் குறைவாக உள்ளதுடன், இலங்கையே இப்பிராந்தியத்தில் உள்ளுராட்சிசபைகளில் பெண்களுக்கான ஒரு கோட்டா முறை அற்ற நாடாக உள்ளது. இந்தப் பிரதிநிதித்துவத்திற்கான காரணங்களில் ஒன்றாக இருப்பது என்னவெனில் பெண் வேட்பாளர்களுக்கு போதிய நியமனங்களைக் கொடுப்பதில் அரசியல் கட்சிகள் தயக்கம் காட்டுவது தான். அடுத்த உள்ளுராட்சிசபைத் தேர்தலானது விரைவில் நடைபெறவிருப்பதால் WMC ஆனது அதனது பங்காண்மை நிறுவனங்களுடனும், பெண்கள் வலுவூட்டல் அமைச்சுடனும் இணைந்து இப்பொழுது இத் தேர்தல்களின் பெண்களின் நியமனங்களை அதிகரிப்பதற்கு பணியாற்ற நம்பியிருக்கின்றது. பெண்களின் நியமனங்களை, உள்ளுராட்சி தேர்தல்களின்போது, தெரிவு செய்யப்பட்ட 5 மாவட்டங்களில் உள்ளுராட்சி தொகுதிகளில் 50 கட்சிகளின் நிரலில் ஆகக் குறைந்தது 20% ஆக இந் நியமனங்களை அதிகரிப்பதே நோக்கமாக உள்ளது. பங்காண்மை நிறுவனங்கள், பெண்கள் ஊடகக் கூட்டமைப்பு, இனத்துவக் கற்கைக்கான சர்வதேச நிலையம் (குருணாகலை), பெண்கள் அபிவிருத்தி நிலையம் (பதுளை), சர்வோதய பெண்கள் இயக்கம் (ஊவா செலிவற) விவசாயப் பெண்கள் நிறுவகம் (மொனகராகலை) மற்றும் விழுது என்பனவே இதில் பங்காளர் நிறுவனங்களாக உள்ளன. இக் கருத்திட்டமானது கொழும்பு, பதுளை, மொனராகலை, குருணாகலை, காலி மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும்.