Political Representation of Women at Local Government – Towards ensuring 30% increase

3 செப்ரம்பர் 2015

Click here to read full screen or download statement

1931ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இலங்கையில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது. ஆனால், பாராளுமன்றத்தில் அல்லது மாகாண சபையில் அல்லது உள்;ராட்சி சபையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளாக மாறுவதற்கு மிகவும் குறைந்தளவு சந்தர்ப்பமே உள்ளது. எனவே, உள்;ராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கு 30 வீத ஒதுக்கீட்டினை உறுதி செய்யும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பினை நாம் வரவேற்கின்றோம். பிரதிநிதித்துவ அரசியலில் நுழைவதற்கான முதல் கட்டமாக உள்;ராட்சி அரசாங்கத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் அமையும். துரதிரு~;டவசமாக உள்;ராட்சி அரசாங்கத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கான தரப்படுத்தலில் இலங்கையானது 2 வீதத்தினை விட குறைவாக உள்ளது. இலங்கையில் சிறந்த சமூக மற்றும் வாழ்க்கைத் தர குறிகாட்டிகள் இருக்கின்ற போதிலும் தெற்காசியாவில் ஏனைய நாடுகள் இலங்கையைத் தவிர பெண் உறுப்பினர்களின் சிறந்த பிரதிநிதித்துவத்தை கொண்டிருக்கின்றன. உடனடியான நடவடிக்கை பொறியமைப்புக்களின் நடைமுறைப்படுத்தலே இதற்கான காரணமாகும்.

உள்;ர் அரசாங்க அட்டத்தில் நாளாந்த வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட சிக்கலான பகுதிகளில் பிரதான கொள்கை தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் நீர், புறச்சுகாதார வசதி, சுகாதாரம், மற்றும் வீதிக்கான அணுகும் வசதி, சந்தைகள் போன்ற பொருளாதார அக்கறைகளும், வீதி விளக்கு போன்ற பாதுகாப்பு அக்கறைகளும் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் அடங்குகின்றன. உள்;ராட்சி அதிகார சபைகளில் பெண்களின் பற்றாக்குறை என்பது, பெண்களின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படாது அல்லது அரசியலில் பெண்களின் குறைந்த பிரதிநிதித்துவம் காரணமாக பெண்களின் நாளாந்த வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய தீர்மானங்கள் கலந்தாய்வு இன்றி முன்னெடுக்கப்படும் சாத்தியங்கள் உள்ளன. பெண்களின் விருப்பங்கள் மற்றும் அக்கறைகள் மிகவும் அரிதாகவே கவனத்தில் கொள்ளப்படுகின்றன. அரசாங்கத்தின் எந்த மட்டத்தில் குறைந்தளவு செல்வாக்கே செலுத்தப்படுகின்றன. உள்;ராட்சி அரசாங்க மட்டத்தின் நாளாந்த வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட சிக்கலாக பகுதிகளில் பிரதான கொள்கை தீர்மானங்கள் எடுக்கப்படுவதுடன், நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதில் நீர், புறச்சுகாதாரம், சுகாதாரம் மற்றும் வீதிக்கான அணுகும் வசதி, சந்தைகள் மற்றும் வீதி விளக்குகள் போன்ற பாதுகாப்பு அக்கறைகள் உள்ளடங்கிய அடிப்படைத் தேவைகள் இதில் உள்ளடங்குகின்றன. மக்கள் தொகையில் 52 வீதமானவர்கள் பெண்களாக இருக்கின்றனர். ஆண்களைப் போல சமமான அளவில் உரிமைகள் மற்றும் உரிமைத்துவங்களை பெண்கள் கொண்டவர்களாக இல்லை. இதனால் ஆண்களைவிட குறைந்தளவு வரப்பிரசாதங்களையே பெண்கள் கொண்டிருக்கின்றனர். தீர்மானம் எடுக்கும் பதவிகளில் பெண்களின் உறுதியான பிரதிநிதித்துவம் இன்மையானது, கொள்கை வகுத்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

மேலதிகமாக, தொழில், சட்ட தொழில் மற்றும் அரச நிர்வாகம் போன்ற தொழில்சார் துறைகளின் பெண்களின் பிரதிநிதித்துவத்தில் இலங்கை குறிப்பிடத்தக்க தேர்ச்சியை எட்டியுள்ள போதிலும், அது அரசியலில் பிரதிபலிக்கவில்லை. நடப்பு சமூக, பொருளாதார யதார்த்தங்களை உள்;ர் மற்றும் தேசிய அரசாங்கங்கள் பிரதிபலிப்பதில்லை என்பதுடன், பெண்களால் ஆட்சிமுறைக்கு அளிக்கக்கூடிய நேர்நிலையான பங்களிப்பும் கிடைக்காமல் போகின்றது. தமது 100 நாள் நிகழ்ச்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேய அவர்கள் விளக்கியிருந்தார். மாகாண சபைகள் மற்றும் உள்;ராட்சி சபைகளில் ஆகக் குறைந்த 25 வீத பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கு சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் உறுதியளித்திருந்தார். உள்;ராட்சி மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தில் 30 வீதம் ஒதுக்கப்பட்டமை எமக்கு மகிழ்ச்சித் தருகின்றது. இது வரை பெண்கள் 6இலிருந்து 10 சதவீதம் வரை மாத்திரமே வேட்புமனுக்களை பெற்றுள்ளனர். அடுத்த உள்;ராட்சி தேர்தல்களில் போட்டியிடுவதற்கு பெண்களுக்கு போதியளவு சந்தர்ப்பம் கிடைப்பதனை உறுதி செய்வதற்கு வேட்புமனுக்களை அதிகரிப்பது மிகவும் முக்கியமாகும். ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி ஆகிய இரண்டினையும் உறுதி செய்ய வேண்டும். எனவே நாம் பின்வரும் விடயங்களை பிரேரிப்பதுடன், அடுத்து வரும் உள்;ராட்சி சபைத் தேர்தல்களில் யதார்த்தமாக்குவதற்கு தேவையான சட்ட மாற்றங்களை அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரிப்பார்கள் என நாம் நம்புகின்றோம்.

தொகுதிவாரி முறையில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள்

• பெண்களுக்கு கட்டாயம் 30வீதம் வேட்புமனுக்கள் வழங்கப்படுவதனை உறுதி செய்வதற்கு 2012ஆம் ஆண்டு உள்;ராட்சி அதிகாரச சபைத் தேர்தல்கள் (திருத்தம்) சட்ட, இல 22இல், சட்டரீதியான விதிக்கும் ஏற்பாடுகளை உள்ளடக்கல். எனவே, அவர்களுக்கு உள்;ராட்சி சபைகளில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் கிட்டும் அல்லது.

• கிடைக்கக் கூடியதாக உள்ள 30 ஆசனங்களுக்கு போட்டியிடுவதற்கு பெண்கள் பிரேரிக்கப்படுவதனை உறுதி செய்வதற்கு வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தல்.

– அரசியலில் பால்நிலை திருத்தங்களுக்கான கூட்டணி