Preparation of Migrant Rights Alternative Report

மே 2006-2008
 : 2006 மேயிலும், நவம்பரிலும் இரு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அரச அதிகாரிகளுடன் குடிபெயர்ந்தோர் உரிமை விடயங்களில் பணியாற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள்கள் இணைந்து குடிபெயர்ந்தோர் உரிமைகள் குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டிய, அத்துடன் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய, தேவையான வகைத் தரவுகளைத் தீர்மானிப்பதற்காக, இக் கூட்டம் இடம்பெற்றது. இலங்கை அரசாங்கமானது 1996 இல் ஏற்று அங்கீகரித்து, 2003 ஆம் ஆண்டில் அமுல்படுத்துவதற்கு ஏற்றுக்கொண்ட எல்லா குடிபெயர்ந்த தொழிலாளர்கள், மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களது உரிமைகளைப் பாதுகாப்பது மீதான சர்வதேச சமவாயத்தின் கீழான, அதன் கடப்பாட்டின் கீழ் அதனது முதலாவது பருவகால அறிக்கையை குடிபெயர் தொழிலாளர்தொடர்பான குழுவிற்கு சமர்ப்பிக்கும்படி தற்பொழுது கேட்கப்பட்டுள்ளது. குடிபெயர் தொழிலாளர்கள் என்ற விடயத்தில் பணியாற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களும் (அ.சா.நிகள்) மற்றும் சனசமூக அடிப்படையிலான நிறுவனங்களும் கூட மேற்சொல்லப்பட்ட குழுவிற்கு இலங்கை குடிபெயர் தொழிலாளர்களின் நிலை மற்றும் அவர்களது உரிமைகள் தொடர்பான தற்போதைய தகவல்களை வழங்கும் மாற்று அறிக்கையொன்றினை சமர்ப்பிக்கும்படி கேட்கப்பட்டுள்ளனர். இந்த நோக்கத்துடன் குடிபெயர்ந்த தொழிலாளர்ககளுக்கான செயற்பாட்டு வலையமைப்பானது (ACTFORM) 2008 இல் குடிபெயர்ந்தோர் உரிமைகள் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும் ஒரு அறிக்கையினைத் தயாரிப்பதற்காக ஒருங்கிணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவ் அறிக்கையானது மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் மற்றும் சட்டத்தரணியுமான Shyamala Gomez அவர்களால் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றது.