Progress of CEDAW Shadow Report and Status of Women Report 2008 – 2009

2008 ஒக்ரோபர் 17 ஆம் திகதி ஒரு எழுத்தாளர்களின் கூட்டமானது WMC இல் இடம்பெற்று அங்கே சீடோ நிழல் அறிக்கை மற்றும் SWR எழுத்தாளர்கள் இரு அறிக்கைகளையும் எழுதுவது  குறித்துக் கலந்துரையாட ஒன்று கூடினர். ஒரு கவனயீர்ப்புக் குழுக் கலந்துரையாடலானது 2009 பெப்ருவரி 27 ஆம் திகதி WMC இல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தான 09 கிராமிய பெண்கள் சனசமூகத் தலைவர்களின் பங்குபற்றுகையுடன் இடம்பெற்றது. சிறுவர் அபிவருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் செயலாளரிடமிருந்தான அழைப்பினைத் தொடர்ந்து பெண்கள் நிறுவனங்கள்/அசாநிகள் மற்றும் செயலாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல் கூட்டம் ஒன்று 2009 ஏப்ரல் 01 ஆம் திகதி நடைபெற்றது. அதிலே செயலாளர் அவர்கள் பெண்கள் அசாநி உறுப்பினர்களிடம் அவர்களின் கவனயீர்ப்பு பெறும் விடயங்களில் உட்கிடக்கைகள், கருத்துக்கள் மற்றும் அரசாங்க அறிக்கையில் கலந்துரையாடப்பட்டு சிறப்பு பெற வேண்டிய விடய வகைகள் என்பவற்றைக் கலந்துரையாடினர். ஜுன் மாத இறுதிப்பகுதியில் சீடோ அறிக்கையின் எல்லா அலகு அதிகாரங்களும் எழுத்தாளர்களால் இறுதித் தரவுத் தொகுப்பிற்காக சமர்ப்பிக்கப்பட்டன. தற்போது ஒட்டுமொத்த அறிக்கைத் தொகுப்பு இடம்பெறுவதுடன் நிறைவேற்றுச்சுருக்கம் மற்றும் அறிமுகம் என்பன எழுதப்பட்டுக்கொண்டிருக்கின்றன.