Roundtable discussion on Women, Peace and Security in Sri Lanka

WMC ஆனது இலங்கையில் பெண்கள் சமாதானம் மற்றும் பாதுகாப்பு மீதான வட்டமேசைக் கலந்துரையாடல் ஒன்றை 1325 மற்றும் 1820 ஐநா பாதுகாப்புச்சபைத் தீர்மானத்தின் மீதான சட்டக வேலையைப் பயன்படுத்தி ஒழுங்குசெய்திருந்தது. சர்வதேச பெண்கள் பிரபலத் தலைவர் நிலையத்தைச் சேர்ந்த  ஒரு சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளரும் கூட்டத்திலே தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். இக் கூட்டத்தின் நோக்கமானது இலங்கையிலே தற்போதைய சமாதானம் மற்றும் பாதுகாப்புகளை கலந்துரையாடுவதும் 1325 மற்றும் 1820 சட்டக வேலைகளை பயன்படுத்தி நாம் ஒன்றாக எவ்வாறு பணியாற்றலாம் என்பது மீதான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதுமாகும். திருமதி. Balleza அவர்கள் (WPBCoP) சமாதானம் மற்றும் பாதுகாப்பு மீதான அசாநி மற்றும் பெண்கள் வேலைக்குழுக்களின் வலைப்பின்னலைச் சேர்ந்த பெண்கள் சமாதானத்தைக் கட்டுபவர்கள் செயற்பாட்டுச் சமூகம் என்பது மீதான ஒரு உரையை ஆற்றினார். அதிலே அவர் பெண்கள் அசாநிகள் எவ்வாறு கூட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடலாம் என சிறப்புப்படுத்திக் காட்டியதுடன், இத் தீர்மானங்களின் மிகவும் தாக்க விளைவான விளைவுகளையும் வெளிக்கொணர்ந்தார். 1820 UNSCR 1325 UNHCR என்பவற்றின் முக்கிய இயல்புகள், பலங்கள் மற்றும் வரையறைகள் மற்றும் சிபார்சுகள் என்பன கலந்துரையாடப்பட்டன. இக்கலந்துரையாடலின் ஒரு முக்கிய விடயமானது இத் தீர்மானங்களை நாம் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் புரிந்துகொள்வதும், இதன் குறைபாடுகள் என்ன என்பதைப் புரிந்துகொள்வதுமாகும். 13 நிறுவனங்களைச் சேர்ந்த பெண்கள் கூட்டத்தில் பங்குபற்றியதுடன் அவர்கள் ஒவ்வொருவரும் இத் தீர்மானங்கள் தொடர்பாக UNSCR 1325 தொடர்பாக தமது நிறுவனத்தில் தாம்செய்த வேலை குறித்து சிறு சமர்ப்பணமும் செய்தார்கள்.