Strengthening Governance and Increasing Women’s Representation in Local Government (Kurunegala, Monaragala, Badulla)

ஜனவரி, ஜுன் 2009
 
- WMC ஆனது 2007 ஆம் ஆண்டு இக் கருத்திட்டத்தை முன்வைத்ததுடன், இது பின்வரும் ஆண்டுகளில் உள்ளுராட்சி தொடர்பான பெண்களின் அறிவினை அதிகரிப்பதனையும், உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் பெண்கள் பங்குபற்றுவதற்கான இயலுமையைக் கட்டியெழுப்புவதற்காகவும், நல்லாட்சியில் அவர்களுக்கு உதவி வழங்குவதையும் நோக்ககாகக் கொண்டிருந்தது. அவதானிப்புக் குழுக்கள் குருணாகலை, மொனராகலை, மற்றும் பதுளையிலுள்ள தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி சபைகளில் தமது கண்காணிப்பு பணிகளை தொடர்ந்தன. அக்காலப்பகுதியில் பூர்த்தி செய்த நடவடிக்கைகள் பின்வருமாறு. அவதானிப்புக் குழுக்களானவை அவர்களின் தொழிற்பாட்டுக் காலத்தின் பொழுதில் கண்காணிக்கப்பதை சிலர் எதிர்த்பொழுதிலும் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி சபைகளில் தமது கண்காணிப்பு பணிகளைத் அவர்கள் தொடர்ந்து ஆற்றினர். சபையைச் சேர்ந்தவர்களின் சில பழக்கங்கள் பொதுமக்களை அசௌகரியப்படுத்துவதானது குழுக்களால் அவதானிக்கப்பட்டன. அபிவிருத்திக் கருத்திட்டங்களின் பிற்பாடு உள்ளுராட்சி சபைகளின் கருத்திட்டங்களுக்குப் பிற்பாடு அவர்களின் குறைபாடுகள் பற்றி விசாரித்தார்கள். சபை வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடுகள் அது தொடர்பாக ஏற்பட்ட குறைபாடுகளும் நுண்ணாய்வுக்கு கொண்டு வரப்பட்டன. குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட சில செயற்பாடுகளாவன பல்வேறுபட்ட மருத்துவ சிகிச்சைகளை நடாத்துதலும் மகப்பேற்று சிகிச்சைகளை ஒழுங்கு செய்தலும், பாடசாலை வசதிகளை விருத்தி செய்தலும், மாவட்ட சிரேஷ்ட பிரசைகளுக்காக தேசிய அடையாள அட்டைகளை விநியோகித்தல் தெரிவு செய்யப்பட்ட சபைகளின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம் (Gama Naguma) நிதியங்கள் குறித்துக் காலந்துரையாடியதும் ஆகும். இவ் வருடத்தின் ஆறு மாத காலப்பகுதிக்கும் கண்காணிப்புச் செயன்முறை தொடரப்படும்.