Strengthening Governance and Increasing Women’s Representation in Local Government (Kurunegala, Monaragala, Badulla)

செப்ரெம்பர், டிசெம்பர் 2007
-WMC ஆனது இக்கருத்திட்டத்தை உள்ளுராட்சி குறித்த  அறிவைப் பெண்களிடையே அதிகரித்துக் கொள்வதையும், உள்ளுராட்சி தேர்தல்களில் போட்டியிடும் அவர்களின் இயலுமையைக் கட்டியெழுப்புவதற்காகவும் நல்லாட்சியை இயலச் செய்வதில் அவர்களுக்கு உதவுவதற்காகவும், இலக்குகளைக் கொண்டு இக்கருத்திட்டத்தை முன்னெடுத்தது. மொத்தத்தில் 14 உள்ளுராட்சி சபைகளானவை 3 மாவட்டங்களில் 25 பெண் அவதானிப்பாளர்களால் அவதானிக்கப்பட்டது. அவதானிப்புக் குழுக்களானவை பதுளை பெண்கள் வள நிலையம், மொனராகலை ஊவா வெலிசா கமி காந்தா நிறுவனம் மற்றும் குருணாகலை பெண்கள் வள நிலையம் என்பவற்றிலிருந்து தெரிவு செய்யப்பட்டார்கள். தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சிசபைகளின் மாதாந்த கூட்டங்களுக்கு அவர்கள் சமூகமளித்ததுடன், 6 மாதஅறிக்கையையும் தயாரித்திருந்தார்கள். 3 பிரதேசங்களிலும் அவதானிக்கப்பட்ட உள்ளுராட்சி சபைகளானவை 
• பதுளை மாவட்டம் – பண்டாரவளை, ஹாலிஎல, பதுளை மற்றும் பசறை பிரதேசசபை, பண்டாரவளை நகரசபை 
• மொனராகலை மாவட்டம் – புத்தள, மொனராகலை படல்கும்பர, சியம்பலனந்துவ பிரதேச சபை 
• குருணாகலை மாவட்டம் – ரிதிகம, இப்பாகமுவ, வாரியபொல மற்றும் குருணாகலை பிரதேசசபை. காலப்பகுதியில் பூர்த்தி செய்யப்பட்ட செயற்பாடுகள் பின்வருவன. 
1) கண்காணிப்பு (அவதானிப்பு) அவதானிப்புக் குழுவானது தெரிவுசெய்யப்பட்ட உள்ளுராட்சி சபைகளின் மாதாந்தக் கூட்டங்களுக்கு சமூமளித்ததுடன், உள்ளுராட்சி செயன்முறைகளை அவதானித்தனர். அவர்கள் கண்ட அவதானிப்புக்களை மாதாந்தம் நடந்த கூட்டங்களில் பகிர்ந்து கொண்டனர். கண்காணிப்பின் பிரதான இலக்காக இருந்தது என்னவெனில் கலந்துரையாடல்களின் முக்கிய கருப்பொருள்களை இனங்கண்டுகொள்வதும் அது தொடர்புடைய குறைபாடுகளையும் பிரச்சினைகளையும் தீர்ப்பதுமாகும். 
2) மீள்நோக்கல் மற்றும் திட்டமிடல் கூட்டங்கள் 
- 2007 பெப்ருவரி மற்றும் ஆகஸ்டில் அவதானிப்புக் குழுவின் சனசமூக அடிப்படையிலான நிறுவனங்களின் தலைவர்களுடன் ஆலோசனைகள் நடாத்தப்பட்டன. கண்காணிப்புக் காலப்பகுதியின்பொழுது மேற்கொள்ளப்பட்ட முக்கிய அவதானிப்புகள் கண்காணிப்புக்கான பல்வேறு உபாயங்கள் உட்பட அனைத்தும் அவதானிப்பாளர்களுடன் பகிரப்பட்டதுடன் பின்வரும் மாதங்களுக்காக ஒரு கூட்டு வேலைத்திட்டமும் வரையப்பட்டது. 
3) WMC ஆனது 2007 ஜுனில் தேர்தல் மறுசீரமைப்பு மீதான பாராளுமன்ற தெரிவுக் குழுவின் தவிசாளருடன் தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கை குறித்து விசேடமாக பால்நிலை கவலைகள் குறித்து கலந்துரையாடும் பொருட்டு ஒரு கலந்தாலோசனையை ஒழுங்கு செய்து ஒருங்கிணைத்திருந்தது.  தேர்தல் மறுசீரமைப்பு மீதான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கையானது சமூகமளித்திருந்த பெண்கள் குழுக்களின் 40 பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது. 
4) தந்திரோபாயத் திட்டமிடலும் இயலுமையைக் கட்டியெழுப்புவதற்குமான பயிற்சிப்பட்டறை: தற்போதுள்ள உள்ளுராட்சி சட்டக வேலைக்குள் உள்ளுராட்சியில் பெண்களின் பங்களிப்பை முன்னேற்றுவதற்கான ஒட்டுமொத்த தந்திரோபாயங்களை இனங்காணுவதற்காக 14 உள்ளுராட்சிசபைகளை அவதானிப்பதில் ஈடுபட்டிருந்த 3 மாவட்டங்களைச் சேர்ந்த எல்லாப் பங்குபற்றுனர்களுக்குமான இப் பயிற்சிப்பட்டறையானது 2007 ஒக்ரோபரில் நடைபெற்றது. ஒருவருடக் கண்காணிப்புச் செயன்முறைகளின் ஊடாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட முக்கிய தகவல்களை உறுதிப்படுத்துவதும், வரும் வருடத்திற்கான ஒரு தந்திரோபாய செயற்பாட்டுத்திட்டத்தை இறுதிப்படுத்துவதுமே இப்பயிற்சிப்பட்டறையின் நோக்கமாகும். உள்ளுர் மட்டத்தில் எதிர்கொள்ளப்படும் சவால்களை வெற்றிகொள்வதற்கான உபாயங்கள் குறித்து உள்ளுராட்சி செயலாளர் திரு.D.P. ஹெட்டியாராச்சி அவர்கள் முக்கிய உரையாற்றினார். இப்பயிற்சிப்பட்டறையானது முன்னாள் அமைச்சின் செயலாளர் திருமதி நந்தினி குணசேகர அவர்களால் வசதிப்படுத்தப்பட்டது. அமைச்சர் தலத்த அத்துக்கோரள கட்சியால் செயற்படுத்தப்படும் ஒரு அரசியல் சூழமைவில் பெண்களின் பங்குபற்றுகை குறித்தான சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார். திருமதி. உகுலங்கனி மலகமுவ உள்ளுராட்சி மட்டத்தில் அவர் எதிர்கொண்ட சவால்களை அவர் எவ்வாறு வெற்றிகொண்டார் என பெண்களிடம் பேசியதுடன், பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை எவ்வாறு வெற்றிகொள்வது எனக் கலந்துரையாடினார். கலாநிதி செபாலி கொட்டேகொட அறிக்கை எழுதுவது தொடர்பான ஒரு அமர்வை வசதிப்படுத்தினார். பெண்கள் உள்ளுராட்சி சபைகளைக் கண்காணிப்பு செய்ததில்  தமது அனுபவங்களைப் மையப்படுத்தி ஒருநாடகத்தை நடத்திக் காண்பித்தனர்.