Submission of the Migrant Rights NGO Shadow Report titled “The Sri Lanka NGO Shadow Report on the International Convention on the Protection of the rights of all Migrant Workers and their families,” to the Committee on Migrant Workers.

ஜுன் 2008
 – 
எல்லாப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது மீதான சர்வதேச சமவாயமானது இலங்கையால் 1996 ஆம் ஆண்டு ஏற்று அங்கீகரிக்கப்பட்டது. இச்சமவாயமானது 2003 இல் அமுலுக்கு வந்தது. 2008 ஏப்ரலில் இலங்கை அரசாங்கமானது சமவாயத்தின் கீழான தனது கடப்பாட்டின் ஒரு பகுதியாக முதலாவது பருவகால நாட்டு அறிக்கையை புலம்பெயர் மீதான குழுவுக்கு சமர்ப்பித்தது. 2006 இல் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வலைப்பின்னல் செயற்பாடு (ACTFORM) WMC என்பன புலம்பெயர் மீதான தொழிலாளர் குழுவிற்கு சமர்ப்பிப்பதற்காக இலங்கை அசாநி அறிக்கையை ஒருங்கிணைத்து தயாரித்தது. அரச அதிகாரிகள் மற்றும் உரிய அரசசார்பற்ற நிறுவனங்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் சார்பாகப் பணியாற்றும் சனசமூக அடிப்படையிலான நிறுவனங்கள் என்போருடன், புலம்பெயர் தொழிலாளர் மீதான குழுவிற்கு கொண்டு செல்லப்பட வேண்டிய அவர்கள் உரிமைகள் தீர்மானித்தல், தொடர்புகள் என்ன எனக் காணுவதற்காக இரண்டு ஆலோசனைக் கூட்டங்கள்  நடாத்தப்பட்டன. 2008 ஜுனிலே அசாநி நிழல் அறிக்கையின் இறுதி வரைபானது புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. முழு அறிக்கையையும் பார்க்க இங்கே சுடுக்குக.