WMC 25th Anniversary

பெண்கள் ஊடகக் கூட்டமைப்பு ஆனது பெண்கள் செயற்பாட்டில்  தனது 25 ஆண்டு விழாவை பல்வேறு தொடரையும் ஒழுங்குசெய்து கொண்டாடியது. இக் கொண்டாட்டத்தின் கருப்பொருளாக இருந்தது “மாறும் மனங்கள்” – பெண்களும் பார்வைநோக்கு மாற்றங்களும் -ஏனையோரைப் பற்றி எவ்வாறு பெண்கள் எண்ணங்கள் மாறுகின்றன, பெண்களைப் பற்றி எவ்வாறு ஏனையோரின் எண்ணங்கள் மாறுகின்றன, தம்மைப் பற்றி எவ்வாறு பெண்களின் எண்ணங்கள் மாறுகின்றன என்பதுவாகும். இவ் எண்ண மாற்றம் குறித்த பிரதான நிகழ்வானது பெண்களைப் பற்றி நடத்தப்பட்ட கண்காட்சி ஆகும்.  இலங்கையில் பெண்கள் செயற்பாட்டின் வரலாற்றை இக்கண்காட்சி உள்ளடக்கியிருந்தது. அத்துடன் பெண் புகைப்பிடிப்பாளர்கள், பெண் செயற்பாட்டாளர்களின் வேலை அம்சங்களும் இதிலே அடங்கியிருந்தன. ஆண்டுவிழா கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு ஒரு செல்லிடத்தொலைபேசி திரைப்பட போட்டியையும், பெண்கள் ஊடகக் கூட்டமைப்பு ஒழுங்கு செய்திருந்தது. அத்துடன் ஒரு அதிஸ்ட இலாப சீட்டிழுப்பும் இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து நடைபெற்ற ஒரு கலாச்சார நிகழ்ச்சியானது மட்டக்களப்பு சூரியா குழுவினர், சிறாம்பியடிய கவிர் சனசமூகம் மற்றும் வெனுறி பெரேராவினரது அரங்காற்றுகையாளர்களின் ஆற்றல்களைக் காட்சிப்படுத்தியது.