WMC condemns the societal indictments of Thilini Amalka

வாரியபொலவைச் சேர்ந்த 21 வயதான திலினி அமல்கா எனப்படும் பெண்ணின் மீதான சமூகம்சார் குற்றச்சாட்டுக்களை பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பு கண்டிக்கின்றது. வாரியபொல பஸ் நிலையத்தில் ஆண் ஒருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் திலினி, ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி வாரியபொல பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டார். திலினியால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு முறையான நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக பொலிஸார், அவரை உளவியல் பரிசோதனைக்கு உள்ளாகுமாறு கோரப்பட்டார். இரண்டாம் நிலை பாதிப்புக்கு திலினி உள்ளானார். ஆரம்ப களங்கப்படுத்தல் நிலைமையை விட பாதிப்புக்குள்ளாக்கும் அவமானப்படுத்தும் சமூகம் சார் பிரதிபலிப்பு மிகவும் பாதகமானது.

சில ஊடகங்களின் இரட்டைத் தன்மையான பிரதிபலிப்புகள் இலங்கையில் பெண்களின் மீதான உள்ளகப்படுத்தப்பட்ட பாலியல் பொருளாக்கப்படுகின்றமையை வௌிப்படுத்துகின்றது. சமூகத்தில் உளப்பாங்குகளை உருவாக்கும், வௌிப்படுத்தும், வலியுறுத்தும் அங்கமாக ஊடகம் உள்ளது. எனவே, இவ்வாறான விடயங்களில் ஊடகங்கள் மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும். பெண்கள் அல்லது சிறுமிகளுக்கு எதிராக வன்முறையை வௌிப்படுத்தும் உளப்பாங்குகளைக் கொண்டிருக்கக் கூடாது.

“பெண்களுக்கு எதிரான வன்முறை என வரும்போது, சகித்துக் கொள்வதற்கான எவ்வித சந்தர்ப்பமும், மன்னிப்பும் வழங்க முடியாது” (செயலாளர் நாயகம் கொபி அனானின் செய்தி – பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வேதச தினம் – 2013).

Related articles