2019ம் ஆண்டு,சித்திரைமாதம்,21ம் திகதிஉயிர்த்தஞாயிறன்றுநீர்கொழும்பு,கொழும்புமற்றும் மட்டக்களப்புஆகிய இடங்களில்தேவாலயங்கள் மீதும்,ஹோட்டல்கள் மீதும் இடம்பெற்ற இரத்தம் தோய்ந்ததாக்குதல்களைநாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமதுஅன்பிற்குரியவர்களை,நண்பர்களை,சகபாடிகளை இழந்துதுயருறும் அனைவருக்கும் நாம் எமதுஆழ்ந்த இரங்கலினைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் தீவிலேசமாதானத்துக்கும்,சகவாழ்வுக்குமானவிழுமியங்களைநிலைநிறுத்தநாம் உறுதிகொள்வோம்.
இயேசுநாதர் உயிர்த்தெழுந்தநாளாகவும்,சமாதானத்துக்கானநாளாகவும் அடையாளப்படுத்தப்படுகின்ற,உலகில் புனிதநாளாகஅதனைப்பின்பற்றும் மக்கள் கொண்டாடுகின்றஉயிர்த்தஞாயிறன்று, இலங்கையில் நீர்கொழும்பு,கொழும்புமற்றும் மட்டக்களப்புஆகிய இடங்களில் கொடூரமானதாக்குதல்கள் இடம்பெற்றன.பிரதானமாககிறிஸ்தவதேவாலயங்கள் இலக்குவைக்கப்பட்டு,உயிர்த்தஞாயிற்றுப் பிரார்த்தனைக்காகப்பக்தர்கள் கூடியிருந்ததருணத்தில் எட்டுபாரியவெடிப்புச் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டன. இத்தேவாலயங்கள் நம்பிக்கையுடையசமூகத்தோர் மத்தியில் ஆழமாகநிலையூன்றியிருந்ததுடன்,குறைந்தவருமானமுடையகுழுக்கள் உள்ளடங்கலாக,பல்லினசமூகங்களதுவணக்கஸ்தலமாகவும் இருந்துவந்துள்ளன. கொச்சிக்கடையிலுள்ளதேவாலயமானது இத்தீவிலுள்ளஅனைத்துசமூகத்தினராலும் புனிதத் தலமாகமரியாதைப்படுத்தப்படுவதாகும். இத்தாக்குதல்கள் கொழும்புநகரிலுள்ளபெரும் ஆடம்பரஹோட்டல்களையும் இலக்குவைத்திருந்தன. இவை ஒழுங்கமைக்கப்பட்டதொருதொடர்ச்சியில் செயற்படுத்தப்பட்டனஎன்பதுடன்,200க்கும் அதிகமானஉயிர்களைப் பலி எடுத்திருந்ததுடன், இன்னும் பல நூற்றுக்கணக்கானவர்களைக் காயத்துக்கும் உள்ளாக்கியிருந்தன.
நாம் இந்தமிலேச்சத்தனமாகதாக்குதல்களினாலும்,அதன் விளைவான இழப்புக்களாலும் ஆழ்ந்தகவலையடைந்துள்ளோம். இத்தாக்குதலினால் உயிரிழந்தவர்களதுகுடும்பத்தினர்,நண்பர்கள்,சகபாடிகள் ஆகியோருடனும், இந்தவன்முறையினால் நேரடியாகவும்,மறைமுகமாகவும் பாதிப்புக்குள்ளானசமூகத்தினரோடும் நாம் சிந்தையோடு இணைந்திருக்கிறோம்.
பாதிப்புக்குள்ளானவர்களுக்குஆதரவளிக்கமுன்வந்துள்ளஅனைவருக்கும் மற்றும்சமாதானத்தையும்,சகவாழ்வையும்நோக்கிஅழைக்கின்றதுடன்,பழிவாங்கல் இடம்பெறாமல் தடுப்பதற்காகப் பணியாற்றும் சமூகத்தினர் அனைவருக்கும்நாம் பெரிதும் நன்றியுடையவராகிறோம். எவ்வாறெனினும்,சிலபிரதேசங்களில் முஸ்லிம் சமூகஅங்கத்தவர்கள் மீது இடம்பெற்றுள்ளதாகத்தெரியவருகின்றபழிவாங்கல் சம்பவங்கள் குறித்துநாம் கரிசனையடைந்துள்ளதுடன், இந்நாட்டில் பல்லினம்,பன்மைத்துவம்,மற்றும் சகவாழ்வுஎன்பதைநோக்கியநமதுஅர்ப்பணிப்பிற்காகவிடாமுயற்சியுடன் செயற்பட இலங்கையர் அனைவரையும் அழைக்கிறோம்.சமயஅல்லதுஅரசியல் கையாளுகைகளால் இது அழிந்துபோகநாம்விட்டுவிடக் கூடாது.
தம் தெரிவானஎந்தவொருசமயத்தையும் பின்பற்றவும்,அனுஷ்டிக்கவும்,வழிபாட்டுக்கானதலங்களில் அமைதியானமுறையில் வழிபடவும் ஒவ்வொரு இலங்கையருக்குமானஉரிமையினைநாம் உறுதிப்படுத்துவோம். நாம் அனைவருமேசமயமற்றும் கலாசாரஉரிமைகளைக் கொண்டவர்கள் என்பதுடன் அதுஒருவரதுநம்பிக்கையையும்,விழுமியங்களையும் தனித்தும்,பொதுவிலும் அமைதியானமுறையில் வெளிப்படுத்துவதற்கானஉரிமையினையும் கொண்டதுஎன்பதனைநாம் உறுதிப்படுத்துகின்றோம்.
இலங்கையில்வலிமிகுந்த,வன்முறையும்,மோதலும்கொண்டவரலாறு: 30 ஆண்டுகளுக்குமேற்பட்டகொடூரயுத்தத்தினையும், இரண்டுகிளர்ச்சிகளையும் கொண்டதாகஎமதுபற்பலஉயிர்களைக்காவுகொண்டிருக்கிறது. கடந்தபத்துவருடங்களில்,2009இல் ஆயுதமோதலினை இராணுவம் முடிவுக்குக் கொண்டுவந்ததிலிருந்து,அனைத்துஇன,மதஅடையாளங்களையும் கொண்டபலசமூகமட்டத்திலானகுழுக்களும், கூட்டமைப்புக்களும்,தமதுவாழ்வையும்,வாழ்வாதாரத்தையும் கட்டிஎழுப்பவும்,யுத்தத்தினால் தோற்றுவிக்கப்பட்டஆழமானகாயங்களிலிருந்துமீண்டுவரவும் மிகவும் கடுமையாகஉழைத்துவந்துள்ளன. அதுவொரு இலகுவானபாதையாக இருக்கவில்லைஎன்பதனால்,பலர் நம்பிக்கையினைமீளவும் கட்டியெழுப்பி,வகைப்பொறுப்புமற்றும் நீதிக்கானபாதையில் முன்னோக்கிசெல்லமுயற்சித்துவருகின்றனர்.
உயிர்த்தஞாயிறன்று இடம்பெற்றவன்முறையானது,அனைத்துசமூகங்களையும் சேர்ந்தபிரசைகளாக,அமைதியானசகவாழ்வுமற்றும் சமத்துவத்தைநோக்கியபாதையினைத் தேடும் எமதுஅனைத்துமுயற்சிகளிலும் பாரியபின்னடைவினைஏற்படுத்தக் கூடியதாகும். கடந்தகாலங்களில் சமயத்தின் பெயரில் இடம்பெற்றஅடாவடித்தனங்களைகையாள்வதில்அரசதரப்பும்,அரசசார்பற்றதரப்பினரும் நடவடிக்கைகள் எடுக்காதிருந்தமையையும்,சிலவேளைகளில் சகிப்புத்தன்மையுடன் நடந்துகொண்;டமையையும் நாம் மிகவன்மையாகக் கண்டிக்கிறோம். அனைத்துஎச்சரிக்கைகளையும் அசட்டைசெய்து,சமூகநலனைபுறந்தள்ளிஉயிர்த்தஞாயிறில் இடம்பெற்றபடுகொலைகளுக்கு இட்டுச் சென்றபாரியஅலட்சியத்தினைநாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இச்சிக்கலானதருணத்தில் எவ்வாறுசெயற்படுவதுஎனதிட்டமிடும் அதேசமயம் மனிதஉரிமைகளுக்கும்,அனைத்துபிரசைகள் மற்றும் சமூகத்தினரதுதேவைகளுக்கும் முன்னுரிமையளிக்கும் படிநாம் அரசைவேண்டுகிறோம். பாதுகாப்புநடவடிக்கைகள்காரணமாககுறித்ததொருசமூகம் இலக்காக்கப்படுவதனையோஅல்லதுவிளிம்புநிலைக்குள்ளாக்கப்படாதிருப்பதனைஅல்லதுஅவர்களதுஉரிமைகள் மீறப்படாதிருப்பதனைஉறுதிப்படுத்தும்படிஅரசைவலியுறுத்துகிறோம். மேலும் அதிகார துஷ்பிரயோகத்திற்குவழிகோலுவதன் ஊடாகமனிதஉரிமைகள் மீறலுக்குவழிவகுக்கும் நிறைவேற்றதிகாரத்தினையும், இராணுவமற்றும் பாதுகாப்புஅமைப்புகளின் அதிகாரத்தினையும் விசாலப்படுத்துவதற்கும் அப்பால் இதற்கானதீர்வினைக் காணும்படிநாம் அரசைவலியுறுத்துகிறோம்.
அமைதியாக இருக்கவும்,தேவையுள்ள இத்தருணத்தில் ஒருவருக்கொருவர் ஒருங்கிணைவைக் காட்டும்படியும் நாம் அனைத்துசமூகங்களையும்,குடிமக்களையும்வேண்டுகிறோம். சந்தேகத்திலோ,வெறுப்பிலோஅல்லதுவன்முறையிலோநாம் மூழ்கிவிடக் கூடாதுஎன்பதுடன் இன்னுமொருயுத்தத்திற்கோஅல்லது இன அல்லதுசமயபாரியமோதலுக்கோசென்றுவிடக் கூடாதுஎன்பதனைஉறுதிப்படுத்தநாம் அனைவரும் ஒன்றிணைந்துசெயற்படவேண்டும்.