சார்புநிலையை உடைத்தல் (IWD 2022)

சர்வதேச மகளிர் தினத்தை (IWD) கொண்டாடும் வகையில், மார்ச் 8 ஆம் திகதி நாம் சில சிறப்பு நிகழ்ச்சிகளைதிட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வுகள் பல காரணங்களுக்காக நமக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனென்றால், ஆண் ஆதிக்கம் செலுத்தும் பணியிடங்கள் வழியாகச் செல்லும்போது, தடைகளைத் தாண்டுவதற்கும், எதிர்கொள்ளும்எந்த விதமான பாகுபாடுகளையும் எதிர்கொள்வதற்கும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதில் அவை பெண்களை அங்கீகரிக்கின்றன. இப்பெண்கள் பாரபட்சத்தை உடைத்து சமூகத்திற்கு அவர்களின் பங்களிப்பைதொடர்வதற்காக அவர்களை கொண்டாடுகிறோம்.
மூத்த பத்திரிக்கையாளர் சீதா ரஞ்சனியைப் பாராட்டும் வகையில், அவரது முந்தைய பணிகள் மற்றும் சாதனைகள்குறித்து பேச ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்துள்ளோம். 1984 இல் WMC ஒரு அமைப்பாக உருவானபோதுசீதா பல ஆண்டுகளாக பெண்கள் மற்றும் ஊடகக் அமைப்பின் தோழியாக இருந்து வருகிறார். நாட்டில்பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மிகச் சில பெண்பத்திரிகையாளர்களில் இவரும் ஒருவர். எனவே, இந்த வருட மகளிர் தினத்திற்காக சீதாவை ஒரு பெண்பத்திரிகையாளராகவும், பெண்ணியவாதியாகவும், சிவில் சமூக ஆர்வலராகவும், கவிஞராகவும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் தங்கள் எண்ணங்கள், சவால்கள் மற்றும் அவர்கள் தங்கள் பணியிடத்தில்இந்த சவால்களை எவ்வாறு சமாளித்தார்கள் என்பதைப் பகிர்ந்து கொள்ளும் ஒலித்தொடர் இணையத்தில் இருக்கும். இந்த ஒலித் தொடர் நமது சமூக வலைதளங்களில் வெளியிடப்படும்.
கடைசியாக, ஊடகத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக 5 தமிழ்ப் பெண்களை பெண்கள் தினத்தில் நாம் பாராட்டு நிகழ்விற்கு நாம் ஆதரவளிக்கின்றோம்.
அவர்கள் ஊடகவியலாளர்களாக இருந்த காலத்தில் பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவம் தொடர்பானபிரச்சினைகளை எழுப்புவதில் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். வரும் நாட்களில் இந்த நிகழ்வுகள் பற்றிய கூடுதல் விவரங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள நாம் எதிர்பார்க்கின்றோம். நாங்கள் பகிரும் இடுகைகளை விரும்பி, பகிர்வதன் மற்றும் கருத்துத் தெரிவிப்பதன் மூலம்உங்கள் எண்ணங்களை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்!

Share the Post:

Related Posts