அன்பான நண்பர்களே மற்றும் சக ஆர்வலர்களே
இவ்வழிகாட்டல் வளத் தொகுப்பானது, தங்களுடைய நிறுவனத்தில் ஆவணமாக்கல் செயன்முறை மற்றும் தரவுகளைப் பேணும் நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் மற்றும் ஏற்கத்தக்க வகையில் முறைமைப்படுத்துவதற்கும் உதவியாகவுள்ள படிவங்கள், மாதிரி வடிவங்கள் மற்றும் செயற்கருவிகளின் தொகுப்பாகும். இவ்வழிகாட்டல் தொகுப்பு உங்களுடைய நிறுவனத்தின் அன்றாட நடவடிக்கைகளின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தல் மற்றும் பொறுப்புக் கூறலை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சிறந்த தரவுப் பேணுகையானது, நிறுவனத்தின் வினைத்திறனான இயக்கத்திற்கும் மற்றும் அதன் அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதற்கும் ஏதுவாக அமையும்.
உங்கள் நிறுவனத்தின் வெவ்வேறு தேவைகளுக்கு படிவங்களை உருவாக்க சிரமப்படுகிறீர்களா? இந்த அடிப்படை படிவங்களை நாங்கள் உங்களுக்கு வழங்குகின்றோம்:
- மனித வளங்கள்
- நிதி
- கருத்திட்ட முகாமைத்துவம்
- நிகழ்ச்சி முகாமைத்துவம்உங்கள் பணியை நீங்கள் சிறப்பாக செய்ய இந்த படிவங்களை பயன்படுத்துங்கள்.
உங்கள் முயற்சி மற்றும் சமூக பணி முன்னெப்போதையும் விட தற்பொழுது முக்கியமானது மற்றும் அவசியமானது.
உங்களுக்கு சக்தி,
பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு