Author: wnm@media

பிற்போடப்பட்டது: தெற்காசியாவில் ஊதியமற்ற பராமரிப்புப் பணி மற்றும் பெண்களின் உழைப்பு என்பவற்றை அங்கீகரிப்பதில் சமத்துவம் மற்றும் ஒப்புரவு பற்றிய மாநாடு.

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக, தெற்காசியாவில் ஊதியமற்ற பராமரிப்புப் பணி மற்றும் பெண்களின் உழைப்பு என்பவற்றை அங்கீகரிப்பதில் சமத்துவம் மற்றும் ஒப்புரவு பற்றிய மாநாடு 2022 ஜூலை மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது. மாநாட்டின் புதிய திகதி மிக விரைவில் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் இணையத்தளம் ஊடாக அறியத் தரப்படும். இதன் காரணமாக தங்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டிருப்பின், அதற்காக நாம் வருந்துகின்றோம்.

அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட ‘கோட்டாகோகம’ ஆர்ப்பாட்டத்திற்கு எதிரான தாக்குதல்கள் பற்றிய பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் அறிக்கை

மே 2022 காலி முகத்திடலில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த ‘கோட்டாகோகம’ ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டக் களம் ஆகியவற்றுக்கு எதிராக 2022 மே மாதம் 09 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது. பாரதூரமான முறையில் பொருளாதாரத்தை தவறாக முகாமைத்துவம் செய்தமை, பரவலான ஊழல் மற்றும் பொருளாதார நெருக்கடியை கடுமையாக அசட்டை செய்தமை ஆகிய செயற்பாடுகளானவை, அதிகரித்துவரும் பணவீக்கம், நாணய மதிப்பிழப்பு மற்றும் விலை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு மத்தியில், அத்தியாவசிய … Continue reading அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட ‘கோட்டாகோகம’ ஆர்ப்பாட்டத்திற்கு எதிரான தாக்குதல்கள் பற்றிய பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் அறிக்கை

இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான பெண்ணியவாதிகளின் அவசர வேண்டுகோள்!

இலங்கை, தனது சுதந்திரத்திற்குப் பின்னரான வரலாற்றில், மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குத் தற்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றது. உணவு மற்றும் எரிபொருளுக்கான பரவலான தட்டுப்பாடுகள் மக்களின் வாழ்க்கையை முடக்கியுள்ளன. ஏற்கனவே பல வாரங்களாக நீடித்த இந்த நிலைமையானது, தற்போது பாரிய அரசியல் அதிகாரச் சிக்கலாக உருவெடுத்துள்ளது. அரசியல் வர்க்கத்திற்கு எதிரான மக்களின் ஆழ்ந்த உணர்வுகளை கண்டுணரக் கூடியதாகவுள்ளதுடன், இப்பொருளாதாரச் சிக்கல் சாதாரண மக்கள் மத்தியில் பொருளாதார சிக்கல் முதன்மையானதும் உடனடியானதுமாகும்;. நாட்டின் பல பாகங்களிலும் சாதாரண மக்களின் அமைதியான … Continue reading இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான பெண்ணியவாதிகளின் அவசர வேண்டுகோள்!