Category: news

பொலிஸாரின் கொடூரத்தையும்,தண்டனைபயமின்மையினையும் கண்டிக்கும் அறிக்கை

முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத கொடுமை மற்றும் சீரழிவு நிலையை அடைந்துள்ள பொலிஸாரின் அட்டூழியம் தொடர்பில், பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு ஆழ்ந்த அதிர்ச்சியும்,கவலையும் வெளியிடுவதுடன் வன்மையாகக் கண்டிக்கிறது. இதுஉயர் மட்டங்களில் உடனடியாகவும் திறமையாகவும் தீர்க்கப்படவேண்டும். சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்துதல், அமைதியை உறுதிப்படுத்துதல் மற்றும் அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் பாதுகாத்தல் என்பனவே பொலிஸாரின் நோக்கமாகும். மாறாக,பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அவர்களது சட்டப்பூர்வ உரிமைகளைப் பயன்படுத்தும் குடிமக்களுக்கு எதிராகவன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் ஒருசக்தியாக இது மாறிவிட்டது. நவம்பர் 2022இல் … Continue reading பொலிஸாரின் கொடூரத்தையும்,தண்டனைபயமின்மையினையும் கண்டிக்கும் அறிக்கை

ஊதியம் பெறாத பராமரிப்பு பணி தொடர்பான பிராந்திய மாநாடு

சமூக விஞ்ஞானிகள் சங்கத்துடன் (SSA) இணைந்து பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு (WMC) நடத்திய தெற்காசியாவில் ஊதியம் பெறாத பராமரிப்பு வேலை மற்றும் பெண்களின் உழைப்பை அங்கீகரிப்பதில் ஒப்புரவு மற்றும் சமத்துவம் குறித்த பிராந்திய மாநாடு 2022, ஒக்டோபர் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் கொழும்பில் நிறைவடைந்தது. இலங்கையில் நடைபெறும் ஊதியமற்ற பராமரிப்பு வேலை (UCW) தொடர்பான முதலாவது மாநாடு இதுவாகும். இந்த மாநாட்டில் இலங்கையைச் சேர்ந்த கல்வியாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மற்றும் தெற்காசிய … Continue reading ஊதியம் பெறாத பராமரிப்பு பணி தொடர்பான பிராந்திய மாநாடு

ஊதியம் பெறாத பராமரிப்பு பணி தொடர்பான பிராந்திய மாநாடு

தெற்காசியாவில் ஊதியமற்ற பராமரிப்பு பணி மற்றும் பெண்களின் உழைப்பு என்பவற்றை அங்கீகரிப்பதில் சமத்துவம் மற்றும் ஒப்புரவு பற்றிய மாநாட்டினை 2022, ஒக்டோபர் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் சமூக விஞ்ஞானிகள் சங்கத்துடன் இணைந்து பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பானது ஒழுங்கு செய்திருந்தது. கல்வியியலாளர், உரிமைகள் செயற்பாட்டாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய இந்த மாநாட்டில் ஆற்றிய பிரதான உரையின் ஆவணம் இதுவாகும். இன்று இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றுமாறு என்னை அழைத்தமைக்காக மாநாட்டின் ஏற்பாட்டாளர்களுக்கு முதற்கண் … Continue reading ஊதியம் பெறாத பராமரிப்பு பணி தொடர்பான பிராந்திய மாநாடு

WMC TikTok “பராமரிப்புப் பணி பற்றி புதிதாக சிந்திப்போம்”

வீட்டுவேலைகளைப் பகிர்ந்துகொண்டு செய்கின்ற – வேலை அழுத்தத்தைக் குறைக்கின்ற புதியதொரு TikTok போட்டி நீங்கள் தற்போது பல்வேறு விடயங்கள் பற்றி பல TikTok காணொளிகளைத் தயாரித்திருப்பீர்கள். அவ்வாறாயின் கொஞ்சம் புதிய முறையில் ஒன்றைத் தயாரித்து எமக்கு அனுப்ப முடியுமா? நாளாந்தம் எமது வீடுகளில் பெண்கள் எந்தவொரு கொடுப்பனவோ ஊதியமோ இன்றி செய்கின்ற எல்லா ‘பராமரிப்பு வேலைகளும்’பற்றிய TikTok ஒன்றை தயாரித்து அனுப்புமாறு பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பாகிய நாம் உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். வீட்டு வேலை, பிள்ளைகளின் … Continue reading WMC TikTok “பராமரிப்புப் பணி பற்றி புதிதாக சிந்திப்போம்”

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான 25% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் பெண்கள் உரிமை அமைப்புகளின் அறிக்கை.

உள்ளூராட்சி நிறுவனங்கள் குறைவடையவுள்ளதைக் கருத்திற்கொள்ளாது, உள்ளூராட்சியில் காணப்படும் பெண்களுக்கான 25மூ இட ஒதுக்கீட்டைப் பேணிப் பாதுகாக்குமாறு பெண்கள் உரிமைகள் அமைப்புக்கள் கோரிக்கை விடுக்கின்றன. 2022 ஒக்டோபர் 10 கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு, பிரதிகள்: கௌரவ பிரதமர் தினேஷ; குணவர்த்தன மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர உள்ளூராட்சியில் பெண்களுக்கான 25மூ இட ஒதுக்கீட்டைப் பேணிப் பாதுகாத்தல் பல்வேறு மாவட்டங்களையும் சேர்ந்த ஐந்து பெண்கள் அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாம், இலங்கையில் … Continue reading உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான 25% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் பெண்கள் உரிமை அமைப்புகளின் அறிக்கை.