Category: Photos

WMC Film Festival 2007

சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடும் முகமாக ஒரு பெண்ணிய திரைப்பட விழாவானது ரஷ்ய காலாச்சார நிலையத்தில் 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26, 27, 28 ஆம் திகதிகளில் நடைபெற்றது. அங்கே தீபா மேதாவால் நெறிப்படுத்தப்பட்ட ஏத் மற்றும் நெறிப்படுத்தப்பட்ட கலண்டர் கேள்(Calendar Girls) மற்றும் மாக்கறெதவொண்ரொற்ற (Margarethe Vontrotta) ஆல் நெறிப்படுத்தப்பட்ட ரோசன்ரா (Rosentrasse) போன்ற படங்கள் திரையிடப்பட்டன. ஒவ்வொரு படமும் திரையிடப்பட்ட பின்பு படம் குறித்த கலந்துரையாடலானது பேராசிரியர் நெலுபர் டி மெல் … Continue reading WMC Film Festival 2007

International Women’s Day 2007

மார்ச் 08, 2007 ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினமானது சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான வலைஅமைப்புக்கு சொந்தமான 40 பெண்கள் நிறுவனங்களிலிருந்தான 1,000 க்கு மேற்பட்ட இலங்கைப் பெண்களினாலே கொண்டாடப்பட்டது. மொனராகலை, பொலநறுவை, கண்டி, ஹட்டன், புத்தளம், குருணாகல, அனுராதபுரம், மகியங்கணை, வில்பத்து, ரஜங்கனி, வெலிக்கந்த, சிங்கபுர, ஹம்பாந்தோட்டை, காலி, புத்தல, பதுளை, மாத்தறை, இரத்தினபுரி, நீர்கொழும்பு, களுத்துறை, கொழும்பு, மொறட்டுவ, ஜா எல, கட்டுநாயக்க, ஏக்கல, கந்தானை, நுவரெலிய, நிட்டம்புவ, மற்றும் கந்தளாய் போன்ற இடங்களிலிருந்து வந்த … Continue reading International Women’s Day 2007

International Day for the Elimination of Violence Against Women 2006

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாது ஒழிப்பதற்கான சர்வதேச தினமானது 2006 நவம்பர் 28 ஆம் திகதி.இதை கொழும்பில் கொண்டாடும் முகமாக ஒரு சிறு நாடக விழாவும், இசை நிகழ்ச்சியும் நடாத்தப்பட்டது. இவ்விழாவின் கருப்பொருளாக இருந்தது ‘வன்முறைகளில்லாத நாளை’ என்பதாகும். இவ் விழாவானது பொதுமக்களுக்கு கட்டணமின்றி திறந்துவிடப்பட்டிருந்ததுடன், WMC ஆனது பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்தும் விழிப்புணர்வை பொதுமக்களிடையே எழுப்புவதற்கு இச் சந்தரப்பத்தை பயன்படுத்திக்கொண்டது.

“Women say No to War”

WMC ஆனது இலங்கை ஜனாதிபதி மேன்மைதங்கிய மகிந்த ராஜபக்ஷவுக்கும், விடுதலைப்புலிகளுக்கும், பொலிஸ்மா அதிபருக்கும், மற்றும் ஆங்கில, சிங்கள மற்றும் தமிழ் செய்திப் பத்திரிகைகளுக்கும் பொறுப்பாக நடந்துகொள்ளும்படியும் இருதரப்பினரையும் கொல்லுவதை நிறுத்திக்கொள்ளும்படியும் கேட்டு இக் கூற்றை அனுப்பிவைத்திருந்தது. இக் கூற்றானது 118 பெண்களின் கையெழுத்துடன் அனுப்பட்டிருந்தது. இலங்கை செய்திப்பத்திரிகைகளான சண்டே ரைம்ஸ், லங்கா தீப, வீரகேசரியில் இக் கூற்றானது மே21 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டதுடன் 2006 ஆம் ஆண்டு 24 ஆம் திகதி டெயிலி நியூசிலும் பிரசுரிக்கப்பட்டது.

WMC Film Festival 2006

சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி 2006 மார்ச் 20, 21, 22 ஆம் திகதிகளில் ஒரு பெண்ணிய திரைப்பட விழாவானது கொழும்பு ரஷ்ய கலாச்சார நிலையத்தில் நடைபெற்றது. அத்திரைப்படவிழாவில் காட்சிப்படுத்தப்பட்ட திரைப்படங்களாவன 
கார்முஷ் பாணி (பாக்கிஸ்தானி பஞ்சாப்பில் உள்ள ஒரு முஸ்லிமுக்கு திருமணமான முன்னாள் இந்திய சீக்கிய பெண்ணின் வாழ்க்கையைப் பற்றியதும், இந்திய பிரிப்பு பற்றியதுமானது) – 
பக்கம் 3 ( பக்கம் 3, பெண் பத்திரிகையாளர் பற்றியதும் அவளுடைய மிகவும் அர்த்தபுஷ்டியான பத்திரிகை அறிக்கைகள் மற்றும்அவளுடைய அதிகமான … Continue reading WMC Film Festival 2006