Consultation on proposing a General Recommendation on ‘Women and Armed Conflict’ to the CEDAW Committee

2006 டிசெம்பர் 7 
களுத்துறை – இலங்கை WMC ஆனது சர்வதேச பெண்கள் உரிமைச் செயற்பாட்டு கண்காணிப்பு ஆசிய பசுபிக் நிறுவனத்துடன் கூட்டிணைந்து (IWRAW-AP)    சீடோ குழுவிற்கான, – பெண்களும் ஆயுத முரண்பாடும் – மீதான ஒரு புது சிபார்சுகளை முன்மொழிவதற்கான கலந்துரையாடல்களுக்கான ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடாத்தியது. திருமதி சாந்தி தையரியம் சீடோக் குழு உறுப்பினர் மற்றும் (IWRAW-AP) முன்னாள் நிறைவேற்றுப்பணிப்பாளர் இக் கூட்டத்திற்கு வசதிஏற்பாடுகளைச் செய்தனர். இக் கூட்டத்தின் நோக்கமானது  சீடோ சமவாயத்தில் பொதுவான சிபார்சுகளில் இதுவரை ஏற்படுத்தப்பட்டிராத ‘பெண்களும் ஆயுத முரண்பாடும்’ மீது கவனம் செலுத்தும் ஒரு செயன்முறையை ஆரம்பிப்பதற்கான தேவையை உள்ளடக்கி இருந்தது. இக் கலந்துரையடலானது இலங்கையின் நோக்கிலிருந்து முரண்பாட்டின் வேறுபட்ட கட்டங்களை இனங்கண்டிருந்தது. ஆனாலும் இது இலங்கைக்கு உரித்ததாக வரையறுத்தோ அன்றேல் இலங்கைக்கு விசேடித்ததாகவோ இருக்கவில்லை. பொதுவாக சிபார்சுகளின் நோக்கமாக இருப்பது அரசுகளின் கடப்பாடுகளை வரையறுத்துக் காட்டுவதே ஆகும். அதாவது முரண்பாட்டு நேரங்களில் மீறப்படக்கூடிய மக்களின் உரிமைகளானவை இந்த சிபார்சுகளில் இனங்காணப்படுவதாகும். பொதுவான சிபார்சுகளானவை உரிமை விடயங்களை தீர்ப்பதுடன் மரியாதை, பாதுகாப்பு, உரிமைகளை ஊக்குவித்தல் மற்றும் பூர்த்தி செய்தல் என்பவற்றை உள்ளடக்கியிருக்க வேண்டும்.