Head of Household Meeting

WMC ஆனது 2005 ஜுலை 25 ஆம் திகதி CENWOR கலையரங்கிலே குடும்பத்தலைவர்கள் கருத்துநிலையை மீளப்பரிசோதிப்பது மீதான ஒரு பயிற்சிப் பட்டறையை ஒழுங்கு செய்திருந்தது. அது சம்பந்தமான துறை சார்ந்தோரினால் பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. உரிமைகளை அடிப்படையாக வைத்து, குடும்பத்தலைவர்கள் குறித்த கருத்துநிலையை மீளப்பரிசோதிப்பதற்கான கட்டமைப்பு வேலையாக இது அமைந்தது. காணியுரிமைகளும் குடும்பத்தலைவரும், குடிசனமதிப்பீடும் குடும்பத்தலைவர் என்ற கருத்துநிலையும், சுனாமிக்குப்பின் அதிலிருந்து மீழல், நிவாரணம் போன்ற பிரச்சினைகள் தொடர்பில் குடும்பத்தலைவர் என்ற கருத்துநிலையும் நடைமுறையும் எப்படி இருந்தது சமயமற்றும் கலாச்சார நடைமுறைகளில் குடும்பத்தலைவர்கள் என்ற கருத்துநிலை, ஊடகம் வெளிப்படுத்தும் குடும்பம் மற்றும் குடும்பக்கட்டமைப்பின் மாற்றம், போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இப்பயிற்சிப்பட்டறையின் இலக்கு வீட்டுத்தலைவர் கருத்துநிலையை கலந்துரையாடுவதாகும். சமூகத்தில் இது எவ்வாறு அமைக்கப்பட்டது. இதைப்பற்றி சட்டம் அல்லது அரசியலமைப்பு சொல்லுவது என்ன? CENWOR கட்டமைப்பை பயன்படுத்தி பெண்களின் உரிமைகளை இனங்காணுவதும் சிபார்சுகளை உருவாக்குவதும் மற்றும் அவைகளை கொள்கை உருவாக்கல் மட்டத்திற்கு எடுத்துச் செல்வதும் ஆகும். WMC ஆனது பெண்கள் மீதான தேசிய குழு, நீதியமைச்சு என்பவற்றுடன் கூட்டுழைத்து பெண்கள் உரிமைகள் சட்டமூலத்தை உருவாக்குவதில் சம்பந்தப்பட்டது. இச்சட்டமூலமானது தற்போது இலங்கைப் பாராளுமன்றத்தின் பார்வையில் உள்ளது. WMC ஆனது பாராளுமன்றத்தில் ஆகஸ்டில் நிறைவேற்றப்பட்ட வீட்டு வன்முறை தடைச் சட்டத்திற்காக வெற்றிகரமாக பரிந்துரைத்தது.