International Women’s Day 2007

மார்ச் 08, 2007 ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினமானது சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான வலைஅமைப்புக்கு சொந்தமான 40 பெண்கள் நிறுவனங்களிலிருந்தான 1,000 க்கு மேற்பட்ட இலங்கைப் பெண்களினாலே கொண்டாடப்பட்டது. மொனராகலை, பொலநறுவை, கண்டி, ஹட்டன், புத்தளம், குருணாகல, அனுராதபுரம், மகியங்கணை, வில்பத்து, ரஜங்கனி, வெலிக்கந்த, சிங்கபுர, ஹம்பாந்தோட்டை, காலி, புத்தல, பதுளை, மாத்தறை, இரத்தினபுரி, நீர்கொழும்பு, களுத்துறை, கொழும்பு, மொறட்டுவ, ஜா எல, கட்டுநாயக்க, ஏக்கல, கந்தானை, நுவரெலிய, நிட்டம்புவ, மற்றும் கந்தளாய் போன்ற இடங்களிலிருந்து வந்த பெண்கள் கலந்துகொண்டனர். “அமைதிக்கும் ஆளுவதற்குமான உரிமையைப் பாதுகாப்போம்” என்ற கருப்பொருளை அடிப்படையாக அமைந்த வழிமறிப்பு அணிநடையானது கோட்டை ரயில்வே நிலையத்திற்கு வெளியே நடைபெற்றதுடன், புத்தளத்தை தளமாகக் கொண்ட பெண்கள் நிறுவனமாகிய   Praja Diriya Padanama யினால் நடாத்தப்பட்ட ஏதேச்சையான வீதி நாடகமும் இடம்பெற்றது. எக்கல பெண்கள் நிலையத்தால் வடிவமைக்கப்பட்ட ஆக்கபூர்வமான பதாதையின் அம்சங்களைக் கொண்ட ஒரு அட்டை ஒன்றை WMC ஆனது உருவாக்கியிருந்தது. பதாதையானது 2007 ஆம் ஆண்டு சர்வதேச சமாதான தினத்தில் WMC ஆல் ஒழுங்கு செய்யப்பட்ட வீதிக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. அட்டைகள் உட்பகுதி வெறுமையாக இருந்ததுடன், எந்தச் சந்தர்ப்பத்திற்கும் பயன்படுத்தக்கூடியதாக இருந்தது. ஒவ்வொரு அட்டையும் 25/- விலையுடையதாகும். இவ் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள சுலோச்சானவை அல்லது சித்திராவை 2690201 அல்லது 5632045 உடன் தொடர்பு கொள்ளவும். 
கார்ட்டின் முன்பக்கத்தைப் பார்க்க|பின்பக்கத்தைப் பார்க்க. 
புகைப்படங்களைப் பார்க்க இங்கே சொடுக்குக.

gallery columns=”4″ ids=”1700,1699,1698,1697,1696,1695,1694,1693,1691,1690,1689,1688,1687,1686,1685,1684,1683″]