“Kadathurawen Eha” – Tamil radio clips

பெண்கள் பிரச்சினைகளில் முக்கியமாக கவனம் செலுத்தும் வெள்ளித் திரைக்கு அப்பால்” என அழைக்கப்படும் 5 நிமிட நீளமான ஒலிபரப்புக்ள் 60ஐ WMCதயாரித்தது. இவ் ஒலிபரப்புகளானவை சிங்கள வர்த்தக சேவை வானொலி நிலையங்கள் ஊடாக ஒலிபரப்புச் செய்யப்பட்டதுடன், நேயர்களிடமிருந்து சாதகமான பதில்களையளயும் பெற்றுக்கொண்டது. தமிழிலும் இவற்றை  ஒலிபரப்புமாறு நேயர்களிடமிருந்து வேண்டுகோள் கிடைத்தது. அதன் விளைவாக தமிழ் ஒலிபரப்புகள் தென்றல் FM  (104.8, 105.6, 107.9 FM) இல் காலைச் செய்திக்கு முன்பாக காலை 5.51மணியளவில் ஒலிபரப்பப்பட்டது. இவை 2009 ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து மார்ச் 02 ஆம் திகதி வரை ஒலிபரப்பப்பட்டது. இவற்றின்  கருப்பொருள் உள்ளடக்கமானது பெண்களின் உரிமைகள், பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் தொந்தரவு, சர்வதேச பெண்கள்தினம், புலம்பெயர் தொழிலாளர்கள், பெண்கள் தோட்டத்துறை பணியாளர்கள், அரசியலில் பெண்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் ஊடகம் என்பது தொடர்பான விடயங்களை கொண்டவை. இந்த உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நிகழ்ச்சியின் இறுதியில் வினாக்கள் கேட்கப்பட்டு நேயர்கள் பதில்கள் அனுப்பும்படி கேட்கப்பட்டார்கள். வெற்றியாளர்களுக்கு பணப் பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், திருகோணமலை, மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு, மற்றும் கண்டி போன்ற இடங்களில் இருந்து பல சாதகமான பதில்களும் கிடைத்திருந்தன.