Let’s ensure migrant workers voting rights! (IMD 2014)

IMAGE2014 டிசெம்பர 18 ஆம் திகதி சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தைக் கொண்டாடுவோம்!

நாம் 2014 ஆம் ஆண்டு 15 வது புலம்பெயர்ந்தோர் தினத்தைக் கொண்டாடுகின்றௌம்.

டிசெம்பர் 18 ஆம் திகதியை சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினமாக 2000 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியது. அன்று தொடக்கம் இன்று வரை உலகத்தின் பெரும்பாலான நாடுகளில்இ குறிப்பாக புலம்பெயர் சேவைக்காக ஊழியர்களை அனுப்பும் நாடுகளில் இத்தினம் கொண்டாடப்படுகின்றது.

உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியமான பங்களிப்பு புலம்பெயர் தொழிலாளர்களால்; கிடைக்கப்படுவது இனங்காணப்பட்டுள்ளதோடு புலம்பெயர் தொழிலாளர்களின்; உரிமைகள் மனித உரிமைகளாகவூம் கருதப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியூறுத்துகின்றது.

பெரும்பாலான நாடுகளில் பொருளாதார இருப்புக்கு புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து கிடைக்கின்ற அந்நியச் செலாவணி உந்து சக்தியாக அமைந்துள்ளது. உலக வங்கி அறிக்கையின்; பிரகாரம் புலம்பெயர் தொழிலாளர்களினால் தெற்காசியாவூக்குக் கிடைக்கின்ற அந்நியச் செலாவணி வருடமொன்றுக்கு 111 பில்லியன் டொலர்களாகும். தற்கால இலங்கையின் பிரதான வருமான வழியாக அமைந்திருப்பதும் புலம்பெயர் தொழிலாளர்களால்; ஈட்டப்படுகின்ற அந்நியச் செலாவணியாகும். அது வருடமொன்றுக்கு 7 பில்லியன் டொலர்களாகும். இதன் காரணமாகவே புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும்இ அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தனித்துவமான சுற்றுச்சூழல் எமது நாட்டிலும் உருவாகி வருகின்றது. இருப்பினும் புலம்பெயர் தொழிலாளர்கள் முகங்கொடுக்கின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகள்இ துன்புறுத்தல்கள் மற்றும் சிரமங்களுக்குக் குறைவே கிடையாது. இதன்போது புலம்பெயர் பெண்களின் நிலைமை விசேடமாகும். இலங்கையைப் பொறுத்த மட்டில் வெளிநாட்டுத் தொழிலுக்காகச் செல்கின்ற இலங்கையர்களின் பெரும்பாண்மையினர் பெண்களாவார்கள். அவர்களுள் பெரும்பாலானோர் பிந்தங்கிய பிரதேசங்களிலிருந்து வருகை தருபவர்களாவார்கள். குடும்பங்கள் முகங்கொடுத்துள்ள பாரிய பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக இப்பெண்கள் குடும்பப் பொருளாதாரச் சுமையை தம் தோள் மீது சுமந்து கொண்டு வெளிநாட்டுத் தொழில்களைத் தேடிச் செல்கின்றனர்.

இந்த ஆண்டு புலம்பெயர்ந்தோர் தினத்தை நாம் நாடு பூராகவூம் தேர்தல் சுற்றுச்சூழல் நிலவூகின்ற ஒரு சந்தர்ப்பத்திலேயே கொண்டாட வேண்டியேற்பட்டுள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு அவர்கள் தமது நாடுகளுக்கு வெளியிலிருந்து தொழில் புரியூம்போது தாம் தொழில்புரியூம் நாட்டிலிருந்துகொண்டு வாக்களிப்பதற்கான உரிமை கிடைக்கப்பட்டிருப்பினும் இலங்கைப் புலம்பெயர் மக்களுக்கு அத்தகைய வாக்குரிமை இன்னும் கிடைக்கப்படவில்லை. இந்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு அல்லது அரசியல் வாதிகளுக்கு அது பற்றிய எதுவித எண்ணமும் கிடையாதெனத் தெரிகின்றது. காரணம் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் அல்லது மேடைகளில் இது தொடர்பாக எதனையூம் அவர்கள் குறிப்பிடுவது இல்லையென்பதேயாகும். இதற்கு முன்னர் நடத்தப்பட்ட தேர்தல்களின்போதும் எந்தவொரு வேட்பாளரும் புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்குரிமை தொடர்பாகப் பேசிய சந்தர்ப்பங்களைக் காணவே முடியாது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம்இ சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சமவாயம் மற்றும் அனைத்துப் புலம்பெயர் தொழிலாளர்களினதும் உரிமைகளைப் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாயம் போன்ற சர்வதேசப் பிரகடனங்கள்இ சமவாயங்கள் மற்றும் மாநாடுகள் மூலம் மேற்கொண்டும் புலம்பெயர்ந்தோரின் வாக்குரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையானது மேற்படி சமவாயங்களை ஒப்பமிட்டு ஏற்றுக்கொண்டுள்ளதொரு தரப்பாகும். இருப்பினும் நாட்டுக்குள் அல்லது நாட்டுக்கு வெளியில் வாழ்கின்றஇ தொழில்களில் ஈடுபடுகின்ற புலம்பெயர்ந்தோருக்கு தமது நாட்டின் தலைவர்களைத் தெரிவூ செய்யூம்போது வாக்களிப்பதற்கு சர்வதேசச் சமவாயங்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மேற்படி உரிமையை அனுபவிப்பதற்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கைப் புலம்பெயர் தொழிலாளர்களால்; முடியவில்லை. அதற்கான காரணமாக அமைந்திருப்பது அரசாங்கம் அதன்பொருட்டுத் தேவையான சட்ட திட்டங்களையூம்இ ஏற்பாடுகளையூம்இ கொள்கைகளையூம் வகுக்கவில்லையென்பதாகும்.

நமது நாட்டு அரசியலமைப்பின் மூலம் சகல பிரஜைகளினதும் வாக்குரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு அதன் பிரகாரம் 4 ஆம் உறுப்புரைக்கமைவாக 18 வயதைக் கடந்த சகல பிரஜைகளுக்கும் வாக்குரிமை உரித்தாகும். இருப்பினும் இலங்கைப் புலம்பெயர்ந்தோருக்குஇ தேர்தல்கள் சட்டத்தின் இன்று நடைமுறையிலுள்ள சட்டத்தின்படி தமது வாக்கினைப் பயன்படுத்தவதற்கு உள்நாட்டு ரீதியான சட்ட ஏற்பாடுகளை வகுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. நாட்டுக்கு அந்நியச் செலாவணியை கொண்டுவந்து நாட்டின் பொருளாதாரத்தினது அதிக பங்கினை தம் தோள் மீது சுமக்கின்ற புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தமது நாட்டில் இடம்பெறுகின்ற தேர்தல்களின்போது தமது வாக்கினை தாம் தற்காலத்தில் குடியூள்ள நாட்டிலிருந்து அளிப்பதற்கு முடிந்த வகையில் தேர்தல்கள் சட்டத்தைத் திருத்துவதற்கு அல்லது புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும். மேற்படி புலம்பெயர் தொழிலாளர்கள் எண்ணிக்கையானது வாக்களார் இடாப்பில் கனிசமான விகிதத்தைக் கொண்டுள்ளது. இருப்பினும் இதுவரையூம் எந்தவொரு அரசாங்கமும் புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்குரிமை தொடர்பாக இதுவரை எதுவித கவனமும் செலுத்தவில்லை என்பது தெட்டத் தௌpவாகும்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தமது வாக்குரிமையை தமது நாட்டு ஆட்சியாளர்களைஇ மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவூ செய்யூம் சந்தர்ப்பங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமானால் தேர்தல்களில் போட்டியிடுகின்ற ஒவ்வொரு கட்சியூம் ஒவ்வொரு வேட்பாளரும் குறிப்பிட்ட தொழிலாளர்கள் சம்பந்தமாக விசேட கவனஞ் செலுத்த வேண்டியேற்படும். பலம்பொருந்திய வாக்காளர்களாக மாறுவதற்கு புலம்பெயர் மக்களுக்கு வாய்ப்புக்கிடைக்குமானால் அவர்களது உரிமைகள் சம்பந்தப்பட்ட பல அரச கொள்கைகள் சம்பந்தமாக அழுத்தம் கொடுப்பதற்கு அவர்களுக்கு இயலுமாக இருக்கும். அதேவேளைஇ தமக்கான தொழில் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதைத் தவிர தமது மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவூ செய்வதற்காக இப் புலம்பெயர் தொழிலாளர்கள் கொண்டுள்ள சனநாயக உரிமையூம் அதன் மூலம் உறுதிப்படுத்தப்படும். அதன்மூலம் ஏனைய பிரஜைகளைப் போலவே ஒரு நாட்டின் தேசியக் கொள்கை வகுத்தலின்போது அழுத்தம் பிரியோகிக்கக்கூடிய ஒரு பகுதி மக்களாக அவர்களது முக்கியத்துவம் மிகவூம் பயனுள்ள வகையில் சமூகமயப்படுத்தப்படும்.

இலங்கையர்கள் புலம்பெயர் தொழிலாளர்களாக இருக்கும்போது அல்லது உள்நாட்டு ரீதியல் மாகாணத்திற்கு மாகாணம் இடம்பெயர்ந்துள்ள சந்தர்ப்பங்களில் அமுலுக்கு வரும் வகையில் சகல புலம்பெயர்ந்தோர் தொடர்பாகவூம் வாக்குரிமை பற்றிய சட்டங்களை அறிமுகப்படுத்தலாம். தாம் வாழ்கின்ற நாட்டில் அல்லது பிரதேசத்தில் இருந்து அவர்கள் வாக்களிக்கக்கூடிய வகையில் தேர்தல்கள் சட்டங்களைத் திருத்தலாமென்பது எமது நம்பிக்கையாகும். இதன்போது உலகின் சில நாடுகள் நடைமுறைப்படுத்துகின்ற வகையில் தபால் மூல வாக்களிப்பு முறை அல்லது வேறொரு சாதாரண வாக்களிப்பு முறையொன்றை அறிமுகப்படுத்தலாம். புலம்பெயர் தொழிலாளர்களுக்காக அந்தந்த நாடுகளில் தாபிக்கப்பட்டுள்ள இலங்கைத் துhதரகங்களை தற்காலிக தேர்தல்கள் அலுவலகங்களாக மாற்றியமைத்துக் கொள்ள முடியூம். அத்தகையதொரு ஏற்பாட்டினை நடைமுறைப்படுத்தும்போது கனிசமான அளவூ சிரமங்கள் ஏற்படலாமென்பதில் சந்தேகம் கிடையாது. இருப்பினும் அத்தகைய நடவடிக்கைகள் பிற நாடுகளால் எடுக்கப்பட்டுள்ளமையினால் அந்த நாடுகளுக்குரிய அனுபவங்களின் மூலம் நாமும் பயன்பெற முடியூம்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான செயலுhக்க வலைப்பின்னலைச் சேர்ந்த நாங்கள் கோருவதாவது புலம்பெயர்ந்தோர் தமது வாக்கினைப் பயன்படுத்தக்கூடிய வகையில் சட்ட ஏற்பாடுகளை ஏற்படுத்துமாறும் அச்சட்டங்களை நடைமுறைப்படுத்தக்கூடிய வகையில் நடைமுறைச்சாத்தியமானதும் முறையானதுமான பொறிமுறையொன்றை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கையெடுக்குமாறும் என்பதாகும். அதன் மூலம் புலம்பெயர்ந்தோரின் அடிப்படை சனநாயக உரிமைகள் உறுதிப்படுத்தப்படுவதைப் போலவே நாட்டை ஆட்சி செய்வதற்கு தெரிவூ செய்யப்படுகின்ற ஆட்சியாளர்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவூம் கவனஞ் செலுத்த வேண்டியேற்படும்.

நாட்டில் சனாதிபதித் தேர்தல் நடத்தப்படவூள்ள இத்தருணத்தில் அரச கொள்கை வகுப்பாளர்களிடமிருந்தும் சகல அரசியல் கட்சிகளிடமிருந்தும் வேண்டப்படும் எமது கோரிக்கை யாதெனில் இலங்கை ஒப்பமிட்டு ஏற்றுக்கொண்டுள்ள சர்வதேச சமவாயங்களுக்கு ஏற்புடையதாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கைப் புலம்பெயர் தொழிலாளர்களின் சர்வஜன வாக்குரிமையைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் நடவடிக்கை எடுங்கள் என்பதாகும். மேற்படி ஊழியர்களுக்கு தாம் தொழில் புரியூம் நாட்டில் இருந்து தமது வாக்குகளைப் பயன்படுத்தக்கூடிய வகையில் புதிய சட்டதிட்டங்களையூம்இ கொள்கைகளையூம் வகுங்கள் என்பதாகும். புலம்பெயர்ந்தோரின் வாக்குரிமையை பாதுகாக்கவூம் என்பதாகும்.

புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்துவோம்.

வயலா பெரேரா
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான செயற்பாட்டு வலையமைப்பு
பெண்கள்இ ஊடகக் கூட்டமைப்பு

Article Tamil
Published in Veerakesari (18.12.14)