Production of Feminist Programmes on Television

WMC ஆனது Young Asia Television உடன் இணைந்து 30 நிமிட உரைக்காட்சிகளை (talk shows) ஆங்கிலம், சிங்களம், மற்றும் தமிழில் உருவாக்கியது. இவ்வுரைக்காட்சிகளனது பல்வேறுபட்ட சமூகப் பிரச்சினைகளையும் பெண்ணிலை நோக்கிலிருந்து பேசப்பட்டவையகும்   உரைக்காட்சித்துறையில் மிகவும் வெற்றிடமாக இருந்தாக உணரப்பட்டவைகளை பூர்த்தி செய்யும் நோக்குடனே இது ஆரம்பிக்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் கலந்துரையாடப்பட்ட விடயங்களானவை முரண்பாட்டுத் தீர்வும் பெண்கள் பிரதிநிதித்துவமும், அரசியல் சூழமைவில் பெண்களின் பங்குபற்றுகை, இனப்பெருக்கச் சுகாதாரமும் பாலியலும், ஊடகத்தில் பெண்களின் பிரதிநிதித்துவமும், அரசியலமைப்பும் பெண்கள் உரிமைகளும், பெண்கள் அபிவிருத்தியும் பொருளாதாரமும், தொழிலும் வேலைவாய்ப்பும் மற்றும் குறிப்பாக பால்நிலையும் குடும்பத்தில் பெண்களின் வகிபங்கும் எனும் விடயங்கள் பேசப்பட்டன. இவ் உரைக்காட்சிகளானவை 2008 இல் TNL  மூலமாக ஒலிபரப்பப்பட்டன.