Strengthening Governance and Increasing Women’s Representation in Local Government (Kurunegala, Monaragala, Badulla)

ஜனவரி, ஏப்ரல்  2008
 – 
WMC ஆனது இந்நிகழ்ச்சித்திட்டத்தை 2007 ஆம் ஆண்டில் தொடக்கியதுடன் இது 2008 ஆம் ஆண்டு வரை பெண்களின் உள்ளுராட்சி அறிவினை அதிகரித்தல், உள்ளுராட்சி தேர்தல்களில் அவர்கள் போட்டியிடுவதற்கான இயலுமையைக் கட்டியெழுப்புதல், நல்லாட்சியில் அவர்கள் ஈடுபட உதவுதல், என்பவற்றை இலக்குகளாகக் கொண்டு தொடரப்பட்டது. அவதானிப்புக் குழுக்களானவை குருணாகலை, மொனராகலை, மற்றும் பதுளையில் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி சபைகளை கண்காணிப்பதை தொடர்ந்தன. மொத்தத்தில் 3 மாவட்டங்களிலும் 14 உள்ளுராட்சி சபைகள் 25 பெண் அவதானிப்பாளர்களால் அவதானிக்கப்பட்டன. அக்காலப்பகுதியில் பூர்த்தி செய்யப்பட்ட செயற்பாடுகளாவன பின்வருமாறு :

 

1) கண்காணித்தல் (அவதானித்தல்) அவதானிப்புக் குழுவானது கண்காணிப்பு செயன்முறையினைத் தொடர்ந்தது. கலந்துரையாடல்களின் முக்கிய கருப்பொருள்களை பிரதான இலக்குகளாக இனங்கண்டு பிரச்சினைகளுக்கும் தொடர்புடைய குறைபாடுகளையும் தீர்த்தது. இதன் ஒரு பிரதான பின்விளைவு என்னவெனில் உள்ளுராட்சி சபைகளுக்கான பால்நிலைக் கூருணர்வு பாதீடு மீதான பயிற்சிக்காகத் தேவைப்படும் தகவல்களை சேகரித்து உறுதிப்படுத்திக்கொள்ளக் கூடியதாக இருந்தது.

 

2) மாவட்ட மட்டத்தல் பரிந்துரைத்தலும் விழிப்புணர்வை ஏற்படுத்தலும் சனசமூக அடிப்படையிலான நிறுவனங்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கும் இலக்குடன் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சிசபைகள் சிலவற்றில் ஒருநாள் பயிற்சிப்பட்டறைகள் நடாத்தப்பட்டன.. பயிற்சிபட்டறைகள் ஆவன பின்வருமாறு நடைபெற்றது.

 

பதுளை நகரசபை மற்றும் பிரதேசசபை 2008 ஆம் ஆண்டு பெப்ருவரி 16 ஆம் திகதி

பண்டாரவளை நகரசபை மற்றும் பண்டாரவளை பிரதேசசபை 18 ஆம் திகதி ஜனவரி 2008

மொனராகலை பிரதேசசபை 27ஆம் திகதி ஏப்ரல் 2008

படல்கும்புர பிரதேசசபை  2008 பெப்ருவரி 20 ஆம் திகதி

புத்தல பிரதேசசபை 2008 ஏப்ரல் 28ஆம் திகதி

 

முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்திய இந்த பெருமளவிலானோர் பங்குபற்றிய பயிற்சிப்பட்டறைகளானவை அடுத்த வரவு செலவுத்திட்டத்திற்கு முன்பாக உள்ளுராட்சி அமைப்புகளுக்கு அவர்களுடைய தேவைப்பாடுகள் மற்றும் பெண்களின் முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதை உள்ளடக்கியிருந்ததுடன், கட்சி பேதமின்றி பெண் வேட்பாளர்களை ஆதரவளித்தல், அரசியல்கட்சிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் என்பவற்றையும் உள்ளடக்கியிருந்தது.

 

3) கள விஜயங்களும் அறிவைப் பகிர்ந்துகொள்ளலும். கள விஜயங்கள் ஊடாக சனசமூகங்களையும் அவர்களுடைய பிரச்சினைகளையும் அறிந்துகொள்ளுதலும் அடிமட்டத்தில் அவர்களின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்த்துவைத்தல் என்ற சிறந்த புரிந்துணர்வைப் பெற்றுக்கொள்ளுதல். மாவட்டங்களிடையே அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான ஒரு மூலமாக களவிஜயங்கள் அமைந்திருப்பதுடன், அதன் நிமித்தமாக WMC யின் வலைப்பின்னல் இயலுமையையும், கள அனுபவத்தையும் அதிகரித்திருக்கிறது.