Strengthening Governance and Increasing Women’s Representation in Local Government (Kurunegala, Monaragala, Badulla)

மே, ஆகஸ்ட் 2008
 – 
WMC ஆனது 2007ஆம் ஆண்டிலே இக் கருத்திட்டத்தை முன்னெடுத்ததுடன், 2008 ஆம்ஆண்டு வரையும் உள்ளுராட்சித் தேர்தல்களில் பங்குபற்றுவதற்கான அவர்களின் இயலுமையைக் கட்டியெழுப்புதல் நல்லாட்சியில் அவர்கள் தகுதிபெற உதவுதல் போன்ற அதனது அதே இலக்குகளைக் இலக்காகக் கொண்டு அது தொடர்ந்து இருந்தது. அவதானிப்புக் குழுக்களானவை தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி சபைகளாகிய குருணாகலை, மொனராகலை, பதுளையில் தமது கண்காணிப்புக்களைத் தொடர்ந்து செய்து வந்தன. மொத்தமாக 3 மாவட்டங்களிலே உள்ள 14 உள்ளுராட்சி சபைகளை 25 பெண் அவதானிப்பாளர்கள் அவதானித்தனர். அக்காலப்பகுதிக்காகப் பூர்த்தி செய்யப்பட்ட செயற்பாடுகள் பின்வருமாறு: கண்காணித்தல் (அவதானித்தல்) 
1)  எல்லா உள்ளுராட்சி சபையிலும் மாதாந்த அடிப்படையில் கூட்டங்களில் தொடர்ந்து பங்குபற்றுவதன் ஊடாக உள்ளுராட்சி செயன்முறைகளை அவதானித்தல். பங்குபற்றும் பெண்கள் ஒருவர் ஒருவருடன் தமது அனுபவங்களைப் பகிர சந்தர்ப்பம் அளிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதாந்த அனுபவம் பகிரும் கூட்டங்களும் இடம்பெற்றன. உள்ளுராட்சி சபை பிரதிநிதிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் சமகாலப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அவதானிப்பாளர்களுடன் கூட்டுழைத்து பணியாற்றினர். தீர்க்கப்பட  வேண்டிய பொதுப் பிரச்சினைகளை கவனத்தில் எடுப்பதற்கு உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு செல்வாக்கு செலுத்துவதற்கு அவதானிப்பாளர்களால் இயலக் கூடியதாக இருந்தது. 
2) மாவட்ட மட்டத்தில் பரிந்துரைத்தல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தல். இந்த நிகழ்ச்சித்திட்டங்களின் பிரதான இலக்காக இருந்தது. சனசமூக நிறுவனங்கள், பெண்கள் நிறுவன செயற்பாட்டாளர்கள் மற்றும் உள்ளுராட்சிசபை உறுப்பினர்கள் என்போரிடையே உள்ளுராட்சி அமர்வுகளின் அவதானிப்பின்போது சேகரிக்கப்படும் தகவல்களைப் பகுப்பாய்வு செய்வதன் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சித்திட்டங்களின் பிரதான இலக்காக இருந்தது. செயற்பாடுகள் பின்வருமாறு. 
- குருணாகலையில் மே 15ஆம் திகதி கூட்டம் நடைபெற்றது. 
- மே 24 ஆம் திகதி பதுளையில், பால்நிலை வரவு செலவூத்திட்டம் மீதான பயிற்சி 
- மே 25 ஆம் திகதி மொனராகலையில்,  பால்நிலை வரவு செலவூத்திட்டம் மீதான பயிற்சி  ஜுன் 23 ஆம் திகதி கொழும்பில் செயற்திட்டக் கூட்டம் நடைபெற்றது. இச் பயிற்சிப்பட்டறைகள் ஊடாக சாதிக்கப்பட்ட முக்கியமான மாற்றங்களாவன. வரவிருக்கும் தேர்தல்களுக்கு முன்பாக உள்ளுராட்சி அதிகாரத்துவத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் நல்ல ஒரு அத்திபாரத்தை அமைப்பதுடன், உள்ளுராட்சி சபைகளில் சனசமூகங்களுக்காக பெண்களின் நியமனங்களை உள்ளடக்குவதற்காக உள்ளுராட்சிசபைகளின் சிபார்சுகள், உள்ளுராட்சி சபைகளில் வரவு செலவுத்திட்ட வரைபுகளுக்குப் பொறுப்பாக உள்ள உரிய அதிகாரிகளிடையே பால்நிலை வரவு செலவுத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வை உருவாக்குதல் என்பனவாகும். 
3) கள விஜயங்களும் பகிர்ந்துகொள்ளலும்: கடந்த வருடம் போன்றே சனசமூகங்களையும் அவற்றின் பிரச்சினைகளையும் களவிஜயங்கள் ஊடாக அறிந்து கொள்வதானது கீழ்மட்டத்திலான பிரச்சினைகளை எவ்வாறு தீர்த்துக்கொள்வது என்ற புரிந்துணர்வை ஏற்படுத்தும். இக் கள விஜயங்களானவை மாவட்ட மட்டத்திலான அனுபவப் பகிர்வுக்கு  மூலமாக இருப்பதுடன் WMC வின் வலைப்பின்னல் இயலுமையையும், கள அனுபவங்களையும் அதிகரித்தது.