University students from New York and Colombo visit WMC

இலங்கையில் பெண்கள் உரிமைகள் சார்ந்த பிரச்சினைகளை இனங்கண்டு அடையாளப்படுத்துவதில் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் வகிபாகத்தைப் பற்றியும், பால்நிலை சமத்துவத்தை அடைந்துகொள்வதில் அதன் பொருத்தப்பாடு பற்றியும் மேலதிக கற்றல்களை மேற்கொள்ளும் நோக்கில் கொழும்பு பல்கலைக்கழகத்திலும் நியுயோர்க் பல்கலைக்கழகத்தின் கல்லடின் கலாசாலையிலும் (Gallatin School) மனித உரிமைச் சட்டத்தைக் கற்கும் மாணவர் குழாம் ஒன்று பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்புக்கு விஜயம் செய்தது. அரசியலில் பெண்கள், தொழிற்சங்கங்களில் பெண்கள், புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் பெண்களும் ஊடகமும் என்பன இவ்வொன்றுகூடலில் கலந்துரையாடப்பட்ட சில தலைப்புக்களாகும்.

Related: