Vesak Banner Campaign

சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான இலங்கைப் பெண்கள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரக் கோரி 2006 மே வெசாக் மாதத்தில் ஒரு பதாதை பிரச்சாரத்தை மேற்கொண்டனர். எல்லா சுலோகங்களும் புத்தசமயம் தொடர்பானதாக இருந்ததுடன் 36 பதாதைகள் சிங்களத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தன. இவ் பதாதைகளானவை பந்தல்கள் (வெசாக்கிற்கு பயன்படுத்தப்படும் ஒளியூட்டிய கட்டமைப்புக்கள்) பிரபல்யமான கோயில்கள் மற்றும் கொழும்பு அநுராதபுரம், கட்டுநாயக்க, பொலநறுவை மற்றும் காலியிலுள்ள பெரிய சுற்றுவட்டங்கள் என்பவற்றில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.